Advertisement

📘 பொருளடக்கம் (Click to Expand)
P.no Contents
அபங்கு சந்தை
1பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்
2முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை
3முதன்மை சந்தையில் செயல்படும் முக்கிய அமைப்புகள்
4பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய ஆய்வுகள்
5பங்கு சந்தையில் விலையை தீர்மானிக்கும் காரணிகள்
6பங்கு சந்தை வர்த்தகத்திலுள்ள கட்டணங்கள்
7பங்கு சந்தை மூலதனம் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
8பங்கு சந்தை வரலாறு - ஆரம்பம் முதல் அல்காரிதம் வரை
9கைபேசி வழியாக பங்கு சந்தை வர்த்தகம்
10OTC - பங்கு சந்தைக்கு வெளியே வர்த்தமாகும் பங்குகள்
ஆதங்கம்
11மின்னணு தங்கம் - 4 முக்கிய வகைகள் மற்றும் தளங்கள்
12மின்னணு தங்கம் - நன்மைகள் மற்றும் தீமைகள்
இமியூச்சுவல் ஃபண்ட்
13மியூச்சுவல் ஃபண்ட் - அடிப்படை மற்றும் வகைகள்
14மியூச்சுவல் ஃபண்ட் - கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்
15மியூச்சுவல் ஃபண்ட் - ஆரம்பம் முதல் ஆன்லைன் வரை
ஈகடன் பத்திரம்
16கடன் பத்திரங்கள் - அடிப்படை மற்றும் வகைகள்
உகிரிப்டோகரன்சி
17சந்தை மதிப்பில் முதல் 5 எண்ம நாணயங்கள்
18கிரிப்டோ வலைதளம் - Faucetpay வாலட் அறிமுகம்
19கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்
ஊமுதலீடு
20பங்கு சந்தை முதலீடு - புதிய முதலீட்டாளர்களுக்கானது
21முதலீட்டு வகைகள் - சிறந்த 20+ வாய்ப்புகள்
22சிறந்த குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டு திட்டங்கள்
23முதலீட்டு குறிக்கோள் - பிரிவுகள் மற்றும் SMART விதி
எடிமேட்
24டிமேட் கணக்கு - முக்கியத்துவம் மற்றும் தொடங்குதல்
ஏடிவிடண்ட்
25பங்கு சந்தை டிவிடண்ட் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
26டிவிடண்ட் பெறும் முறைகள் - பழைய மற்றும் நவீன முறை
ஐமூலதன ஆதாய வரி
27மூலதன ஆதாய வரி - வகைகள் மற்றும் தாக்கம்
ஒநிதி உயர்வு
28நிதி நிலையை மேம்படுத்துதல் & தொடர்ந்து பயணித்தல்

பங்கு சந்தையில் விலையை தீர்மானிக்கும் காரணிகள்

பங்குகளின் விலை உயர்வு அல்லது வீழ்ச்சிக்கு பல காரணிகள் அடிப்படையாக உள்ளன. அவற்றை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அக காரணிகள் (Internal Factors) மற்றும் புற காரணிகள் (External Factors).

பங்கின் விலையை தீர்மானிப்பதில் வெளிப்புற கணிப்புகளை விட, அந்த நிறுவனத்தின் உள்ளே நடக்கும் நிகழ்வுகளே மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை அக காரணிகள் (Internal Factors) என்கிறோம். முதலீட்டாளராக, நிறுவனத்தின் அடிப்படை வலிமையை அறிந்துகொள்ள இந்த காரணிகளை ஆராய்வது அவசியம்.


ஏற்ற இறக்கங்களை தீர்மானிக்கும் காரணிகள்.

பங்கு சந்தையின் அக காரணிகள் (Internal Factors)

செயல்பாடுகள், நிதி நிலைமை, மேலாண்மை முடிவுகள் எவ்வாறு பங்குகளின் விலையை பாதிக்கின்றன என்பதை காண்போம்.

1. நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் (Earnings and Profitability)

பங்கின் விலையை தீர்மானிக்கும் முதன்மை காரணி லாபம் ஈட்டும் திறன்.

  • காலாண்டு மற்றும் வருடாந்திர முடிவுகள்: ஒவ்வொரு பொது நிறுவனமும் தனது நிதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதில் வருவாய், (Revenue) நிகர லாபம் (Net Profit) அதிகரித்திருந்தால், முதலீட்டாளர்கள் அந்த பங்கை வாங்க ஆர்வம் காட்டுவார்.

  • பங்கிற்கான வருமானம் (EPS - Earnings Per Share): மொத்த லாபத்தை அதன் மொத்த பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பது EPS. இது உயரும்போது பங்கின் மதிப்பும் உயர்கிறது.

2. மேலாண்மை மற்றும் தலைமை பண்பு (Management and Leadership)

நிறுவனத்தை வழிநடத்தும் நபர்களின் நம்பகத்தன்மை மிக முக்கியமானது.

  • தலைமை மாற்றங்கள்: ஒரு திறமையான CEO பதவி விலகினாலோ அல்லது புதியவர் நியமிக்கப்பட்டாலோ அது பங்கு விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

  • நிர்வாக திறன்: தொலைநோக்கு பார்வை, முதலீடுகளை எப்படி கையாள்கிறார்கள், நெருக்கடி காலங்களில் எடுக்கும் முடிவுகள் ஆகியவை நிறுவனத்தின் மதிப்பை தீர்மானிக்கின்றன.

  • வெளிப்படைத்தன்மை: நிர்வாகம் முதலீட்டாளர்களிடம் எவ்வளவு உண்மையாக இருக்கிறது என்பது சந்தை மதிப்பை தக்கவைக்க உதவும்.

3. கடன் சுமை (Debt Levels)

ஒரு நிறுவனம் எவ்வளவு கடன் வைத்துள்ளது என்பது அதன் எதிர்கால வளர்ச்சியை தீர்மானிக்கும்.

  • கடன்-பங்கு விகிதம் (Debt-to-Equity Ratio): அதிக கடன் வைத்திருக்கும் நிறுவனங்கள், வட்டி கட்டுவதற்கே பெரும் தொகையை செலவிட வேண்டியிருக்கும். இது லாபத்தை குறைக்கும்.

  • வட்டி செலுத்தும் திறன்: வட்டி விகிதங்கள் மாறும்போது, அதிக கடன் கொண்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக சரிவை சந்திக்கின்றன.

4. புதிய தயாரிப்புகள் மற்றும் விரிவாக்கம் (New Products and Expansion)

வளர்ச்சி திட்டங்கள் அக காரணிகளில் (Internal Reasons) முக்கிய இடத்தை பிடிக்கின்றன.

  • ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D): தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் நிறுவனங்கள் (உதாரணமாக: தொழில்நுட்பத்துறை, வாகனத்துறை,) சந்தையில் ஆதிக்கம் செலுத்தும்.

  • சந்தை விரிவாக்கம்: புதிய நாடுகளில் அல்லது புதிய துறைகளில் நிறுவனம் கால்பதிக்கும்போது, அதன் எதிர்கால வருவாய் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் பங்கு விலை உயர்கிறது.

5. லாப பகிர்வு மற்றும் பங்குகளை திரும்ப பெறுதல் (Dividends and Buybacks)

நிறுவனம் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு எப்படி வழங்குகிறது என்பது முக்கியம்.

  • டிவிடெண்ட் (Dividend): லாபத்தை பங்குகளாகவோ அல்லது பணமாகவோ பிரித்து தரும்போது, அந்த பங்கின் மீது நம்பிக்கை அதிகரிக்கிறது.

  • பங்குகளை திரும்ப பெறுதல் (Share Buyback): பங்குகளை சந்தையிலிருந்து திரும்ப வாங்கும்போது, சந்தையில் பங்குகளின் எண்ணிக்கை குறையும். இது எஞ்சியிருக்கும் பங்குகளின் மதிப்பை உயர்த்தும்.

6. செயல்பாட்டு திறன் (Operational Efficiency)

செலவுகளை குறைத்து உற்பத்தியை பெருக்குவது லாப வரம்பை (Profit Margin) உயர்த்தும்.

  • செலவு கட்டுப்பாடு: தேவையற்ற செலவுகளை குறைக்கும் நிறுவனங்கள் கடினமான பொருளாதார காலங்களிலும் நிலைத்து நிற்கும்.

  • தொழில்நுட்ப பயன்பாடு: நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி திறனை மேம்படுத்துவது நீண்ட கால பலனை தரும்.


முக்கிய நிதி விகிதங்கள் (Key Financial Ratios)

முதலீட்டாளர்கள் அக காரணிகளை அளவிட சில முக்கிய விகிதங்களை பயன்படுத்துகின்றனர்:

  • P/E Ratio (Price-to-Earnings): ஒரு ரூபாய் லாபம் ஈட்ட முதலீட்டாளர்கள் எவ்வளவு பணம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை குறிக்கிறது.
  • ROE (Return on Equity): பங்குதாரர்களின் பணத்தை வைத்து நிறுவனம் எவ்வளவு சிறப்பாக லாபம் ஈட்டுகிறது என்பதை காட்டுகிறது.
  • Current Ratio: நிறுவனத்தின் குறுகிய கால கடன்களை அடைக்கும் திறனை இது விளக்குகிறது.


புற காரணிகள் (External Factors)

புற காரணிகளான போர், அரசாங்க கொள்கை அல்லது வட்டி விகிதங்கள் போன்றவை தற்காலிகமான தாக்கத்தையே ஏற்படுத்தும்.

1) பொருளாதார காரணிகள் (Economic Factors)

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை பங்கு சந்தையில் எதிரொலிக்கும்.

  • வட்டி விகிதங்கள் (Interest Rates): ரிசர்வ் வங்கி (RBI) வட்டி விகிதங்களை உயர்த்தினால், நிறுவனங்கள் வாங்கும் கடனுக்கான வட்டி அதிகமாகும். இது லாபத்தை குறைத்து, பங்கு விலையையும் குறைக்கலாம்.

  • பணவீக்கம் (Inflation): பொருட்களின் விலை உயரும்போது, மக்களின் வாங்கும் திறன் குறையும். இது நிறுவனங்களின் விற்பனையை பாதிக்கும்.

  • GDP வளர்ச்சி: நாட்டின் உற்பத்தி மற்றும் சேவை துறை வளரும்போது, சந்தையும் ஏற்றம் பெறும்.

2) உலகளாவிய நிலவரங்கள் (Global Cues)

இன்றைய உலகம் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அல்லது ஐரோப்பிய சந்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

  • அந்நிய முதலீடு (FII): வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் அதிக பணத்தை செலுத்தும்போது சந்தை உயரும்.

  • கச்சா எண்ணெய் விலை: இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால், அதன் விலை உயர்வு இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்.

3) அரசியல் மற்றும் அரசு கொள்கைகள் (Political Factors)

அரசின் முடிவுகள் மற்றும் வரி கொள்கைகள் குறிப்பிட்ட துறைகளை நேரடியாக பாதிக்கும். உதாரணமாக, ஆண்டறிக்கையில் (Budget) ஒரு குறிப்பிட்ட துறைக்கு சலுகைகள் அளிக்கப்பட்டால், அத்துறை சார்ந்த பங்குகள் உயரும்.


அக காரணிகள் வலிமையாக இருந்தால், அந்த நிறுவனம் எந்தவொரு சரிவிலிருந்தும் மீண்டு வந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டித்தரும். எனவே, பங்குகளை தேர்ந்தெடுக்கும்போது அந்த நிறுவனத்தின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை தீவிரமாக ஆராய்வது அவசியமாகும்.

சந்தை காரணிகளை கூர்ந்து கவனிப்பதன் மூலம் பங்கு சந்தையில் வெற்றிகரமான முதலீட்டாளராக மாற முடியும். எப்போதும் உங்கள் உபரி பணத்தை (Surplus Money) மட்டுமே முதலீடு செய்வது பாதுகாப்பானது.

கருத்துகள்

டிமேட் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்.

ஆதார் அட்டைPAN அட்டைவங்கி கணக்கு
டிமேட் ஆண்டு பராமரிப்பு கட்டணம்
📱AMC₹300 + GST
நிறுவனம் தரகு கட்டணம் ⬇
Paytm Money ₹10/order
5paisa ₹20/order
Zerodha ₹20/order
Sharekhan 0.30%/order

Advertisement

புத்தகம் விலை ⬇
வாரன் பஃபட் பணக்கடவுள் ₹187
பணம் சில ரகசியங்கள் ₹175
ஷேர் மார்க்கெட்  A to Z ₹200
பங்குச்சந்தை அனாலிசிஸ் ₹248
📢📚⚠️
இங்கு காணப்படும் அனைத்து வலைதள பதிவுகளும் கல்வி/தகவல் நோக்கங்களுக்கானது மட்டுமே.
முதலீட்டு ஆலோசனை அல்ல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை

கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்