பங்கு சந்தை வர்த்தகத்திலுள்ள கட்டணங்கள்
பங்கு சந்தையில் முதலீடு செய்வது இன்று பலரது விருப்பமாக மாறியுள்ளது. ஆனால், நாம் லாபம் ஈட்டுவதற்கு முன்பே, நமது முதலீட்டில் ஒரு பகுதியை 'கட்டணங்களாக' (Charges) செலுத்த வேண்டியிருக்கும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். தரகு நிறுவனங்கள் (Stock Brokers) வழங்கும் சேவைகளுக்காக அவர்கள் சில தொகையை வசூலிக்கிறார்கள்.
பங்கு சந்தை தரகு நிறுவனங்கள்
1. தரகு நிறுவனங்களின் வகைகள்
இந்தியாவில் உள்ள இரண்டு முக்கிய தரகு நிறுவன வகைகள்:
முழு சேவை தரகர்கள் (Full-Service Brokers): இவர்கள் முதலீட்டு ஆலோசனைகள், ஆராய்ச்சி அறிக்கைகள், தனிப்பட்ட மேலாளர்களை வழங்குகிறார்கள். இதனால் இவர்களது கட்டண முறை சற்று அதிகமாக இருக்கிறது (எ.கா: ICICI Direct, HDFC Securities).
தள்ளுபடி தரகர்கள் (Discount Brokers): ஒரு தளத்தை (Platform) மட்டுமே வழங்குவார்கள். ஆலோசனைகள் வழங்குவதில்லை. இதனால் இவர்களது கட்டண முறை குறைவாக உள்ளது (எ.கா: Zerodha, Groww, Upstox).
2. கணக்கு தொடங்குதல் மற்றும் பராமரிப்பு
முதலீட்டை தொடங்கும் போதே சந்திக்க நேரிடும்.
கணக்கு தொடக்க கட்டணம் (Account Opening Charges): டிமேட் (Demat) மற்றும் வர்த்தக கணக்கை ஆரம்பிக்க ஒருமுறை வசூலிக்கப்படும். தற்போது பல நிறுவனங்கள் இதை இலவசமாகவே வழங்குகின்றன.
ஆண்டு பராமரிப்பு கட்டணம் (AMC - Annual Maintenance Charges): கணக்கை செயல்பாட்டில் வைத்திருக்க ஆண்டுதோறும் வசூலிக்கப்படும் தொகை. இது பொதுவாக ₹300 முதல் ₹500 வரை இருக்கும். சில நிறுவனங்கள் முதல் ஆண்டு இலவசமாக வழங்குகின்றன.
3. வர்த்தக கட்டண விகிதங்கள் (Trading Brokerage Ratio)
முதலீட்டாளர் ஒவ்வொரு முறையும் பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் முதலீட்டு தொகைக்கு ஏற்றவாரு மாற்றமடையும். இது நீங்கள் செய்யும் வர்த்தக வகை, தரகு நிறுவனத்தை பொறுத்து மாறுபடும்.
அ) பங்கு விநியோகம் (Equity Delivery)
பங்குகளை வாங்கி, அன்றே விற்காமல் சில நாட்கள் அல்லது ஆண்டுகள் வைத்திருந்தால் அது 'டெலிவரி' எனப்படும்.
தள்ளுபடி தரகர்கள்: பொதுவாக இதற்கு ₹0 (இலவசம்) வசூலிக்கிறார்கள்.பிற்காலத்தில் குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கலாம்.
முழு சேவை தரகர்கள்: பரிவர்த்தனை மதிப்பில் 0.1% முதல் 0.5% வரை பெறுகிறார்கள்.
ஆ) தினசரி மற்றும் எதிர்கால விருப்பம் (Intraday and F&O)
ஒரே நாளில் பங்குகளை வாங்கி விற்பது (Intraday) அல்லது எதிர்கால வர்த்தகம் (Futures & Options) செய்வது.
கட்டணம்: பொதுவாக ஒரு ஆர்டருக்கு அதிகபட்சம் ₹20 அல்லது வர்த்தக மதிப்பில் 0.03% (எது குறைவோ அது).
4. அரசு மற்றும் இதர சட்டரீதியான கட்டண விகிதங்கள்
தரகு நிறுவனங்களை தவிர, அரசுக்கு செலுத்த வேண்டிய சில கட்டண விகிதங்கள் உள்ளன. இவை அனைத்து தரகர்களுக்கும் பொதுவானவை.
| கட்டணத்தின் பெயர் | விளக்கம் |
| STT (Securities Transaction Tax) | பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் விதிக்கப்படும் வரி. இது டெலிவரிக்கு அதிகம் (0.1%). |
| பரிவர்த்தனை கட்டணம் (Exchange Transaction Charges) | NSE அல்லது BSE பங்கு சந்தை பரிமாற்ற சேவைகளுக்கானது.(0.003% முதல் 0.035% வரை) |
| GST (சரக்கு மற்றும் சேவை வரி) | தரகு மற்றும் பரிமாற்ற கட்டணத்தின் மீது விதிக்கப்படும் வரி (18%). |
| SEBI கட்டணம் | இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) வசூலிக்கும் மிக சிறிய கட்டணம்.(0.0001%) |
| முத்திரை கட்டணம் (Stamp Duty) | மாநில அரசுகளால் விதிக்கப்படும் வரி. இது பங்குகளை வாங்கும்போது மட்டும் வசூலிக்கப்படும்.(0.015%) |
| கட்டணம் (Charge) | Equity Delivery (பங்கு வாங்குதல்/விற்றல்) | Equity Intraday (ஒரே நாளில் விற்றல்) | F&O (Futures & Options) |
| STT | 0.1% (வாங்கும்போதும் விற்கும்போதும்) | 0.025% (விற்கும்போது மட்டும்) | Futures: 0.05% / Options: 0.15% (விற்கும்போது) |
| Stamp Duty | 0.015% (வாங்கும்போது மட்டும்) | 0.003% (வாங்கும்போது மட்டும்) | Futures: 0.002% / Options: 0.003% |
| Exchange Charges | ~ 0.00297% | ~ 0.00297% | சந்தையை பொறுத்து மாறும் (NSE/BSE) |
| SEBI Fees | ₹10 / ஒரு கோடிக்கு | ₹10 / ஒரு கோடிக்கு | ₹10 / ஒரு கோடிக்கு |
| GST | தரகு + பரிவர்த்தனையில் 18% | அதேபோல் 18% | அதேபோல் 18% |
5. மறைமுக கட்டணங்கள் (Hidden Charges)
பெரும்பாலும் முதலீட்டாளர்கள் கவனிக்க தவறுதல்:
DP கட்டணங்கள் (Depository Participant Charges): விற்கும்போது, டிமேட் கணக்கிலிருந்து பங்குகள் வெளியேறுவதற்காக NSDL அல்லது CDSL வசூலிக்கும். நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளரின் கணக்கில் பராமரிக்க ஆகும் செலவு, ₹13 முதல் ₹20 வரை பிடிக்கப்படுகிறது.
Call & Trade: தொலைபேசி அல்லது கைபேசி மூலம் தொடர்பு கொண்டு வர்த்தகம் செய்ய சொன்னால் கூடுதல் தொகை (₹20 - ₹50) வசூலிக்கப்படும்.
வங்கி பரிவர்த்தனை: வங்கி கணக்கிலிருந்து வர்த்தக கணக்கிற்கு பணம் மாற்றும்போது (Net Banking வழியாக இருந்தால்) பெறப்படும் வங்கி கட்டணம் (UPI இலவசம்).
6. எவ்வாறு குறைப்பது?
சரியான தரகரை தேர்ந்தெடுத்தல்: நீண்ட கால முதலீட்டாளர் என்றால், டெலிவரிக்கு ₹0 வசூலிக்கும் தரகரை தேர்வு செய்தல்.
UPI பயன்பாடு: பண பரிமாற்றத்திற்கு UPI பயன்படுத்துதல்.
ஆலோசனை: ஆலோசனைகளை புறக்கனித்து தள்ளுபடி தரகர்களிடம் செல்வது.
பங்கு சந்தை முதலீடு என்பது பங்கின் விலை உயர்வை மட்டும் சார்ந்தது அல்ல. நாம் செலுத்தும் தரகு மற்றும் இதர தொகை, நமது ஒட்டுமொத்த லாபத்தை நேரடியாக பாதிக்கும். எனவே, ஒரு வர்த்தகத்தை தொடங்கும் முன், அந்த வர்த்தகத்திற்கு கட்டண முறையில் எவ்வளவு செலவு பிடிக்கும் என்பதை தெரிந்துகொண்டு செயல்படுவது சிறந்தது. "குறைவான கட்டணம், அதிக லாபம்" என்பதே பங்கு சந்தையின் தாரக மந்திரம்.
2026-ஆம் ஆண்டு அறிக்கை (Budget) மாற்றங்களுக்கு பிறகு, குறிப்பாக F&O (Futures & Options) பிரிவில் கட்டண வகிதங்கள் அதிகரித்துள்ளன.
கருத்துகள்
கருத்துரையிடுக