Advertisement

📘 பொருளடக்கம் (Click to Expand)
P.no Contents
அபங்கு சந்தை
1பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்
2முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை
3முதன்மை சந்தையில் செயல்படும் முக்கிய அமைப்புகள்
4பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய ஆய்வுகள்
5பங்கு சந்தையில் விலையை தீர்மானிக்கும் காரணிகள்
6பங்கு சந்தை வர்த்தகத்திலுள்ள கட்டணங்கள்
7பங்கு சந்தை மூலதனம் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
8பங்கு சந்தை வரலாறு - ஆரம்பம் முதல் அல்காரிதம் வரை
9கைபேசி வழியாக பங்கு சந்தை வர்த்தகம்
10OTC - பங்கு சந்தைக்கு வெளியே வர்த்தமாகும் பங்குகள்
ஆதங்கம்
11மின்னணு தங்கம் - 4 முக்கிய வகைகள் மற்றும் தளங்கள்
12மின்னணு தங்கம் - நன்மைகள் மற்றும் தீமைகள்
இமியூச்சுவல் ஃபண்ட்
13மியூச்சுவல் ஃபண்ட் - அடிப்படை மற்றும் வகைகள்
14மியூச்சுவல் ஃபண்ட் - கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்
15மியூச்சுவல் ஃபண்ட் - ஆரம்பம் முதல் ஆன்லைன் வரை
ஈகடன் பத்திரம்
16கடன் பத்திரங்கள் - அடிப்படை மற்றும் வகைகள்
உகிரிப்டோகரன்சி
17சந்தை மதிப்பில் முதல் 5 எண்ம நாணயங்கள்
18கிரிப்டோ வலைதளம் - Faucetpay வாலட் அறிமுகம்
19கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்
ஊமுதலீடு
20பங்கு சந்தை முதலீடு - புதிய முதலீட்டாளர்களுக்கானது
21முதலீட்டு வகைகள் - சிறந்த 20+ வாய்ப்புகள்
22சிறந்த குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டு திட்டங்கள்
23முதலீட்டு குறிக்கோள் - பிரிவுகள் மற்றும் SMART விதி
எடிமேட்
24டிமேட் கணக்கு - முக்கியத்துவம் மற்றும் தொடங்குதல்
ஏடிவிடண்ட்
25பங்கு சந்தை டிவிடண்ட் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
26டிவிடண்ட் பெறும் முறைகள் - பழைய மற்றும் நவீன முறை
ஐமூலதன ஆதாய வரி
27மூலதன ஆதாய வரி - வகைகள் மற்றும் தாக்கம்
ஒநிதி உயர்வு
28நிதி நிலையை மேம்படுத்துதல் & தொடர்ந்து பயணித்தல்

பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய ஆய்வுகள்

பங்கு சந்தை முதலீடு என்பது நிர்வாகம், தரம், புதிய தொழில்நுட்பம், திட்டமிடல் சார்ந்த அணுகுமுறை ஆகும். முறையான திட்டமிடல் இன்றி பங்குகளை வாங்குவது முதலீட்டை இழக்க நேரிடும்.

இது இன்றைய காலத்தில் செல்வத்தை பெருக்குவதற்கான ஒரு சிறந்த தளமாக கருதப்படுகிறது. போதிய விழிப்புணர்வு, ஆய்வுகள் இல்லாமல் செய்யும் முதலீடு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது என்பது அந்த நிறுவனத்தின் சிறு பகுதியை வாங்குவதற்கு சமம். எனவே, ஒரு உரிமையாளராக கவனிக்க வேண்டிய சில முக்கிய அடிப்படைகள்.


உருளை சதவீத வரைபடம், மனிதன் பங்கு வரைபடத்தை ஆராய்தல், தொழிற்சாலை நடைபெறும் குறும்படம், சிறிய பரிசு படம், தராசின் இடது பக்கம் நேரம் வலது பக்கம் பணம், இரண்டு கைகள் குலக்குதலுடன் மேலே டாலர் குறும்படம்.

1. நிறுவனத்தின் அடிப்படை ஆய்வு (Fundamental Analysis)

ஒரு பங்கின் விலையை விட அதன் மதிப்பு முக்கியமானது. இதை அறிய அடிப்படை ஆய்வு அவசியம்.

  • லாப தன்மை (Profitability): கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் நிகர லாபம் சீராக உயர்ந்துள்ளதா? லாபம் நிலையற்றதாக இருந்தால் அந்த நிறுவனத்தை தவிர்க்கலாம்.

  • வருவாய் வளர்ச்சி (Revenue Growth): விற்பனை ஆண்டுதோறும் உயர்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

  • கடனில்லா நிலை (Debt-to-Equity Ratio): அதிக கடன் உள்ள நிறுவனங்கள் வட்டி கட்டுவதிலேயே லாபத்தை இழக்க நேரிடும். பொதுவாக, கடன் விகிதம் 1:1 உள்ள நிறுவனங்கள் பாதுகாப்பானவை.

  • பங்கு மூலதன வருவாய் (ROE & ROCE): நிறுவனம் தனது மூலதனத்தை எவ்வளவு திறமையாக பயன்படுத்தி லாபம் ஈட்டுகிறது என்பதை இது காட்டுகிறது. இவை 15%-க்கு மேல் இருப்பது சிறப்பு.

2. மேலாண்மை மற்றும் நம்பகத்தன்மை (Management Quality)

நிறுவனத்தை நடத்துபவர்களின் நேர்மை மற்றும் தொலைநோக்கு பார்வை மிக முக்கியம்.

  • நிர்வாகிகளின் அனுபவம்: நிறுவனத்தின் சி.இ.ஓ (CEO) மற்றும் முக்கிய அதிகாரிகளின் பின்னணி என்ன? அவர்கள் மீது ஏதேனும் ஊழல் புகார்கள் உள்ளனவா? மேலும் அவர்களின் தொலைநோக்கு பார்வை.

  • பங்குதாரர்களின் பங்கு (Promoter Holding): நிறுவனத்தை உருவாக்கியவர்களே (Promoters) அதிக பங்குகளை வைத்திருப்பது நம்பிக்கையை தரும். அவர்கள் தங்கள் பங்குகளை அடமானம் (Pledge) வைத்துள்ளார்களா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.


3. சந்தை போட்டி மற்றும் துறை சார்ந்த அறிவு (Industry Analysis)

முதலீடு செய்யும் நிறுவனம் எந்த துறையை சார்ந்தது, அதில் அதற்கு இருக்கும் போட்டி என்ன?

  • தனித்துவம் (Economic Moat): அந்த நிறுவனத்திற்கு ஏதேனும் ஒரு தனித்துவமான பலம் (Brand value, Technology, or Low cost) இருக்கிறதா? போட்டியாளர்களால் எளிதில் முறியடிக்க முடியாத நிறுவனங்கள் நீண்ட காலத்திற்கு லாபம் தரும்.

  • எதிர்கால தேவை: அடுத்த 10 ஆண்டுகளில் அந்த துறையின் வளர்ச்சி எப்படி இருக்கும்? (உதாரணமாக: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அல்லது தகவல் தொழில்நுட்ப துறை).

4. மதிப்பீடு - விலை சரியானதா? (Valuation)

ஒரு நல்ல நிறுவனம் தவறான விலையில் வாங்கப்பட்டால் அது நிதி இழப்பை தரும்.

  • P/E Ratio (Price to Earnings): ஒரு பங்கு அதன் ஈட்டும் லாபத்தை விட எத்தனை மடங்கு விலையில் விற்கப்படுகிறது? துறையின் சராசரி P/E உடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

  • Intrinsic Value: பங்கின் உண்மையான மதிப்பை கணக்கிட்டு, சந்தை விலை அதைவிட குறைவாக இருக்கும்போது வாங்குவதே "Value Investing" ஆகும்.

5. டிவிடெண்ட் மற்றும் போனஸ் (Dividends)

நிறுவனம் தனது லாபத்தை பங்குதாரர்களுடன் பகிர்ந்து கொள்கிறதா? தொடர்ச்சியாக டிவிடெண்ட் வழங்கும் நிறுவனங்கள் நிலையான வருமானத்தை தரும்.


கவனிக்க வேண்டிய பொதுவான தவறுகள்

  • வதந்திகளை நம்புதல்: நண்பர்கள் அல்லது சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்பி முதலீடு செய்யாதீர்கள்.

  • கடந்த கால செயல்திறன்: ஒரு பங்கு கடந்த காலங்களில் உயர்ந்துவிட்டது என்பதற்காகவே அது இனியும் உயரும் என்று சொல்ல முடியாது. சரிவடைவதற்கும் வாய்ப்பு உண்டு.

  • ஒரே துறையில் முதலீடு செய்வதை தவிர்த்தல்:  முதலீட்டை பல துறைகளாக பிரிக்கவும் (Diversification). இது ஆபத்தை குறைக்கும்.


சில அடிப்படைகள்

  1. கல்வி மற்றும் தகவல்களை புரிந்துகொள்ளுதல்: பங்குகள் என்னவென்றும், அவற்றின் செயல்பாடு எப்படி என்பதையும் கற்றுக்கொள்வது முக்கியம்.

  2. ஆராய்தல் : வாங்க விரும்பும் நிறுவனங்களை பற்றிய தகவல்களை ஆராயுங்கள். நிறுவனத்தின் நிதி நிலை, வளர்ச்சி சாத்தியங்கள், மற்றும் நிச்சயமான செய்திகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

  3. பங்குகளை கண்காணித்தல்: வாங்கிய விரும்பும் பங்குகளை கண்காணிக்கவும். சந்தை நிலைமை மற்றும் நிறுவனத்தின் நிலவரம் அடிப்படையில் முடிவுகளை எடுத்தல்.

  4. நீண்டகால முதலீட்டை மேற்க்கொள்ளுதல்: நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்ற பங்குகள் குறித்த தகவல்களை திரட்டுதல். அவை நீண்டகால முதலீட்டிற்கு பயன்படுமா என சரிபார்த்தல்.

  5. பிரத்யேக முறைகளை கையாளுதல்::முதலில் குறைந்த முதலீடுகளில் தொடங்கி பின்னர் நிறுவனத்தின் தரவுகளை அடிப்படையாகக்கொண்டு அதிக முதலீடு செய்தல்.
பங்கு சந்தையில் வெற்றிபெற பொறுமையும், தொடர்ச்சியான கற்றலும் அவசியம். பங்குகளை வாங்குவதற்கு முன் சுயமாக ஆய்வு செய்து, நீண்ட கால நோக்கில் முதலீடு செய்தால் மட்டுமே செல்வத்தை பெருக்க முடியும். சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு அஞ்சாமல், நிறுவனத்தின் மீதான நம்பிக்கையில் உறுதியாக இருப்பது அவசியம்.

குறிப்பு: பங்கு சந்தை முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்யும் முன் உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்கவும்.

கருத்துகள்

டிமேட் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்.

ஆதார் அட்டைPAN அட்டைவங்கி கணக்கு
டிமேட் ஆண்டு பராமரிப்பு கட்டணம்
📱AMC₹300 + GST
நிறுவனம் தரகு கட்டணம் ⬇
Paytm Money ₹10/order
5paisa ₹20/order
Zerodha ₹20/order
Sharekhan 0.30%/order

Advertisement

புத்தகம் விலை ⬇
வாரன் பஃபட் பணக்கடவுள் ₹187
பணம் சில ரகசியங்கள் ₹175
ஷேர் மார்க்கெட்  A to Z ₹200
பங்குச்சந்தை அனாலிசிஸ் ₹248
📢📚⚠️
இங்கு காணப்படும் அனைத்து வலைதள பதிவுகளும் கல்வி/தகவல் நோக்கங்களுக்கானது மட்டுமே.
முதலீட்டு ஆலோசனை அல்ல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை

கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்