Advertisement

📘 பொருளடக்கம் (Click to Expand)
P.no Contents
அபங்கு சந்தை
1பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்
2முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை
3முதன்மை சந்தையில் செயல்படும் முக்கிய அமைப்புகள்
4பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய ஆய்வுகள்
5பங்கு சந்தையில் விலையை தீர்மானிக்கும் காரணிகள்
6பங்கு சந்தை வர்த்தகத்திலுள்ள கட்டணங்கள்
7பங்கு சந்தை மூலதனம் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
8பங்கு சந்தை வரலாறு - ஆரம்பம் முதல் அல்காரிதம் வரை
9கைபேசி வழியாக பங்கு சந்தை வர்த்தகம்
10OTC - பங்கு சந்தைக்கு வெளியே வர்த்தமாகும் பங்குகள்
ஆதங்கம்
11மின்னணு தங்கம் - 4 முக்கிய வகைகள் மற்றும் தளங்கள்
12மின்னணு தங்கம் - நன்மைகள் மற்றும் தீமைகள்
இமியூச்சுவல் ஃபண்ட்
13மியூச்சுவல் ஃபண்ட் - அடிப்படை மற்றும் வகைகள்
14மியூச்சுவல் ஃபண்ட் - கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்
15மியூச்சுவல் ஃபண்ட் - ஆரம்பம் முதல் ஆன்லைன் வரை
ஈகடன் பத்திரம்
16கடன் பத்திரங்கள் - அடிப்படை மற்றும் வகைகள்
உகிரிப்டோகரன்சி
17சந்தை மதிப்பில் முதல் 5 எண்ம நாணயங்கள்
18கிரிப்டோ வலைதளம் - Faucetpay வாலட் அறிமுகம்
19கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்
ஊமுதலீடு
20பங்கு சந்தை முதலீடு - புதிய முதலீட்டாளர்களுக்கானது
21முதலீட்டு வகைகள் - சிறந்த 20+ வாய்ப்புகள்
22சிறந்த குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டு திட்டங்கள்
23முதலீட்டு குறிக்கோள் - பிரிவுகள் மற்றும் SMART விதி
எடிமேட்
24டிமேட் கணக்கு - முக்கியத்துவம் மற்றும் தொடங்குதல்
ஏடிவிடண்ட்
25பங்கு சந்தை டிவிடண்ட் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
26டிவிடண்ட் பெறும் முறைகள் - பழைய மற்றும் நவீன முறை
ஐமூலதன ஆதாய வரி
27மூலதன ஆதாய வரி - வகைகள் மற்றும் தாக்கம்
ஒநிதி உயர்வு
28நிதி நிலையை மேம்படுத்துதல் & தொடர்ந்து பயணித்தல்

சிறந்த குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டு திட்டங்கள்

நமது எதிர்கால நிதி தேவைகளை பூர்த்தி செய்யவும், பணவீக்கத்தை (Inflation) சமாளிக்கவும் முதலீடு செய்வது மிகவும் அவசியமாகும். இலக்கு என்ன, எத்தனை வருடங்களில் பணம் தேவைப்படும் என்பதை பொறுத்து முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

விரைவாக லாபத்தை அடையும் நோக்கத்தில் மேற்க்கொள்ளும் முதலீட்டை விட ஆய்வு, தரவுகள், கால அடிப்படையிலான முதலீடுகளே பெரும்பாலும் வெற்றி பெறுகின்றன. நிதி இழப்பை குறைத்து லாபத்தை அடைய இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது.


இவற்றை இரண்டு வகையில் பிரிக்கலாம்.

1. குறுகிய கால முதலீடுகள் (Short-Term Investments)

1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை

முக்கிய நோக்கங்கள்:

  • அவசர நிதி (Emergency Fund).

  • அடுத்த சில மாதங்கள் அல்லது வருடங்களில் வரவிருக்கும் செலவுகளை சமாளிப்பது (எ-கா: விடுமுறை பயணம், திருமணச்செலவு, கார் வாங்குவதற்கான முன்பணம்).

சிறப்பம்சங்கள்:

  • குறைந்த ஆபத்து (Low Risk): பாதுகாப்பானது. சந்தை ஏற்ற இறக்கங்கள் இதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

  • எளிதில் பணமாக்கலாம் (High Liquidity): தேவைப்படும் போது எளிதாக பணமாக எடுத்துக்கொள்ளலாம்.

  • மிதமான வருமானம் (Moderate Returns): பாதுகாப்பு அதிகம் என்பதால், வருமானம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும் (பொதுவாக 5% முதல் 7% வரை).

சிறந்த குறுகிய கால முதலீட்டு திட்டங்கள்:

  1. சேமிப்பு கணக்கு (Savings Account): மிக எளிதாக பணத்தை எடுக்கலாம், ஆனால் வட்டி மிக குறைவு.

  2. நிரந்தர வைப்பு நிதி (Fixed Deposit - FD): 7 நாட்கள் முதல் பல வருடங்கள் வரை முதலீடு செய்யலாம். நிலையான வட்டி கிடைக்கும்.

  3. தொடர் வைப்பு நிதி (Recurring Deposit - RD): மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க சிறந்த வழி.

  4. லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகள் (Liquid Mutual Funds): வங்கி கணக்கை விட சற்று அதிக வருமானம் தரக்கூடிய, பாதுகாப்பான மியூச்சுவல் ஃபண்ட் வகை.

  5. அஞ்சலக திட்டங்கள் (Post Office Schemes): 1, 2 அல்லது 3 வருட கால வைப்பு நிதிகள் (Time Deposits).


2. நீண்ட கால முதலீடுகள் (Long-Term Investments)

5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல்.

முக்கிய நோக்கங்கள்:

  • ஓய்வூதிய காலத்திற்கான சேமிப்பு (Retirement Planning).

  • குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணம்.

  • சொந்த வீடு வாங்குதல் அல்லது பெரிய சொத்துக்களை உருவாக்குதல்.

சிறப்பம்சங்கள்:

  • கூட்டு வட்டியின் பலன் (Power of Compounding): இதில் முதலீடு செய்யும் போது, வட்டிக்கு வட்டி கிடைத்து உங்கள் பணம் பன்மடங்கு பெருகும்.

  • அதிக வருமானம் (High Returns): பணவீக்கத்தை (Inflation) விட அதிக வருமானம் ஈட்ட இதுவே சிறந்த வழி.

  • ஆபத்து அதிகம் (High Risk): குறுகிய காலத்தில் சந்தை ஏற்ற இறக்கங்களால் நட்டம் வர வாய்ப்பிருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் (10+ ஆண்டுகள்) ஆபத்து குறைந்து லாபம் அதிகரிக்கும்.

சிறந்த நீண்ட கால முதலீட்டு திட்டங்கள்:

  1. பங்கு சந்தை (Stock Market / Equity): நிறுவனங்களின் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வது. ஆபத்தும், லாபமும் அதிகம்.

  2. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் (Equity Mutual Funds - SIP): பங்கு சந்தையில் தொழில்முறை நிபுணர்கள் மூலம் மாதந்தோறும் (SIP) முதலீடு மேற்கொள்ள சிறந்தது.

  3. பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund - PPF): குறைந்தபட்ச 15 வருட சேமிப்பு (Lock-in) கொண்ட முற்றிலும் பாதுகாப்பான அரசு திட்டம். வரி சலுகையும் உண்டு.

  4. தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS): ஓய்வூதியத்திற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பான திட்டம்.

  5. தங்கம் (Gold): தங்க நகைகளாகவோ, அல்லது சிறந்த முறையில் சாவரின் கோல்டு பாண்டுகளாகவோ (Sovereign Gold Bonds - SGB) முதலீடு செய்யலாம்.

  6. ரியல் எஸ்டேட் (Real Estate): நிலம் அல்லது வீடுகள், வணிக வளாங்களில் முதலீடு செய்வது. நீண்ட காலத்தில் நல்ல மூலதன வளர்ச்சியை தரும்.


முக்கிய வேறுபாடுகள்

பெயர், இடம்குறுகிய காலம்நீண்ட காலம்

கால அளவு

1 முதல் 3 ஆண்டுகள் வரை

5 ஆண்டுகளுக்கும் மேல்

இலக்கு

அவசர செலவுகள், சிறிய இலக்குகள்

திருமணம், கல்வி, ஓய்வூதியம்

ஆபத்து

மிக குறைவு

அதிகம் (ஆனால் காலப்போக்கில் குறையும்)

வருமானம்

குறைவு / மிதமானது

மிக அதிகம்

பணமாக்கும் எளிமை

மிக எளிது (High Liquidity)

சற்று கடினம் (Lock-in period இருக்கலாம்)

வரி சலுகை

பெரும்பாலும் இல்லை

பல திட்டங்களில் வரி விலக்கு உண்டு


எப்படி தேர்ந்தெடுப்பது?

  1. அவசர நிதி (Emergency Fund): அவசர செலவுகளுக்கு FD அல்லது லிக்விட் ஃபண்டுகள்.

  2. 3 வருட இலக்குகள்: RD அல்லது Debt ஃபண்டுகள்.

  3. 10+ வருட இலக்குகள்: பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது PPF.



குறிப்பு:

இன்றைய நவீன உலகில் புதிய முறைகள் எழுச்சி பெறுகின்றன. குறிப்பாக

  1. Digital தங்கம்
  2. கிரிப்டோகரண்சிகள்.
  • இவை மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன.

  • கிரிப்டோகரண்சிகளை வலைதளங்களில் சிறிய வேலைகளை செய்வதன் மூலம் சேகரிக்கலாம். இவற்றை நம்பகமான வலைதளங்களில் அதிக ஆண்டுகள் வைப்பதன் மூலம் சந்தை மதிப்பு உயர வாய்ப்புளள்ளது.

  • இவற்றில் நம்பகமில்லாத (போலியான) வலைதளங்களும் செயல்படுகின்றன. கிரிப்டோகரண்சிகள் மிக அதிக நிதி ஆபத்தை கொண்டது.


முதலீடுகளை ஒரே இடத்தில் இல்லாமல், பிரித்து முதலீடு செய்வது (Diversification) மிகவும் பாதுகாப்பானது.

கருத்துகள்

டிமேட் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்.

ஆதார் அட்டைPAN அட்டைவங்கி கணக்கு
டிமேட் ஆண்டு பராமரிப்பு கட்டணம்
📱AMC₹300 + GST
நிறுவனம் தரகு கட்டணம் ⬇
Paytm Money ₹10/order
5paisa ₹20/order
Zerodha ₹20/order
Sharekhan 0.30%/order

Advertisement

புத்தகம் விலை ⬇
வாரன் பஃபட் பணக்கடவுள் ₹187
பணம் சில ரகசியங்கள் ₹175
ஷேர் மார்க்கெட்  A to Z ₹200
பங்குச்சந்தை அனாலிசிஸ் ₹248
📢📚⚠️
இங்கு காணப்படும் அனைத்து வலைதள பதிவுகளும் கல்வி/தகவல் நோக்கங்களுக்கானது மட்டுமே.
முதலீட்டு ஆலோசனை அல்ல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை

கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்