Advertisement

📘 பொருளடக்கம் (Click to Expand)
P.no Contents
அபங்கு சந்தை
1பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்
2முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை
3முதன்மை சந்தையில் செயல்படும் முக்கிய அமைப்புகள்
4பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய ஆய்வுகள்
5பங்கு சந்தையில் விலையை தீர்மானிக்கும் காரணிகள்
6பங்கு சந்தை வர்த்தகத்திலுள்ள கட்டணங்கள்
7பங்கு சந்தை மூலதனம் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
8பங்கு சந்தை வரலாறு - ஆரம்பம் முதல் அல்காரிதம் வரை
9கைபேசி வழியாக பங்கு சந்தை வர்த்தகம்
10OTC - பங்கு சந்தைக்கு வெளியே வர்த்தமாகும் பங்குகள்
ஆதங்கம்
11மின்னணு தங்கம் - 4 முக்கிய வகைகள் மற்றும் தளங்கள்
12மின்னணு தங்கம் - நன்மைகள் மற்றும் தீமைகள்
இமியூச்சுவல் ஃபண்ட்
13மியூச்சுவல் ஃபண்ட் - அடிப்படை மற்றும் வகைகள்
14மியூச்சுவல் ஃபண்ட் - கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்
15மியூச்சுவல் ஃபண்ட் - ஆரம்பம் முதல் ஆன்லைன் வரை
ஈகடன் பத்திரம்
16கடன் பத்திரங்கள் - அடிப்படை மற்றும் வகைகள்
உகிரிப்டோகரன்சி
17சந்தை மதிப்பில் முதல் 5 எண்ம நாணயங்கள்
18கிரிப்டோ வலைதளம் - Faucetpay வாலட் அறிமுகம்
19கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்
ஊமுதலீடு
20பங்கு சந்தை முதலீடு - புதிய முதலீட்டாளர்களுக்கானது
21முதலீட்டு வகைகள் - சிறந்த 20+ வாய்ப்புகள்
22சிறந்த குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டு திட்டங்கள்
23முதலீட்டு குறிக்கோள் - பிரிவுகள் மற்றும் SMART விதி
எடிமேட்
24டிமேட் கணக்கு - முக்கியத்துவம் மற்றும் தொடங்குதல்
ஏடிவிடண்ட்
25பங்கு சந்தை டிவிடண்ட் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
26டிவிடண்ட் பெறும் முறைகள் - பழைய மற்றும் நவீன முறை
ஐமூலதன ஆதாய வரி
27மூலதன ஆதாய வரி - வகைகள் மற்றும் தாக்கம்
ஒநிதி உயர்வு
28நிதி நிலையை மேம்படுத்துதல் & தொடர்ந்து பயணித்தல்

மூலதன ஆதாய வரி - வகைகள் மற்றும் தாக்கம்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், அரசின் வருவாய் கட்டமைப்பிலும் வரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வரிகளில் பல்வேறு வகைகள் இருந்தாலும், முதலீட்டாளர்கள் மற்றும் சொத்து உரிமையாளர்கள் மத்தியில் எப்போதும் விவாத பொருளாக இருப்பது மூலதன ஆதாய வரியே (Capital Gains Tax).

இது ஒரு நபர் அல்லது நிறுவனம் தான் வாங்கிய சொத்தை (Capital Asset) அதிக விலைக்கு விற்கும்போது கிடைக்கும் லாபத்திற்கு அரசாங்களால் விதிக்கப்படுவது. வருமான வரியிலிருந்து (Income Tax) மாறுபட்டது. 


வகைகள், இந்திய சூழலில் அதன் கணக்கீட்டு முறைகள், வரிவிலக்குகள் மற்றும் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் குறித்து காண்போம்.



இரண்டு வகைகளில் வசூலிக்கப்படுபவை.

1. சொத்து (Asset)

  • அசையா சொத்துக்கள்: நிலம், குடியிருப்பு வீடுகள், வணிக கட்டிடங்கள்.
  • நிதி சொத்துக்கள்: நிறுவனங்களின் பங்குகள் (Shares), கூட்டு நிதிகள் (Mutual Funds), அரசு பத்திரங்கள் (Bonds), கடன்பத்திரங்கள் (Debentures).
  • மதிப்புமிக்க நகரும் சொத்துக்கள்: தங்கம், வெள்ளி, வைரம் போன்ற நகைகள், தொல்பொருட்கள் (Archaeological Collections), வரைபடங்கள், சிற்பங்கள் மற்றும் கலைப்பொருட்கள்.
  • அறிவுசார் சொத்துக்கள்: காப்புரிமை (Patents), வர்த்தக முத்திரை (Trademarks).


2. எவ்வாறு கணக்கிடப்படுகிறது? (How is it Calculated?)


விற்ற விலைக்கும், அதை வாங்கிய விலைக்கும் இடையே உள்ள நேர்மறை வித்தியாசம்.


சூத்திரம்:


மூலதன ஆதாயம்

=

விற்பனை விலை

-

வாங்கிய விலை + விற்பனைக்கான செலவுகள்


இங்கு விற்பனைக்கான செலவுகள் என்பது தரகு பணம் (Brokerage), முத்திரை தாள் கட்டணம் (Stamp Duty) மற்றும் விளம்பர செலவுகள் போன்றவற்றை உள்ளடக்கும்.



3. வகைகள் (Types)

சொத்துக்களை எவ்வளவு காலம் கைவசம் வைத்திருந்து விற்கிறோம் என்பதன் அடிப்படையில் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது:


  • குறுகிய கால மூலதன ஆதாய வரி (Short-Term Capital Gains Tax - STCG)
  • நீண்ட கால மூலதன ஆதாய வரி (Long-Term Capital Gains Tax - LTCG)

இந்த கால அளவு சொத்தின் வகையை பொறுத்து மாறுபடுகிறது. அதனை பின்வரும் அட்டவணையில் விரிவாக காணலாம்:

 

சொத்துகளின் கால அளவு அட்டவணை (2026 ஆம் ஆண்டு நிலவரப்படி)

சொத்தின் வகை

குறுகிய காலம் (STCG)

நீண்ட காலம் (LTCG)

பட்டியலிடப்பட்ட பங்குகள் (Shares) & சமபங்கு கூட்டு நிதிகள் (Equity Mutual Funds)

12 மாதங்களுக்கும் குறைவு

12 மாதங்களுக்கு மேல்

அசையா சொத்துக்கள் (நிலம், வீடு)

24 மாதங்களுக்கும் குறைவு

24 மாதங்களுக்கு மேல்

பட்டியலிடப்படாத பங்குகள் மற்றும் தங்கம்

36 மாதங்களுக்கும் குறைவு

36 மாதங்களுக்கு மேல்

கடன் சார்ந்த கூட்டு நிதிகள் (Debt Mutual Funds)

கால அளவு கிடையாது (தனிநபர் வருமான வரம்பின் கீழ் வரும்)



4. இந்திய நிதிநிலை அறிக்கைகளின்படி வரி விகிதங்கள் (Tax Rates Overview)

முதலீட்டு சூழலை ஊக்குவிக்கும் வகையிலும், அதே நேரத்தில் அரசின் வருவாயை பெருக்கும் வகையிலும் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகின்றன.


அ) ஈக்விட்டி (பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த நிதிகள்)

  • STCG (குறுகிய காலம்): பங்குகளை வாங்கிய 12 மாதங்களுக்குள் விற்று லாபம் ஈட்டினால், அதற்கு 20%.
  • LTCG (நீண்ட காலம்): 12 மாதங்களுக்கு பிறகு விற்று ஈட்டும் லாபத்திற்கு 12.5%. இதில் ஒரு நிதியாண்டில் 1.25 லட்சம் ரூபாய் வரையிலான லாபத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

ஆ) அசையா சொத்துக்கள் (நிலம் மற்றும் கட்டிடம்)

  • STCG: சொத்தை வாங்கிய 24 மாதங்களுக்குள் விற்றால், அந்த லாபம் நபரின் வழக்கமான வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, அவரின் வருமான அடுக்கிற்கேற்ப (Income Tax Slab - 10%, 20% அல்லது 30%) விதிக்கப்படுதல்.
  • LTCG: 24 மாதங்களுக்கு பிறகு விற்கப்படும் சொத்துகளுக்கு குறியீட்டு முறை (Indexation) பலன் இல்லாமல் 12.5%. (சில குறிப்பிட்ட பழைய சொத்துகளுக்கு 20% குறியீட்டு முறை தேர்வு செய்யும் வசதியும் உண்டு).

இ) தங்கம் மற்றும் பிற சொத்துக்கள்

  • STCG: தனிநபரின் வருமான அடுக்கிற்கேற்ப.
  • LTCG: குறியீட்டு முறை இல்லாமல் 12.5%. அல்லது சில குறிப்பிட்ட விதிகளின்படி வசூலிக்கப்படுகிறது.


5. பணவீக்க குறியீட்டு எண் (Cost Inflation Index - CII)

நீண்ட கால சொத்துக்களை விற்கும்போது, பணவீக்கத்தின் தாக்கத்தை குறைப்பதற்காக அரசு பணவீக்க குறியீட்டு எண் (CII) முறையை பயன்படுத்துகிறது.


பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய சொத்தின் விலையை இன்றைய பண மதிப்புக்கு மாற்றுவதே இதன் நோக்கமாகும்.

இதன் மூலம் சொத்தை வாங்கிய அசல் விலை (Cost of Acquisition) தற்போதைய பணவீக்கத்திற்கு ஏற்ப உயர்த்தி காட்டப்படும்.



6. மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு பெறுவது எப்படி? (How to get exemption from capital gains tax?)

சொத்தை விற்று வரும் லாபம் முழுவதையும் வரியாக செலுத்த வேண்டியதில்லை.


அ. குடியிருப்பு வீடு விற்பனை

ஒரு நபர் தனது குடியிருப்பு வீட்டை விற்று லாபம் ஈட்டும்போது, அந்த லாபத்தை கொண்டு மற்றொரு குடியிருப்பு வீட்டை வாங்கினால் வரி விலக்குகள் பெறலாம்.


  • பழைய வீட்டை விற்ற 1 ஆண்டுக்கு முன்போ அல்லது 2 ஆண்டுகளுக்குள்ளோ புதிய வீடு வாங்க வேண்டும்.
  • அல்லது 3 ஆண்டுகளுக்குள் புதிய வீடு கட்ட வேண்டும்.

ஆ. குறிப்பிட்ட பத்திரங்களில் முதலீடு

வீடு அல்லது நிலத்தை விற்று வரும் லாபத்தை, அரசு அங்கீகரித்த உள்கட்டமைப்பு பத்திரங்களில் (RECL, NHAI, PFCL) முதலீடு செய்வதன் மூலம் வரி விலக்கு பெறலாம்.


  • சொத்து விற்ற 6 மாதங்களுக்குள் முதலீடு செய்ய வேண்டும்.
  • அதிகபட்சமாக ஒரு நிதியாண்டில் ₹50 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
  • இப்பத்திரங்களின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

இ. பிற சொத்துக்களை விற்று வீடு வாங்குவது

வீடு அல்லாத பிற சொத்துக்களை (உதாரணமாக: நிலம், தங்கம், பங்குகள்) விற்று வரும் மொத்த தொகையை கொண்டு ஒரு குடியிருப்பு வீட்டை வாங்கினால், இதற்கு வரி விலக்கு கோரலாம்.


ஈ. மூலதன ஆதாய கணக்கு திட்டம் (Capital Gains Account Scheme - CGAS)

சொத்தை விற்ற பிறகு, வருமான வரி தாக்கல் செய்யும் தேதிக்குள் புதிய வீட்டையோ அல்லது பத்திரங்களையோ வாங்க முடியாவிட்டால், அந்த பணத்தை அரசு வங்கிகளில் உள்ள ‘மூலதன ஆதாய கணக்கில்’ தற்காலிகமாக டெபாசிட் செய்து வரி விலக்கு பெறலாம். பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை பயன்படுத்த வேண்டும்.



7. பொருளாதார மூலதன ஆதாய வரியின் தாக்கம் (Economic Impact)

இது நாட்டின் பொருளாதார சுழற்சியை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாகும்.


அ) நேர்மறை தாக்கங்கள்

  • வருவாய் மறுபகிர்வு: செல்வந்தர்கள் மற்றும் பெரிய முதலீட்டாளர்களிடமிருந்து வசூலிக்கும் வரியை, ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு அரசு பயன்படுத்த உதவுகிறது.
  • சமநிலையான முதலீடு: அதிகப்படியான ஊக வணிகத்தை (Speculation) தடுத்து, நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கிறது.

ஆ) எதிர்மறை தாக்கங்கள்

  • முதலீட்டு முடக்கம் (Lock-in Effect): அதிக வரியானது, முதலீட்டாளர்களின் சொத்துக்களின் விற்பனையை குறைக்கும். இது சந்தையில் பணப்புழக்கத்தை பாதிக்கும்.
  • வெளிநாட்டு முதலீடுகள் குறைதல்: பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மூலதன ஆதாய வரி அதிகமாக இருந்தால், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் (FDI) குறைய வாய்ப்புள்ளது.


8. உலகளாவிய ஒப்பீடு (Global Comparison)

உலக நாடுகள் தங்களின் பொருளாதார கொள்கைகளுக்கு ஏற்ப மூலதன ஆதாய வரியை வெவ்வேறு விதமாக நடைமுறைப்படுத்துகின்றன:


  • சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பெல்ஜியம் போன்ற நாடுகளில் நீண்ட கால மூலதன ஆதாய வரி கிடையாது. இது முதலீட்டாளர்களை பெருமளவில் ஈர்க்கிறது.
  • அமெரிக்கா, டென்மார்க், பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் தனிநபரின் ஒட்டுமொத்த வருமானத்தின் அடிப்படையில் மிக அதிக அளவில் மூலதன வரி வசூலிக்கப்படுகிறது.

இந்த உலகளாவிய சூழலில், இந்தியா ஒரு நடுத்தரமான மற்றும் நெகிழ்வான வரி அமைப்பை கொண்டு முதலீடுகளையும் பாதுகாத்து, அரசின் வருவாயையும் நிலைநிறுத்துகிறது.



அரசின் முறையான வரிச்சலுகைகள்  பயன்படுத்துவதன் மூலம், முதலீட்டாளர்கள் தங்களின் வரிச்சுமையை குறைத்து கொள்ள முடியும்.

குறிப்பு: இந்த தகவல் அனைத்தும் வலைப்பக்கம் வெளியிடும் போது இருந்த தரவுகள் ஆகும். அரசின் வரி விகிதங்கள் மற்றும் வரி விலக்குகள் பின்னாளில் மாற்றமடைய வாய்ப்புள்ளது.

கருத்துகள்

டிமேட் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்.

ஆதார் அட்டைPAN அட்டைவங்கி கணக்கு
டிமேட் ஆண்டு பராமரிப்பு கட்டணம்
📱AMC₹300 + GST
நிறுவனம் தரகு கட்டணம் ⬇
Paytm Money ₹10/order
5paisa ₹20/order
Zerodha ₹20/order
Sharekhan 0.30%/order

Advertisement

புத்தகம் விலை ⬇
வாரன் பஃபட் பணக்கடவுள் ₹187
பணம் சில ரகசியங்கள் ₹175
ஷேர் மார்க்கெட்  A to Z ₹200
பங்குச்சந்தை அனாலிசிஸ் ₹248
📢📚⚠️
இங்கு காணப்படும் அனைத்து வலைதள பதிவுகளும் கல்வி/தகவல் நோக்கங்களுக்கானது மட்டுமே.
முதலீட்டு ஆலோசனை அல்ல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை

கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்