Advertisement

📘 பொருளடக்கம் (Click to Expand)
P.no Contents
அபங்கு சந்தை
1பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்
2முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை
3முதன்மை சந்தையில் செயல்படும் முக்கிய அமைப்புகள்
4பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய ஆய்வுகள்
5பங்கு சந்தையில் விலையை தீர்மானிக்கும் காரணிகள்
6பங்கு சந்தை வர்த்தகத்திலுள்ள கட்டணங்கள்
7பங்கு சந்தை மூலதனம் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
8பங்கு சந்தை வரலாறு - ஆரம்பம் முதல் அல்காரிதம் வரை
9கைபேசி வழியாக பங்கு சந்தை வர்த்தகம்
10OTC - பங்கு சந்தைக்கு வெளியே வர்த்தமாகும் பங்குகள்
ஆதங்கம்
11மின்னணு தங்கம் - 4 முக்கிய வகைகள் மற்றும் தளங்கள்
12மின்னணு தங்கம் - நன்மைகள் மற்றும் தீமைகள்
இமியூச்சுவல் ஃபண்ட்
13மியூச்சுவல் ஃபண்ட் - அடிப்படை மற்றும் வகைகள்
14மியூச்சுவல் ஃபண்ட் - கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்
15மியூச்சுவல் ஃபண்ட் - ஆரம்பம் முதல் ஆன்லைன் வரை
ஈகடன் பத்திரம்
16கடன் பத்திரங்கள் - அடிப்படை மற்றும் வகைகள்
உகிரிப்டோகரன்சி
17சந்தை மதிப்பில் முதல் 5 எண்ம நாணயங்கள்
18கிரிப்டோ வலைதளம் - Faucetpay வாலட் அறிமுகம்
19கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்
ஊமுதலீடு
20பங்கு சந்தை முதலீடு - புதிய முதலீட்டாளர்களுக்கானது
21முதலீட்டு வகைகள் - சிறந்த 20+ வாய்ப்புகள்
22சிறந்த குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டு திட்டங்கள்
23முதலீட்டு குறிக்கோள் - பிரிவுகள் மற்றும் SMART விதி
எடிமேட்
24டிமேட் கணக்கு - முக்கியத்துவம் மற்றும் தொடங்குதல்
ஏடிவிடண்ட்
25பங்கு சந்தை டிவிடண்ட் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
26டிவிடண்ட் பெறும் முறைகள் - பழைய மற்றும் நவீன முறை
ஐமூலதன ஆதாய வரி
27மூலதன ஆதாய வரி - வகைகள் மற்றும் தாக்கம்
ஒநிதி உயர்வு
28நிதி நிலையை மேம்படுத்துதல் & தொடர்ந்து பயணித்தல்

முதலீட்டு குறிக்கோள் - பிரிவுகள் மற்றும் SMART விதி

ஏன் முதலீடு செய்கிறீர்? எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்கிறீர்? எவ்வளவு ஆபத்தை (Risk) எதிர்கொள்ள தயாராக இருக்கிறீர்? என்பதை தீர்மானித்தல்.

முக்கியத்துவம், வகைகள், காரணிகள் மற்றும் சிறந்த திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை பற்றி காண்போம்.


பல்வேறு வகையான நோக்களுக்கான தேர்வு.

1. முதலீட்டு குறிக்கோள் என்றால் என்ன?

நிதி இலக்குகளை அடைவதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை, காலம், தேவை. இது முதலீட்டாளரின் வயது, வருமானம், சூழ்நிலை, எதிர்கால தேவைகள் மற்றும் ஆபத்தை சந்திக்கும் திறன் (Risk Tolerance) ஆகியவற்றை பொறுத்து மாறுபடும்.

உதாரணம்: 25 வயது இளைஞனின் குறிக்கோளும், 55 வயது நபரின் குறிக்கோளும் ஒன்றாக இருக்க முடியாது.

  • இளைஞனின் இலக்கு "செல்வத்தை அதிகரித்தல்" (Wealth Creation).
  • 55 வயது நபரின் இலக்கு "மூலதன பாதுகாப்பு" (Capital Preservation) மற்றும் "மாதாந்திர வருமானம்" (Monthly income).




வருவாய் (Returns)


↑

 


முதலீட்டின் முக்கோணம் (The Triangle of Investing) →△

↙
↘

பாதுகாப்பு (Risk {Safety})
பணமாக்கல் (Liquidity)


  1. பாதுகாப்பு (Safety): உங்கள் அசல் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும்?

  2. வருவாய் (Returns): முதலீட்டில் இருந்து எவ்வளவு லாபம் கிடைக்கும்?

  3. பணமாற்றம் (Liquidity): அவசர தேவைக்கு எவ்வளவு விரைவாக மாற்ற முடியும்?

2. முதலீட்டு குறிக்கோளின் முக்கிய பிரிவுகள் (Core Categories)

மூன்று முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன:

அ) மூலதன பாதுகாப்பு (Capital Preservation / Safety)

  • நோக்கம்: அசல் தொகைக்கு எந்தவித பாதிப்பும் வராமல் பாதுகாப்பது.

  • யாருக்கு ஏற்றது? ஓய்வு பெற்றவர்கள், குறுகிய கால தேவை உள்ளவர்கள் மற்றும் ஆபத்தை சந்திக்க விரும்பாதவர்கள் (No Risk Policy).

  • சொத்து வகை: வங்கி நிலையான வைப்புத்தொகை (FD), அரசு பத்திரங்கள் (Government Bonds), மற்றும் சேமிப்பு கணக்குகள்.

  • குறைபாடு: இதில் ஆபத்து (Risk) குறைவு என்பதால், வருமானமும் (Returns) குறைவாகவே இருக்கும். பல நேரங்களில் இது பணவீக்கத்தை விட குறைவான லாபத்தையே தரும்.

ஆ) வருமானம் ஈட்டுதல் (Income Generation)

  • நோக்கம்: வழக்கமான அல்லது நிலையான வருமானத்தை பெறுவது (மாதாந்திர, காலாண்டு அல்லது வருடாந்திர வருமானம்).

  • யாருக்கு ஏற்றது? கூடுதல் வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள், முதலீட்டு வருமானத்தை நம்பியிருப்பவர்கள்.

  • சொத்து வகை: லாப பங்கு (Dividend) அளிக்கும் பங்குகள், தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் (POMIS), கார்ப்பரேட் பத்திரங்கள், வாடகை தரும் சொத்துக்கள் (Real Estate).

இ) மூலதன வளர்ச்சி / செல்வத்தை அதிகரித்தல் (Capital Growth / Appreciation)

  • நோக்கம்: நீண்ட கால அடிப்படையில் பல மடங்கு அதிகரிக்க செய்தல்.

  • யாருக்கு ஏற்றது? இளம் வயதினர், நீண்ட கால இலக்குகளை தீர்மானிப்பவர்கள் (திருமணம், குழந்தைகளின் கல்வி, ஓய்வு காலம்).

  • சொத்து வகை: பங்குகள் (Equity Stocks), ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் (Mutual Funds), நிலம் மற்றும் கட்டிடம் (Real  Estate).

  • குறைபாடு: குறுகிய காலத்தில் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு (Volatility) உள்ளாகும் என்பதால் இதில் நிதி ஆபத்து (Risk) அதிகம்.


3. கால வரம்பின் அடிப்படையில் முதலீட்டு குறிக்கோள் (Investment Horizons)

கால வகை (Time Horizon)காலம் (Duration)இலக்கின் உதாரணம்சொத்து வகை
குறுகிய காலம் (Short-term)1 முதல் 3 ஆண்டுகள்கார் வாங்குவது, சுற்றுலா செல்வது, அவசரகால நிதி.FD, லிக்விட் ஃபண்டுகள் (Liquid Funds), RD.
மத்திய காலம் (Medium-term)3 முதல் 7 ஆண்டுகள்வீட்டின் முன்பணம் (Down payment), உயர்கல்வி.பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகள் (Hybrid Funds), தபால் அலுவலக மாதாந்திர திட்டம்.
நீண்ட காலம் (Long-term)7 ஆண்டுகளுக்கும் மேல்ஓய்வு கால நிதி, குழந்தைகளின் எதிர்காலம்.பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் (SIP), PPF, NPS.

4. முதலீட்டு குறிக்கோளை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள்

குறிக்கோளை உருவாக்கும் போது பின்வரும் காரணிகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

1. வயது (Age)

வயது மிக முக்கியம். நிதித்துறையில் ஒரு பொதுவான விதி உள்ளது.

100

-

உங்கள் வயது

=

பங்குகளில் முதலீடு செய்ய வேண்டிய சதவீதம்


  • எ-கா 1: உங்களுக்கு 25 வயது எனில், 100 - 25 = 75. அதாவது உங்கள் பணத்தில் 75 சதவீதத்தை அதிக லாபம் தரும் பங்குகளிலும், மீதமுள்ள 25 சதவீதத்தை பாதுகாப்பான திட்டங்களிலும் மேற்கொள்ளலாம்.

  • எ-கா 2: வயது 45 எனில் 100 - 45 = 55. 55 சதவீதத்தை பங்குளில், 45 சதவீதத்தை பாதுகாப்பான திட்டங்களில் பயன்படுத்தலாம்.

2. இடர்பாடுகளை சந்திக்கும் திறன் (Risk Tolerance)

வீழ்ச்சியை உங்களால் தாங்க முடியுமா? சந்தை 20% சரிந்தால் பதற்றமடைந்து பணத்தை எடுப்பவரா? அல்லது அதை ஒரு வாய்ப்பாக கருதி மேலும் முதலீடு செய்பவரா?

  • அதிக இடர்பாடுகளை சமாளித்தல் (Aggressive): சிறு நிறுவன பங்குகள், புதிய நிறுவனங்கள்.

  • மிதமான இடர்பாடுகளை சமாளித்தல் (Moderate): பெரு நிறுவன பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட்டுகள் (Hybrid  Funds).

  • குறைந்த இடர்பாடுகளை சமாளித்தல் (Conservative): தங்கம், வங்கி வைப்பு தொகை (FD).

3. தற்போதைய நிதி நிலைமை (Current Financial Status)

மாத வருமானம் எவ்வளவு? அத்தியாவசிய செலவுகள் மற்றும் கடன்கள் (EMI) போக எவ்வளவு மீதம் இருக்கிறது? கடன் அதிகமாக இருக்கும் போது, அதிக ஆபத்துள்ள முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

4. பணவீக்கம் (Inflation Impact)

பணவீக்கம் என்பது வாங்கும் சக்தியை குறைப்பது. இன்று 100 ரூபாய்க்கு வாங்கும் ஒரு பொருள், அடுத்த ஆண்டு 106 ரூபாய் ஆகலாம் (6% பணவீக்கம் எனில்). குறிக்கோள் எப்போதும் பணவீக்கத்தை விட அதிக வருமானம் (Inflation-beating returns) தருவதாக இருக்க வேண்டும்.


5. சொத்து வகைகள்: ஒப்பீடு (Asset Classes)

பல்வேறு முதலீட்டு வகைகள் சந்தையில் உள்ளன. அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிவது அவசியம்.


 
சொத்து வகைகள் (Asset Classes)
│



|
▼
|
▼
|
▼


பங்கு சந்தை (Equity)

|
▼
நிலையான வருமானம் (Fixed Income)

|
▼
மாற்று முதலீடுகள் (Alternatives)

|
▼

Large Cap ◀一

Mid Cap ◀一

Small Cap ◀一

பங்குகள் (Stocks)

வங்கி வைப்பு (FD/RD)

தங்கம் (Gold)

一▶ Raw Gold

一▶ Digital Gold

Equity Funds ◀一

Debt Funds ◀一

மியூச்சுவல் ஃப்ண்ட் (Mutual Funds)

PPF


நிலம் மற்றும் கட்டிடம் (Real Estate)

一▶ Residential

一▶ Commercial

|
▼
|
▼
|
▼
|
▼
|
▼

Hybrid Funds

Index Funds

NPS

Industrial

Raw Land


அ) ஈக்விட்டி (Equity / Stocks)

  • நன்மை: நீண்ட காலத்தில் மற்ற வகைகளை விட மிக அதிக வருமானம் (12% - 15%) தரக்கூடியது. செல்வம் பெருக இதுவே சிறந்த வழி.

  • தீமை: குறுகிய காலத்தில் அதிக ஏற்ற இறக்கங்கள் மற்றும் நட்டம் ஏற்படும் அபாயம் உண்டு.

ஆ) கடன் சார்ந்த திட்டங்கள் (Debt Instruments)

  • நன்மை: நிலையான வட்டி, மிக குறைந்த அபாயம், அரசின் பாதுகாப்பு (PPF, EPF போன்றவற்றுக்கு).

  • தீமை: குறைவான வருமானம் (6% - 8%). பணவீக்கத்தை எதிர்கொள்வது கடினம்.

இ) தங்கம் (Gold)

  • நன்மை: பொருளாதார நெருக்கடி மற்றும் போர் காலங்களில் தங்கத்தின் மதிப்பு உயரும். இது பணவீக்கத்திற்கு எதிரான ஒரு சிறந்த கேடயம் (Hedging).

  • தீமை: வருமானம் (வட்டி/வாடகை) கிடைக்காது. விலை உயர்வு மட்டுமே லாபம்.

ஈ) ரியல் எஸ்டேட் (Real Estate)

  • நன்மை: நிலத்தின் மதிப்பு நீண்ட காலத்தில் உயரும், வாடகை மூலம் மாதாந்திர வருமானம் கிடைக்கும்.

  • தீமை: பெரிய அளவிலான முதலீடு தேவை. அவசரத்திற்கு பணமாக மாற்றுவது கடினம் (Low Liquidity).


6. SMART முதலீட்டு இலக்குகளை உருவாக்குதல்

"நான் செல்வந்தராக வேண்டும்" என்று இருக்க கூடாது. அது SMART விதியின்படி இருப்பதை உறுதி செய்தல்.

  • S - Specific (குறிப்பிட்டதாக இருப்பது): "கார் வாங்க வேண்டும்" என்பதற்கு பதிலாக, "₹10 லட்சம் மதிப்புள்ள கார் வாங்க வேண்டும்" என்று இருப்பது.

  • M - Measurable (அளவிடக்கூடியதாக இருப்பது): இலக்கிற்கு எவ்வளவு பணம் தேவை என்பதை துல்லியமாக கணக்கிட வேண்டும்.

  • A - Achievable (அடையக்கூடியதாக இருப்பது): வருமானத்திற்குள் சாத்தியமான இலக்காக இருக்க வேண்டும். மாத வருமானம் ₹30,000 உடையவர் 2 ஆண்டுகளில் ₹50 லட்சம் சேர்க்க நினைப்பது சாத்தியமற்றது.

  • R - Realistic (யதார்த்தமானதாக இருப்பது): 50% அல்லது 100% வருமானம் வரும் என எதிர்பார்ப்பது தவறு. சராசரியாக 12% - 15% வருமானத்தை எதிர்பார்ப்பதே யதார்த்தமானது.

  • T - Time-bound (காலக்கெடு விதிக்கப்பட்டது): "5 ஆண்டுகளில் இந்த இலக்கை அடைவேன்" என்று கால அவகாசம் நிர்ணயிக்க வேண்டும்.


7. முதலீட்டு இடர் மேலாண்மை (Risk Management)

முதலீட்டில் மிக முக்கியமான விதி: "உங்கள் எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள்" (Do not put all your eggs in one basket).

இதனை தவிர்க்க அசெட் அலோகேஷன் (Asset Allocation) மற்றும் பல்வகைப்படுத்துதல் (Diversification) ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். நிதியை ஒரே பங்கிலோ அல்லது ஒரே துறையிலோ இல்லாமல், வெவ்வேறு நிறுவனங்கள், தங்கம், மற்றும் அரசு திட்டங்களில் பிரித்தல். இதன் மூலம் ஒரு துறை நட்டமடைந்தாலும், மற்றொரு துறை உங்கள் முதலீட்டை காப்பாற்றும்.


8. முதலீட்டாளர்கள் செய்யும் பொதுவான தவறுகள்

  • திட்டமிடல் இல்லாமை: குறிக்கோளை சரியாக திட்டமிடாமல் செயல்படுவது.

  • அதிவிரைவாக செல்வந்தராக ஆசைப்படுவது: போலி திட்டங்களில் (Ponzi Schemes) ஏமாந்து பணத்தை இழப்பது.

  • பின்னோக்கி பார்ப்பது (Past Performance): கடந்த ஆண்டு ஒரு பங்கு 50% லாபம் தந்தது என்பதற்காக, இந்த ஆண்டும் அது அதேபோல தரும் என்று நம்பி முதலீடு செய்வது.

  • அவசர கால நிதி (Emergency Fund) இல்லாதது: அவசர தேவைகளுக்கு முதலீட்டை பாதியிலேயே நட்டத்திற்கு விற்பது. (குறைந்தது 6 மாத செலவிற்கான பணம் அவசர நிதியாக இருக்க வேண்டும்).


ஒரு தெளிவான முதலீட்டு குறிக்கோள் என்பது கடலில் பயணம் செய்யும் கப்பலுக்கு திசைகாட்டி (Compass) போன்றது. அது உங்களை தேவையற்ற நிதி ஆபத்துகளில் இருந்து பாதுகாத்து, இலக்குகளை நோக்கி சீராக அழைத்து செல்லும்.

சிறிய தொகையாக இருந்தாலும் இன்றே, மிக இளம் வயதிலேயே தொடங்குவது (Power of Compounding) உங்களுக்கு பெரும் நன்மையை தரும்.

நிதி நிலையை ஆராய்ந்து, பிரத்யேக திட்டங்களை வகுத்து, அதன் பிறகு முதலீட்டை மேற்க்கொள்வதே சிறந்தது.

கருத்துகள்

டிமேட் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்.

ஆதார் அட்டைPAN அட்டைவங்கி கணக்கு
டிமேட் ஆண்டு பராமரிப்பு கட்டணம்
📱AMC₹300 + GST
நிறுவனம் தரகு கட்டணம் ⬇
Paytm Money ₹10/order
5paisa ₹20/order
Zerodha ₹20/order
Sharekhan 0.30%/order

Advertisement

புத்தகம் விலை ⬇
வாரன் பஃபட் பணக்கடவுள் ₹187
பணம் சில ரகசியங்கள் ₹175
ஷேர் மார்க்கெட்  A to Z ₹200
பங்குச்சந்தை அனாலிசிஸ் ₹248
📢📚⚠️
இங்கு காணப்படும் அனைத்து வலைதள பதிவுகளும் கல்வி/தகவல் நோக்கங்களுக்கானது மட்டுமே.
முதலீட்டு ஆலோசனை அல்ல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை

கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்