Advertisement

📘 பொருளடக்கம் (Click to Expand)
P.no Contents
அபங்கு சந்தை
1பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்
2முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை
3முதன்மை சந்தையில் செயல்படும் முக்கிய அமைப்புகள்
4பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய ஆய்வுகள்
5பங்கு சந்தையில் விலையை தீர்மானிக்கும் காரணிகள்
6பங்கு சந்தை வர்த்தகத்திலுள்ள கட்டணங்கள்
7பங்கு சந்தை மூலதனம் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
8பங்கு சந்தை வரலாறு - ஆரம்பம் முதல் அல்காரிதம் வரை
9கைபேசி வழியாக பங்கு சந்தை வர்த்தகம்
10OTC - பங்கு சந்தைக்கு வெளியே வர்த்தமாகும் பங்குகள்
ஆதங்கம்
11மின்னணு தங்கம் - 4 முக்கிய வகைகள் மற்றும் தளங்கள்
12மின்னணு தங்கம் - நன்மைகள் மற்றும் தீமைகள்
இமியூச்சுவல் ஃபண்ட்
13மியூச்சுவல் ஃபண்ட் - அடிப்படை மற்றும் வகைகள்
14மியூச்சுவல் ஃபண்ட் - கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்
15மியூச்சுவல் ஃபண்ட் - ஆரம்பம் முதல் ஆன்லைன் வரை
ஈகடன் பத்திரம்
16கடன் பத்திரங்கள் - அடிப்படை மற்றும் வகைகள்
உகிரிப்டோகரன்சி
17சந்தை மதிப்பில் முதல் 5 எண்ம நாணயங்கள்
18கிரிப்டோ வலைதளம் - Faucetpay வாலட் அறிமுகம்
19கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்
ஊமுதலீடு
20பங்கு சந்தை முதலீடு - புதிய முதலீட்டாளர்களுக்கானது
21முதலீட்டு வகைகள் - சிறந்த 20+ வாய்ப்புகள்
22சிறந்த குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டு திட்டங்கள்
23முதலீட்டு குறிக்கோள் - பிரிவுகள் மற்றும் SMART விதி
எடிமேட்
24டிமேட் கணக்கு - முக்கியத்துவம் மற்றும் தொடங்குதல்
ஏடிவிடண்ட்
25பங்கு சந்தை டிவிடண்ட் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
26டிவிடண்ட் பெறும் முறைகள் - பழைய மற்றும் நவீன முறை
ஐமூலதன ஆதாய வரி
27மூலதன ஆதாய வரி - வகைகள் மற்றும் தாக்கம்
ஒநிதி உயர்வு
28நிதி நிலையை மேம்படுத்துதல் & தொடர்ந்து பயணித்தல்

டிமேட் கணக்கு - முக்கியத்துவம் மற்றும் தொடங்குதல்

இன்றைய பொருளாதார சூழலில், சேமிப்பை தாண்டி முதலீடு செய்வது அத்தியாவசிய தேவையாகிவிட்டது. பணவீக்கத்தை தாண்டி லாபம் ஈட்டவும், நீண்டகால அடிப்படையில் செல்வத்தை உருவாக்கவும் பங்கு சந்தை (Stock Market) சிறந்த வழியாகும்.

இந்த சந்தையில் நுழைய அடிப்படை தேவையான 'டிமேட் கணக்கு' (Demat Account) மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து காண்போம்.



கணினி மேல் நோக்கியஃகுறியீடு மற்றும் பாதுகாப்பு

பங்கு சந்தை என்றால் என்ன?

பங்கு சந்தை என்பது நிறுவனங்களின் பங்குகளை (Shares) மக்கள் வாங்கும் மற்றும் விற்கும் ஒரு பொதுவான மேடையாகும். நிறுவனம் தனது வணிகத்தை விரிவுபடுத்த மூலதனம் தேவைப்படும்போது, தனது சொத்துக்களை பங்குகளாக வெளியிட்டு நிதி திரட்டுகிறது. அந்த பங்குகளை வாங்கும் தனிநபர், அந்த நிறுவனத்தின் ஒரு சிறு பகுதிக்கு உரிமையாளராகிறார்.


  • முதலீட்டாளர்: நீண்ட கால நோக்கில் பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்.
  • வியாபாரி (Trader): குறுகிய காலத்தில் பங்குகளை வாங்கி விற்று லாபம் பார்ப்பவர்.

சந்தையில் முதலீடு செய்ய பின்வரும் இரண்டு கணக்குகளும் மிகவும் அவசியம்


1. வர்த்தக கணக்கு (Trading Account) 

வாங்கி, விற்க பயன்படுத்தப்படும் ஒரு தளம். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க கட்டளை கொடுக்கும்போது, அது இந்த வர்த்தக கணக்கின் மூலமாகவே செயல்படுத்தப்படும்.


2. டிமேட் கணக்கு என்றால் என்ன (What is Demat Account)?

முன்பெல்லாம் பங்குகள் காகித வடிவில் (Physical Certificates) இருந்தன. அதை கையாள்வது கடினமாகவும், களவு அபாயம் நிறைந்ததாகவும் இருந்தது. இதனை மாற்ற, 'டிமெட்டீரியலைசேசன்' (Dematerialization) என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

டிமேட் என்பது பங்குகளை மின்னணு வடிவில் (Electronic Form) சேமித்து வைக்கும் ஒரு வங்கி கணக்கை போன்றது. வாங்கும் பங்குகள் இந்த கணக்கில் தான் பாதுகாப்பாக இருக்கும்.


  • DP (Depository Participant): டிமேட் கணக்கை நிர்வகிக்கும் இடைத்தரகர் (எ.கா: Zerodha, Upstox, Groww, ICICI Direct).
  • Depository: பங்குகள் அனைத்தும் மின்னணு முறையில் பாதுகாக்கும் மையங்கள் (NSDL மற்றும் CDSL). 


3. டிமேட் கணக்கின் முக்கியத்துவம்

  • பாதுகாப்பு: பங்குகள் காகித வடிவில் இல்லாததால், கிழிந்து போவதோ அல்லது தொலைந்து போவதோ இல்லை.
  • வேகம்: பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் பரிவர்த்தனை மிக விரைவாக நடக்கும்.
  • செலவு குறைவு: காகித வடிவிலான பங்குகளை பராமரிக்க ஆகும் செலவுகள் {முத்திரை கட்டணம் (Stamp Duty), நிர்வாக கட்டணங்கள் (Adminisrative Fees) போன்றவை} தவிர்க்கப்படுகின்றன.
  • பங்கு ஈவுத்தொகை (Dividend): நிறுவனங்கள் வழங்கும் லாப ஈவுத்தொகை நேரடியாக வங்கி கணக்கிற்கு வந்து சேரும்.


4. டிமேட் கணக்கை தொடங்க தேவையான ஆவணங்கள்

கீழே உள்ள ஆவணங்கள் கட்டாயம் தேவை:


  • பான் கார்டு (PAN Card): இது மிக முக்கியமான ஆவணம். பங்கு சந்தை பரிவர்த்தனைகளுக்கு இது கட்டாயம்.
  • ஆதார் கார்டு (Aadhaar Card): கே.ஒய்.சி (KYC) சரிபார்ப்பிற்கு தேவை.
  • வங்கி கணக்கு விவரங்கள்: வங்கி கணக்கின் காசோலை (Cancelled Cheque) அல்லது வங்கி கணக்கு புத்தகம்.
  • புகைப்படம்: ஆன்லைன் செயலி மூலமாகவே செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம்.
  • வருமான சான்று (தேவைப்பட்டால்): 'எஃப் அண்ட் ஓ' (F&O) எனப்படும் டெரிவேட்டிவ் வர்த்தகம் செய்ய விரும்பினால் மட்டும் இது தேவைப்படும். 


5. டிமேட் கணக்கு தொடங்கும் செயல்முறை

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால், 10 நிமிடங்களில் கணக்கை தொடங்கலாம்:

 

  • தரகு நிறுவனத்தை தேர்வு செய்தல்: நம்பகமான தரகரை தேர்ந்தெடுப்பது (கட்டணம் மற்றும் செயலியின் எளிமையை பொறுத்து).
  • பதிவு செய்தல்: இணையதளம் அல்லது செயலியில் கைபேசி எண்ணை பதிவு செய்வது.
  • கே.ஒய்.சி (KYC): ஆதார் மற்றும் பான் அட்டை விவரங்களுடன் கூடிய, ஆதார் லிங்க் செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP சமர்பித்தல்.
  • சரிபார்ப்பு: ஆவணங்களை பதிவேற்றம் செய்தபின் பெயர், மற்ற விவரங்களை சரிபார்த்தல்.
  • செயல்படுத்துதல்: 24 முதல் 48 மணி நேரத்திற்குள் கணக்கு செயல்படுத்தப்படும்.


6. டிமேட் கணக்கில் உள்ள கட்டணங்கள்

சில கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன:


  • கணக்கு பராமரிப்பு கட்டணம் (AMC): வருடம் ஒருமுறை வசூலிக்கப்படும் (சில நிறுவனங்கள் இதை இலவசமாக வழங்குகின்றன).
  • தரகு கட்டணம் (Brokerage): பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் ஒரு சிறிய சதவீதத்தை தரகர் கட்டணமாக பெறுவார்.
  • DP கட்டணங்கள் (Depository Participant Charges): நீங்கள் வாங்கிய பங்குகளை விற்கும் போது (Delivery Sale), ஒவ்வொரு நிறுவனத்தின் பங்கிற்கும் தலா ₹13.50 என டெபாசிட்டரி (CDSL/NSDL) வசூலிக்கும்.
  • ஆட்டோ ஸ்கொயர்-ஆஃப் கட்டணங்கள் (Auto Square-off Charges): இன்ட்ராடே (Intraday) வர்த்தகத்தில் நீங்கள் வாங்கிய பங்கை மாலை 3:15 மணிக்குள் விற்காவிட்டால், சிஸ்டம் தானாகவே அதை விற்றுவிடும். அதற்கு அபராதமாக ஒரு வர்த்தகத்திற்கு ₹50 வரை வசூலிப்பார்கள்
  • வரி: அரசு விதிக்கும் சேவை மற்றும் சரக்கு வரி (GST), பரிவர்த்தனை வரி (STT) ஆகியவை உண்டு.


7. கவனத்தில் கொள்ள வேண்டியவை

  • திறனை மேம்படுத்துதல்: பங்கு சந்தை பற்றி முழுமையாக புரிந்து கொள்ளாமல் பணத்தை முதலீடு செய்யாதீர்.
  • ஆய்வு (Analysis): ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும் முன், அதன் நிதிநிலை அறிக்கை மற்றும் வளர்ச்சி பற்றிய தரவுகளை சேகரித்தல்.
  • நீண்ட கால முதலீடு: குறுகிய கால லாபத்தை விட, நீண்ட கால முதலீடே அதிக செல்வத்தை உருவாக்கும் (Power of Compounding).
  • அவசர பணத்தை முதலீடு செய்யாதீர்: இழப்பு ஏற்பட்டாலும் பாதிக்காத உபரி பணத்தை மட்டுமே முதலீட்டிற்க்கு பயன்படுத்துவது. 


டிமேட் கணக்கு என்பது நிதி சுதந்திரத்தை நோக்கிய முதல் படி. முறையான திட்டமிடல் மற்றும் சரியான புரிதலுடன் முதலீடு செய்யும் போது, பங்கு சந்தை என்பது ஒரு சிறந்த வருமான வாய்ப்பாகும். திறன், தரவுகள், பொறுமை இவற்றின் அடிப்படையில் முதலீடு செய்பவர்களுக்கு பங்கு சந்தை எப்போதும் கை கொடுக்கும்.


நீண்ட கால முதலீடு (Delivery) செய்ய போகிறீர்களா அல்லது தினமும் வர்த்தகம் (Intraday) செய்ய போகிறீர்களா என்பதை பொறுத்து சிறந்த பங்கு தரகு நிறுவனத்தை தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும்.

கருத்துகள்

டிமேட் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்.

ஆதார் அட்டைPAN அட்டைவங்கி கணக்கு
டிமேட் ஆண்டு பராமரிப்பு கட்டணம்
📱AMC₹300 + GST
நிறுவனம் தரகு கட்டணம் ⬇
Paytm Money ₹10/order
5paisa ₹20/order
Zerodha ₹20/order
Sharekhan 0.30%/order

Advertisement

புத்தகம் விலை ⬇
வாரன் பஃபட் பணக்கடவுள் ₹187
பணம் சில ரகசியங்கள் ₹175
ஷேர் மார்க்கெட்  A to Z ₹200
பங்குச்சந்தை அனாலிசிஸ் ₹248
📢📚⚠️
இங்கு காணப்படும் அனைத்து வலைதள பதிவுகளும் கல்வி/தகவல் நோக்கங்களுக்கானது மட்டுமே.
முதலீட்டு ஆலோசனை அல்ல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை

கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்