Advertisement

📘 பொருளடக்கம் (Click to Expand)
P.no Contents
அபங்கு சந்தை
1பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்
2முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை
3முதன்மை சந்தையில் செயல்படும் முக்கிய அமைப்புகள்
4பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய ஆய்வுகள்
5பங்கு சந்தையில் விலையை தீர்மானிக்கும் காரணிகள்
6பங்கு சந்தை வர்த்தகத்திலுள்ள கட்டணங்கள்
7பங்கு சந்தை மூலதனம் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
8பங்கு சந்தை வரலாறு - ஆரம்பம் முதல் அல்காரிதம் வரை
9கைபேசி வழியாக பங்கு சந்தை வர்த்தகம்
10OTC - பங்கு சந்தைக்கு வெளியே வர்த்தமாகும் பங்குகள்
ஆதங்கம்
11மின்னணு தங்கம் - 4 முக்கிய வகைகள் மற்றும் தளங்கள்
12மின்னணு தங்கம் - நன்மைகள் மற்றும் தீமைகள்
இமியூச்சுவல் ஃபண்ட்
13மியூச்சுவல் ஃபண்ட் - அடிப்படை மற்றும் வகைகள்
14மியூச்சுவல் ஃபண்ட் - கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்
15மியூச்சுவல் ஃபண்ட் - ஆரம்பம் முதல் ஆன்லைன் வரை
ஈகடன் பத்திரம்
16கடன் பத்திரங்கள் - அடிப்படை மற்றும் வகைகள்
உகிரிப்டோகரன்சி
17சந்தை மதிப்பில் முதல் 5 எண்ம நாணயங்கள்
18கிரிப்டோ வலைதளம் - Faucetpay வாலட் அறிமுகம்
19கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்
ஊமுதலீடு
20பங்கு சந்தை முதலீடு - புதிய முதலீட்டாளர்களுக்கானது
21முதலீட்டு வகைகள் - சிறந்த 20+ வாய்ப்புகள்
22சிறந்த குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டு திட்டங்கள்
23முதலீட்டு குறிக்கோள் - பிரிவுகள் மற்றும் SMART விதி
எடிமேட்
24டிமேட் கணக்கு - முக்கியத்துவம் மற்றும் தொடங்குதல்
ஏடிவிடண்ட்
25பங்கு சந்தை டிவிடண்ட் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
26டிவிடண்ட் பெறும் முறைகள் - பழைய மற்றும் நவீன முறை
ஐமூலதன ஆதாய வரி
27மூலதன ஆதாய வரி - வகைகள் மற்றும் தாக்கம்
ஒநிதி உயர்வு
28நிதி நிலையை மேம்படுத்துதல் & தொடர்ந்து பயணித்தல்

கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்

எண்மநாணய (Cryptocurrency) உலகம் இன்று உலகளவில் மிகப்பெரிய பொருளாதார புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. பிட்காயின் (Bitcoin), எத்ரீயம் (Ethereum) போன்ற எண்முறை (Digital) நாணயங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதால், பலரும் இதில் முதலீடு செய்யவும், இவற்றை சம்பாதிக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், சொந்த பணத்தை முதலீடு செய்யாமல், வலையமைப்பு (Network) மூலம் சிறிய வேலைகளை செய்து இலவசமாக கிரிப்டோகரன்சிகளை பெற விரும்பும் நபர்களுக்கு ஒரு சிறந்த தளமாக விளங்குவதுதான் "Viefaucet".

Viefaucet வலைதளம் என்றால் என்ன? எவ்வாறு செயல்படுகிறது? இதன் மூலம் எவ்வாறு கிரிப்டோகாயின்களை பெறுவது, இதில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன, மற்றும் இது உண்மையிலேயே பாதுகாப்பானதா (Legit or Scam) என்பது குறித்து காண்போம்.



ஃபாசட்.

1. எண்மநாணய குழாய் (Crypto Faucet) என்றால் என்ன?

'ஃபாசெட்' (Faucet) என்ற ஆங்கில வார்த்தைக்கு 'குழாய்' என்று பொருள். ஒரு பழுதடைந்த குழாயிலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழுவதை போல, பயனாளர்களுக்கு மிக சிறிய அளவில் {Satoshi அல்லது மைக்ரோ காயின்கள் -  இவை பொதுவாக புள்ளிக்கு அடுத்து இருக்கும் 8 இலக்கமுறை (Digits) (எ-கா: $0.00567800} இலவசமாக கிரிப்டோகரன்சிகளை வழங்கும் வலைதளங்கள் "கிரிப்டோ ஃபாசெட்டுகள்" என்று அழைக்கப்படுகின்றன.


2010-ஆம் ஆண்டில், கிரிப்டோகரன்சி மற்றும் பிட்காயின் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 'கவின் ஆண்ட்ரெசென்' (Gavin Andresen) என்பவரால் முதல் பிட்காயின் ஃபாசெட் உருவாக்கப்பட்டது. அப்போது பயனர் ஒருமுறை கிளிக் செய்தால் 5 பிட்காயின்கள் வரை இலவசமாக கிடைத்தன. இன்று பிட்காயினின் மதிப்பு பல லட்சங்களை தாண்டிவிட்டதால், ஃபாசெட்டுகளில் வழங்கப்படும் தொகையின் அளவு மிகவும் குறைந்துவிட்டது. இருப்பினும், முதலீடற்ற வருமானத்திற்கு இது ஒரு சிறந்த தொடக்கமாக அமைகிறது.



2. Viefaucet என்றால் என்ன? ஒரு அறிமுகம்

இணையதளங்களில் (Online) விளம்பரங்களை பார்ப்பது, எளிய கணக்குகளை தீர்ப்பது (Captchas), மற்றும் சிறிய பணிகளை செய்வதன் மூலம் இலவசமாக கிரிப்டோகரன்சிகளை பெறுவதற்கான ஒரு பிரபலமான "Get-Paid-To" (GPT) மற்றும் கிரிப்டோ ஃபாசெட் வலைதளமாகும்.


இந்த தளம் கடந்த சில ஆண்டுகளாக உலகெங்கிலும் லட்சக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, எளிய பயனர் இடைமுகம் (User-Friendly Interface), உடனடி பண பரிமாற்றம் (Instant Withdrawal), மற்றும் அதிகப்படியான வருமான வாய்ப்புகள் காரணமாக இது கிரிப்டோ ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



3. Viefaucet-ல் கணக்கு தொடங்குவது எப்படி? (How to Register?)

100% இலவசமாக இதில் இணையலாம். அதற்கான வழிமுறைகள்


  • வலைதளத்திற்கு செல்லுதல்: முதலில் கணினி அல்லது மொபைல் இணைய உலாவியில் (Web Browser) Viefaucet இன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • பதிவு செய்தல் (Register): முகப்பு பக்கத்தில் உள்ள 'Register' அல்லது 'Sign Up' பொத்தானை சொடுக்கவும்.
  • விவரங்களை நிரப்புதல்: மின்னஞ்சல் முகவரி (Email Address), வலுவான கடவுச்சொல் (Password), கடவுச்சொல்லை உறுதிப்படுத்துதல் (Confirm Password).
  • கேப்ட்சா தீர்த்தல் (Captcha Verification): மனிதர்தான் என்பதை உறுதிப்படுத்த 'hCaptcha' அல்லது 'reCAPTCHA' போன்ற எளிய பட புதிர்களை தீர்க்க வேண்டும்.
  • கணக்கை உறுதிப்படுத்துதல்: பதிவு செய்தவுடன், மின்னஞ்சல் முகவரிக்கு உறுதிப்படுத்தல் இணைப்பு (Verification Link) அனுப்பப்படும். அதை சரி பார்த்து கிளிக் செய்து கணக்கை செயல்படுத்த வேண்டும்.

முக்கிய குறிப்பு: ஒரு நபர் ஒரு கணக்கு (One Account Per Person/IP) மட்டுமே தொடங்க வேண்டும். VPN அல்லது Proxy போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் (Banned).



4. Viefaucet மூலம் வருமானம் ஈட்டும் வழிகள் (Earning Methods)

Viefaucet தளத்தில் பயனர்கள் தங்களின் நேரத்தை செலவழித்து பல்வேறு வழிகளில் நாணயங்களை (Coins) பெறலாம். இந்த நாணயங்களை பின்னர் கிரிப்டோகரன்சிகளாக மாற்றிக்கொள்ளலாம்.


அ) மேனுவல் ஃபாசெட் (Manual Faucet)

இந்த வலைதளத்தின் மிக அடிப்படையான மற்றும் எளிமையான வழியாகும். ஒவ்வொரு குறிப்பிட்ட நிமிடங்களுக்கும் (பொதுவாக 3 முதல் 5 நிமிடங்கள்) ஒருமுறை, பயனர்கள் இந்த தளத்திற்கு வந்து 'Claim' செய்யலாம்.


  • இதற்கு இரண்டு வகையான கேப்ட்சாக்களை தீர்க்க வேண்டும் (ஒன்று எண்கள்/வார்த்தைகளை வரிசைப்படுத்துவது, மற்றொன்று படத்தை தேர்ந்தெடுப்பது).
  • இதை சரியாக செய்து முடித்தவுடன், காயின்கள் உடனடியாக கணக்கில் சேர்க்கப்படும். இதற்கு தினசரி வரம்புகள் (Daily Claims Limits) உண்டு.

ஆ) ஆட்டோ ஃபாசெட் (Auto Faucet)

எந்த வேலையும் செய்யாமல் தானாகவே காயின்கள் சேரும் முறை இதுவாகும். ஆனால், ஆட்டோ ஃபாசெட்டை பயன்படுத்த 'ஆற்றல்' (Energy) தேவைப்படும். இந்த ஆற்றலை 'Shortlinks' போன்ற பணிகளை செய்வதன் மூலம் பெறலாம். போதிய ஆற்றல் இருக்கும் வரை, இந்த தளம் குறிப்பிட்ட நொடிகளுக்கு ஒருமுறை தானாகவே காயின்களை கணக்கில் சேர்த்து கொண்டே இருக்கும்.


இ) பி.டி.சி விளம்பரங்கள் (PTC Ads - Paid To Click)

விளம்பரங்களை பார்ப்பதன் மூலம் காயின்களை சேர்க்கும் முறை. இதில் பல்வேறு விளம்பரதாரர்களின் இணைய பக்கங்களின் பட்டியல்கள் இருக்கும்.


  • ஒவ்வொரு விளம்பரத்தின் அருகிலும் அது எவ்வளவு வினாடிகள் ஓடும் மற்றும் அதற்கு எவ்வளவு காயின்கள் வழங்கப்படும் என்ற விவரம் இருக்கும்.
  • பொதுவாக 5 வினாடிகள் முதல் 30 வினாடிகள் வரை அந்த பக்கத்தில் காத்திருக்க வேண்டும்.
  • நேரம் முடிந்ததும் ஒரு சிறிய கேப்ட்சாவை தீர்த்தால், காயின்கள் கணக்கில் சேரும்.

ஈ) ஷார்ட்லிங்க்ஸ் (Shortlinks)

மற்ற வழிகளை விட இதில் சற்று அதிக காயின்களை பெறலாம், ஆனால் இதற்கு சற்று பொறுமை தேவை. இதில் வழங்கப்பட்டுள்ள சுருக்கப்பட்ட இணைப்புகளை (Shortened Links) கிளிக் செய்து, அதில் வரும் தேவையற்ற விளம்பரங்களை தவிர்த்து, இறுதி பக்கத்தை அடைய வேண்டும். இதில் பல பாப்-அப் (Pop-up) விளம்பரங்கள் தோன்றும் என்பதால், கவனமாக கையாள வேண்டும். இதை முடிக்கும்போது காயின்களுடன் சேர்த்து ஆட்டோ ஃபாசெட்டிற்கான 'ஆற்றல்' கிடைக்கும்.


உ) ஆஃபர்வால்ஸ் (Offerwalls)

CPX Research, Monlix, TimeWall போன்ற உலகத்தரம் வாய்ந்த விளம்பர நிறுவனங்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பின்வரும் பணிகளை செய்து பெரிய அளவில் காயின்களை பெறலாம்:


  • ஆன்லைன் கருத்துக்கணிப்புகள் (Surveys): கருத்துக்களை பகிர்வதன் மூலம்.
  • செயலிகளை பதிவிறக்குதல் (App Installs): குறிப்பிட்ட மொபைல் கேம்கள் அல்லது செயலிகளை நிறுவி, அதில் குறிப்பிட்ட நிலையை அடைவதன் மூலம்.
  • காணொளிகளை பார்த்தல் (Watch Videos): விளம்பர காணொளிகளை பார்ப்பதன் மூலம்.

ஊ) தினசரி சவால்கள் மற்றும் சாதனைகள் (Daily Challenges & Achievements)

தளத்தில் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்களோ, அவ்வளவு கூடுதல் போனஸ் கிடைக்கும். உதாரணமாக, "இன்று 10 ஃபாசெட் கிளைம்களை முடித்தால் 100 காயின்கள் போனஸ்", "5 PTC விளம்பரங்களை பார்த்தால் கூடுதல் ஆற்றல்" போன்ற தினசரி இலக்குகள் (Achievements) இருக்கும். இவற்றை அடையும் போது கூடுதல் வெகுமதிகளை பெற்று கொள்ளலாம்.


எ) பரிந்துரை திட்டம் (Referral Program)

தனிப்பட்ட பரிந்துரை இணைப்பு (Referral Link) மூலம் நபர்களை இந்த தளத்தில் இணைய செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதற்கும் வருமானம் பெறலாம். ஒரு குறிப்பிட்ட சதவீத கமிஷன் (பொதுவாக 10% முதல் 25% வரை) கிடைக்கும். இது செயலில்லா வருமானத்திற்கு (Passive Income) பெரிதும் உதவும்.



5. ஆதரிக்கப்படும் கிரிப்டோகரன்சிகள் மற்றும் கட்டண முறைகள்

நாணயங்களை நேரடியாக பின்வரும் முன்னணி கிரிப்டோகரன்சிகளாக மாற்றிக்கொள்ளலாம்:


  • பிட்காயின் (Bitcoin - BTC)
  • லைட்காயின் (Litecoin - LTC)
  • டிரான் (Tron - TRX)
  • சொலானா (Solana - SOL)
  • டோஜ்காயின் (Dogecoin - DOGE)
  • சிபா இனு (Shiba Inu - SHIB)
  • பினான்ஸ் காயின் (Binance Coin - BNB)
  • டெதர் (Tether - USDT)
  • பெபி (PEPE)
  • வ்லோகி (FLOKI)
  • ரிப்பிள் (Ripple - XRP)

பண பரிமாற்ற முறைகள் (Withdrawal Methods)

இந்த தளம் பயனர்களுக்கு பணத்தை வழங்குவதற்கு பல இடைநிலை வாலெட்களை (Micro Wallets) பயன்படுத்துகிறது.


வாலெட் பெயர் (Wallet Name)

குறைந்தபட்ச வித்ராயல் (Min Withdrawal)

கட்டணம் (Fees)

பரிமாற்ற வேகம் (Speed)

FaucetPay

மிக குறைவு (0.001$)

இல்லை (0%)

உடனடி (Instant)

Cwallet

மிக குறைவு (0.001$)

இல்லை (0%)

உடனடி (Instant)

Direct Wallet (Binance/Trust Wallet)

அதிகம்

நெட்வொர்க் கட்டணம் உண்டு

24 மணிநேரம் வரை

பெரும்பாலான பயனர்கள் FaucetPay வாலெட்டையே பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில், இதில் மிக குறைந்த காயின்கள் இருந்தாலே உடனடியாக (Instant) காயின்களை வெளியே (ஃபாசட் வலைதளத்தில் இருந்து) எடுத்து கொள்ள முடியும்.


6. Viefaucet தளத்தின் நன்மைகள் (Pros)

  • முதலீடு தேவையில்லை: ஒரு பைசா கூட முதலீடு செய்யாமல் கிரிப்டோ உலகிற்குள் நுழைய இது ஒரு சிறந்த தளம்.
  • எளிமையான பயனர் இடைமுகம்: மொபைல் மற்றும் கணினி இரண்டிலும் எளிதாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • உடனடி பணம் (Instant Payout): வித்ரா கொடுத்த சில நொடிகளிலேயே FaucetPay வாலெட்டிற்கு பணம் வந்துவிடுகிறது.
  • குறைந்தபட்ச வரம்பு (Low Minimum Withdrawal): மற்ற தளங்களை போல பெரிய தொகை சேரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
  • தினசரி லெவல் போனஸ் (Level Bonus): தொடர்ந்து பயன்படுத்தும்போது கணக்கின் 'Level' உயரும். லெவல் உயர உயர, ஃபாசெட்டில் பெறும் காயின்களின் அளவும் போனஸாக அதிகரிக்கும்.


7. Viefaucet தளத்தின் தீமைகள் மற்றும் சவால்கள் (Cons)

  • குறைந்த வருமானம்: பகுதி நேர பொழுதுபோக்கு போன்றதே தவிர, இதன் மூலம் பகுதி நேர வேலைக்கு நிகரான பெரிய தொகையையோ அல்லது முழுநேர வருமானத்தையோ ஈட்ட முடியாது.
  • அதிகப்படியான விளம்பரங்கள் மற்றும் பாப்-அப்கள்: ஒவ்வொரு முறை கிளிக் செய்யும் போதும் புதிய விளம்பர பக்கங்கள் (Pop-ups) திறந்துகொண்டே இருக்கும். இது சில நேரங்களில் எரிச்சலூட்டுவதாக அமையலாம்.
  • பாதுகாப்பு அபாயங்கள் (Malware Risks): ஷார்ட்லிங்குகளில் வரும் சில விளம்பரங்கள் தீம்பொருட்களை (Malware/Viruses) கொண்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே, முறையான Antivirus அல்லது Ad-blocker (தள விதிமுறைகளுக்கு உட்பட்டு) பயன்படுத்துவது நல்லது.
  • நேர விரயம்: சில விளம்பரங்கள் மற்றும் பணிகளுக்கு வழங்கப்படும் காயின்களின் மதிப்பு, நாம் அதற்கு செலவிடும் நேரத்தோடு ஒப்பிடும்போது மிக குறைவாக இருக்கும்.


8. Viefaucet உண்மையானதா அல்லது ஏமாற்று வேலையா? (Legit or Scam?)

ஆன்லைன் தளங்களை பொறுத்தவரை இந்த கேள்வி மிகவும் முக்கியமானது. தற்போதைய நிலவரப்படி, Viefaucet ஒரு 100% உண்மையான (Legit) மற்றும் முறையாக பணம் செலுத்தும் ஒரு தளமாகும்.

இதற்கு பின்வரும் காரணங்களை சான்றாக கூறலாம்:


  • பயனர் மதிப்புரைகள் (Trustpilot Reviews): Trustpilot போன்ற முன்னணி தீயவலைதளமதிப்பீட்டு இணையதளங்களில் இந்த தளம் 4 நட்சத்திரங்களுக்கும் மேலாக பெற்று நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
  • வித்ராயல் சான்றுகள் (Payment Proofs): தினசரி ஆயிரக்கணக்கான பயனர்கள் இதிலிருந்து பணம் எடுப்பதற்கான சான்றுகள் இணையத்தில் கிடைக்கின்றன.
  • நிலைத்தன்மை: பல ஃபாசெட் தளங்கள் சில மாதங்களில் மூடப்பட்டுவிடும். ஆனால், Viefaucet பல வருடங்களாக தொடர்ந்து இயங்கி வருகிறது.

இருப்பினும், இது போன்ற தளங்கள் விளம்பர வருவாயை நம்பியே இயங்குகின்றன. விளம்பரதாரர்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில், எதிர்காலத்தில் இவர்களின் விதிமுறைகள் அல்லது கட்டண விகிதங்கள் மாற வாய்ப்புள்ளது.



9. Viefaucet-ல் வருமானத்தை அதிகரிப்பதற்கான குறிப்புகள் (Tips to Maximize Earnings)

Viefaucet தளத்தில் குறைந்த நேரத்தில் அதிக காயின்களை பெறுவதற்கு, பின்வரும் உத்திகளை கையாளலாம்:


  • தினசரி வருகை (Daily Loyalty): தினமும் தளத்திற்கு சென்று 'Daily Bonus', சவால்களை முடிப்பதன் மூலம் கணக்கின் லெவலை வேகமாக கூட்டலாம்.
  • ஆஃபர்வால்களில் கவனம் செலுத்துதல்: ஃபாசெட் கிளைம்களை விட ஆஃபர்வால்களில் உள்ள எளிய சர்வேக்கள் (Surveys) மூலம் 10 மடங்கு அதிக காயின்களை பெற முடியும்.
  • பரிந்துரை வலையமைப்பை உருவாக்குதல் (Build Referrals): பரிந்துரை இணைப்பை வாட்ஸ்அப், டெலிகிராம், மற்றும் முகநூல் கிரிப்டோ குழுக்களில் பகிர்ந்து, புதிய பயனர்களை சேர்க்கலாம்.
  • கிரிப்டோ சந்தையை கவனித்தல் (Market Timing): கிரிப்டோ சந்தை சரிவில் இருக்கும்போது (Bear Market) ஃபாசெட்டுகளில் அதிக காயின்கள் கிடைக்கும். அப்போது காயின்களை சேர்த்து வைத்து, சந்தை உயரும்போது (Bull Market) விற்றால் அதிக லாபம் கிடைக்கும்.




சட்டை பை (Pocket Money) செலவுகளுக்கும், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை பற்றி படித்து புரிந்துகொள்வதற்கும் ஒரு நல்ல நுழைவுவாயிலாக இருக்கும்.

உதிரியாக இருக்கும் ஓய்வு நேரத்தை பயன்படுத்தி, கவனமாகவும் பாதுகாப்பாகவும் ஆன்லைன் விளம்பரங்களை கையாண்டால், Viefaucet மூலம் நிச்சயமாக ஒரு சிறிய எண்ம சொத்தை (Crypto Assets) உருவாக்க முடியும். எச்சரிக்கையுடனும், ஆர்வத்துடனும் கிரிப்டோ பயணத்தை தொடங்குங்கள்.

கருத்துகள்

டிமேட் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்.

ஆதார் அட்டைPAN அட்டைவங்கி கணக்கு
டிமேட் ஆண்டு பராமரிப்பு கட்டணம்
📱AMC₹300 + GST
நிறுவனம் தரகு கட்டணம் ⬇
Paytm Money ₹10/order
5paisa ₹20/order
Zerodha ₹20/order
Sharekhan 0.30%/order

Advertisement

புத்தகம் விலை ⬇
வாரன் பஃபட் பணக்கடவுள் ₹187
பணம் சில ரகசியங்கள் ₹175
ஷேர் மார்க்கெட்  A to Z ₹200
பங்குச்சந்தை அனாலிசிஸ் ₹248
📢📚⚠️
இங்கு காணப்படும் அனைத்து வலைதள பதிவுகளும் கல்வி/தகவல் நோக்கங்களுக்கானது மட்டுமே.
முதலீட்டு ஆலோசனை அல்ல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை