Advertisement

📘 பொருளடக்கம் (Click to Expand)
P.no Contents
அபங்கு சந்தை
1பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்
2முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை
3முதன்மை சந்தையில் செயல்படும் முக்கிய அமைப்புகள்
4பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய ஆய்வுகள்
5பங்கு சந்தையில் விலையை தீர்மானிக்கும் காரணிகள்
6பங்கு சந்தை வர்த்தகத்திலுள்ள கட்டணங்கள்
7பங்கு சந்தை மூலதனம் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
8பங்கு சந்தை வரலாறு - ஆரம்பம் முதல் அல்காரிதம் வரை
9கைபேசி வழியாக பங்கு சந்தை வர்த்தகம்
10OTC - பங்கு சந்தைக்கு வெளியே வர்த்தமாகும் பங்குகள்
ஆதங்கம்
11மின்னணு தங்கம் - 4 முக்கிய வகைகள் மற்றும் தளங்கள்
12மின்னணு தங்கம் - நன்மைகள் மற்றும் தீமைகள்
இமியூச்சுவல் ஃபண்ட்
13மியூச்சுவல் ஃபண்ட் - அடிப்படை மற்றும் வகைகள்
14மியூச்சுவல் ஃபண்ட் - கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்
15மியூச்சுவல் ஃபண்ட் - ஆரம்பம் முதல் ஆன்லைன் வரை
ஈகடன் பத்திரம்
16கடன் பத்திரங்கள் - அடிப்படை மற்றும் வகைகள்
உகிரிப்டோகரன்சி
17சந்தை மதிப்பில் முதல் 5 எண்ம நாணயங்கள்
18கிரிப்டோ வலைதளம் - Faucetpay வாலட் அறிமுகம்
19கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்
ஊமுதலீடு
20பங்கு சந்தை முதலீடு - புதிய முதலீட்டாளர்களுக்கானது
21முதலீட்டு வகைகள் - சிறந்த 20+ வாய்ப்புகள்
22சிறந்த குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டு திட்டங்கள்
23முதலீட்டு குறிக்கோள் - பிரிவுகள் மற்றும் SMART விதி
எடிமேட்
24டிமேட் கணக்கு - முக்கியத்துவம் மற்றும் தொடங்குதல்
ஏடிவிடண்ட்
25பங்கு சந்தை டிவிடண்ட் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
26டிவிடண்ட் பெறும் முறைகள் - பழைய மற்றும் நவீன முறை
ஐமூலதன ஆதாய வரி
27மூலதன ஆதாய வரி - வகைகள் மற்றும் தாக்கம்
ஒநிதி உயர்வு
28நிதி நிலையை மேம்படுத்துதல் & தொடர்ந்து பயணித்தல்

மியூச்சுவல் ஃபண்ட் - ஆரம்பம் முதல் ஆன்லைன் வரை

மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) என்பது தனிநபர்களின் சேமிப்பை திரட்டி, பங்கு சந்தை, கடன் பத்திரங்கள் மற்றும் பிற முதலீட்டு சந்தைகளில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்கும் கூட்டு முதலீட்டு திட்டமாகும். இன்று பல லட்சம் மக்களின் நிதி சுதந்திரத்திற்கு ஆதாரமாக விளங்கும் இவற்றின் வரலாறு, நவீன நிதியியல் உலகின் ஒரு வியக்கத்தக்க பயணமாகும்.

காண்போம்.


ஆரம்ப கால நம்பிக்கை மற்றும் நிகழ்கால கூட்டு நிதி.

மியூச்சுவல் ஃபண்டுகளின் தோற்றம்: தொடக்கம்

இதன் அடிப்படை தத்துவம், பல முதலீட்டாளர்களின் பணத்தை ஒன்றாக சேர்த்து, நிபுணர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு பெரிய நிதியத்தை உருவாக்குவதாகும். இதன் வரலாறு 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்குகிறது.


நெதர்லாந்தின் முன்னோடி முயற்சி (1774)


வரலாற்று ஆய்வுகளின்படி, முதல் வடிவம் 1774-ல் நெதர்லாந்தில் உருவானது. 'அப்ராஹாம் வான் கெட்விக்' (Abraham van Ketwich) என்ற வணிகர், முதலீட்டாளர்களை ஒன்றிணைத்து ஒரு நிதியத்தை உருவாக்கினார். பல்வேறு நாடுகளின் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம், ஒரு தனிநபர் சந்திக்கக்கூடிய அபாயத்தை (Risk) குறைப்பதே இதன் நோக்கமாக இருந்தது.


அமெரிக்காவில் மியூச்சுவல் ஃபண்டுகளின் வளர்ச்சி

1924-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 'மாசசூசெட்ஸ் இன்வெஸ்டர்ஸ் டிரஸ்ட்' (Massachusetts Investors Trust) தொடங்கப்பட்டது. இதுதான் இன்று நாம் காணும் நவீன 'ஓபன்-எண்ட்' (Open-end) ஃபண்டுகளின் தொடக்கமாக கருதப்படுகிறது.


  • பொருளாதார நெருக்கடியின் தாக்கம்: 1929-ல் ஏற்பட்ட அமெரிக்க பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு பிறகு, முதலீட்டாளர்கள் பாதுகாப்பை நாடினர். இதனால், 1940-ல் அமெரிக்காவில் 'முதலீட்டு நிறுவன சட்டம்' (Investment Company Act of 1940) இயற்றப்பட்டது. இது முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்க வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டுவந்தது.



இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட்

இந்தியாவில் இதன் வரலாறு நான்கு முக்கிய கட்டங்களாக பிரிக்கப்படுகிறது.


1. முதல் கட்டம்: பொதுத்துறை ஆதிக்கம் (1963 - 1987)

1963-ல் தொடங்கியது. இந்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டு முயற்சியால் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (UTI) நிறுவப்பட்டது. 'யுஎஸ்-64' (US-64) திட்டம் அப்போது பெரும் வரவேற்பை பெற்றது. பல தசாப்தங்களாக UTI மட்டுமே இந்திய சந்தையில் இத்துறையில் ஏகபோக உரிமையை கொண்டிருந்தது.


2. இரண்டாம் கட்டம்: பொதுத்துறை வங்கிகளின் வருகை (1987 - 1993)

1987-ல் அரசு விதித்த தளர்வுகளால், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளும் ஆயுள் காப்பீட்டு கழகமும் (LIC) இத்துறையில் நிறுவனங்களை தொடங்கின. இது சந்தையில் போட்டியை தொடங்கியது.


3. மூன்றாம் கட்டம்: தனியார் துறை மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் நுழைவு (1993 - 1996)

1993-ல் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதே சமயம், SEBI (Securities and Exchange Board of India) மியூச்சுவல் ஃபண்டுகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவெடுத்தது. முதலீட்டாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.


4. நான்காம் கட்டம்: வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கல் (1996 - இன்றுவரை)

1996-ல் SEBI விரிவான ஒழுங்குமுறை விதிகளை வெளியிட்டது. இதன் பிறகுதான் மிகப்பெரிய தொழில்முறை வளர்ச்சியை எட்டியது.

Mutual Fund செயல்பாடுகள், கட்டமைப்பு மற்றும் தேர்வு.


தொழில்நுட்ப புரட்சியும் டிஜிட்டல் மியூச்சுவல் ஃபண்டும்

2010-களுக்கு பிறகு, தொழில்நுட்ப வளர்ச்சி மிகப்பெருமளவில வளர்ச்சியடைந்தது.


  • ஆன்லைன் முதலீடு: காகிதமில்லா (Paperless) முதலீட்டு முறைகள், மொபைல் செயலிகள் மூலம் முதலீடு செய்யும் வசதி ஆகியவை சாமானிய மக்களையும் இதன் பக்கம் ஈர்த்துள்ளது.
  • SIP (Systematic Investment Plan): மாதந்தோறும் ஒரு சிறு தொகையை முதலீடு செய்யும் முறை, நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. 'தொடர் முதலீடு, நீண்டகால வளர்ச்சி' என்ற தாரக மந்திரம் பலரின் நிதி இலக்குகளை அடைய உதவியுள்ளது.


இன்றைய நிலை: சவால்களும் வாய்ப்புகளும்

இன்று இந்தியாவில் இத்துறையின் சொத்து மதிப்பு (AUM) பல லட்சம் கோடிகளை தாண்டியுள்ளது. இருப்பினும், இன்னும் சில சவால்களை சந்தித்து வருகிறது:


  • நிதி விழிப்புணர்வு: கிராமப்புறங்களில் இன்னும் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த புரிதல் குறைவாக உள்ளது.
  • அபாய மேலாண்மை: பங்கு சந்தை ஏற்ற இறக்கங்களை பொறுத்து முதலீடுகளை செய்ய வேண்டியதன் அவசியத்தை முதலீட்டாளர்கள் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும்.


மாற்றங்கள்

முதலீட்டு நோக்கத்தின் அடிப்படையில்

கட்டமைப்பின் அடிப்படையில்

தீர்வு சார்ந்த

மற்றவை

சமபங்கு கூட்டு நிதி (Equity Mutual Fund)

ஓபன் எண்டட் (Open Ended) ஃபண்ட்

ஓய்வூதியம் (Retirement)

குறியீட்டு நிதிகள் (index Funds)

கடன் பத்திர கூட்டு நிதி (Debt Mutual Fund)

குலோசுடு எண்டட் (Closed Ended) ஃபண்ட்

குழந்தைகளின் கல்வி (Children's Education)

பரிமாற்ற வர்த்தக நிதி (Exchange Traded Fund)

சமபங்கு மற்றும் கடன் பத்திரம் இரண்டும் சேர்ந்தவை (Hybrid Mutual Fund)

Interval fund


சமபங்கு இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டம் (Equity Linked Savings Scheme)


சர்வதேச (International), உலகலாவிய (Global), மூலப்பொருட்கள் சார்ந்த (Commodity Focused), நிலம் மற்றும் கட்டிடம் (Real Estate)



இது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனிநபர்களை பங்கெடுக்க வைக்கும் ஒரு ஜனநாயக கருவி. 18-ஆம் நூற்றாண்டு நெதர்லாந்தில் தொடங்கிய இந்த பயணம், இன்று இந்திய குடும்பங்களின் சேமிப்பை நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் பெரும் பாதையாக மாறியுள்ளது. முறையான திட்டமிடல் மற்றும் நீண்டகால நோக்குடன் செயல்படும் முதலீட்டாளர்களுக்கு, மியூச்சுவல் ஃபண்ட் ஒரு சிறந்த செல்வத்தை உருவாக்கும் கருவியாக தொடர்ந்து இருக்கும் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள்

டிமேட் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்.

ஆதார் அட்டைPAN அட்டைவங்கி கணக்கு
டிமேட் ஆண்டு பராமரிப்பு கட்டணம்
📱AMC₹300 + GST
நிறுவனம் தரகு கட்டணம் ⬇
Paytm Money ₹10/order
5paisa ₹20/order
Zerodha ₹20/order
Sharekhan 0.30%/order

Advertisement

புத்தகம் விலை ⬇
வாரன் பஃபட் பணக்கடவுள் ₹187
பணம் சில ரகசியங்கள் ₹175
ஷேர் மார்க்கெட்  A to Z ₹200
பங்குச்சந்தை அனாலிசிஸ் ₹248
📢📚⚠️
இங்கு காணப்படும் அனைத்து வலைதள பதிவுகளும் கல்வி/தகவல் நோக்கங்களுக்கானது மட்டுமே.
முதலீட்டு ஆலோசனை அல்ல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை

கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்