Advertisement

📘 பொருளடக்கம் (Click to Expand)
P.no Contents
அபங்கு சந்தை
1பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்
2முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை
3முதன்மை சந்தையில் செயல்படும் முக்கிய அமைப்புகள்
4பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய ஆய்வுகள்
5பங்கு சந்தையில் விலையை தீர்மானிக்கும் காரணிகள்
6பங்கு சந்தை வர்த்தகத்திலுள்ள கட்டணங்கள்
7பங்கு சந்தை மூலதனம் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
8பங்கு சந்தை வரலாறு - ஆரம்பம் முதல் அல்காரிதம் வரை
9கைபேசி வழியாக பங்கு சந்தை வர்த்தகம்
10OTC - பங்கு சந்தைக்கு வெளியே வர்த்தமாகும் பங்குகள்
ஆதங்கம்
11மின்னணு தங்கம் - 4 முக்கிய வகைகள் மற்றும் தளங்கள்
12மின்னணு தங்கம் - நன்மைகள் மற்றும் தீமைகள்
இமியூச்சுவல் ஃபண்ட்
13மியூச்சுவல் ஃபண்ட் - அடிப்படை மற்றும் வகைகள்
14மியூச்சுவல் ஃபண்ட் - கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்
15மியூச்சுவல் ஃபண்ட் - ஆரம்பம் முதல் ஆன்லைன் வரை
ஈகடன் பத்திரம்
16கடன் பத்திரங்கள் - அடிப்படை மற்றும் வகைகள்
உகிரிப்டோகரன்சி
17சந்தை மதிப்பில் முதல் 5 எண்ம நாணயங்கள்
18கிரிப்டோ வலைதளம் - Faucetpay வாலட் அறிமுகம்
19கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்
ஊமுதலீடு
20பங்கு சந்தை முதலீடு - புதிய முதலீட்டாளர்களுக்கானது
21முதலீட்டு வகைகள் - சிறந்த 20+ வாய்ப்புகள்
22சிறந்த குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டு திட்டங்கள்
23முதலீட்டு குறிக்கோள் - பிரிவுகள் மற்றும் SMART விதி
எடிமேட்
24டிமேட் கணக்கு - முக்கியத்துவம் மற்றும் தொடங்குதல்
ஏடிவிடண்ட்
25பங்கு சந்தை டிவிடண்ட் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
26டிவிடண்ட் பெறும் முறைகள் - பழைய மற்றும் நவீன முறை
ஐமூலதன ஆதாய வரி
27மூலதன ஆதாய வரி - வகைகள் மற்றும் தாக்கம்
ஒநிதி உயர்வு
28நிதி நிலையை மேம்படுத்துதல் & தொடர்ந்து பயணித்தல்

மின்னணு தங்கம் - நன்மைகள் மற்றும் தீமைகள்

21-ஆம் நூற்றாண்டின் எண்முறை (Digital) புரட்சியும், இணையத்தின் அபரிமிதமான வளர்ச்சியும் முதலீடு செய்யும் முறையையே தலைகீழாக மாற்றியமைத்துள்ளது. அதன் விளைவாக உருவானதுதான் இணைய வழி தங்கம் (Online/Digital Gold).  இன்று ஒரு நபர் தன்னிடம் உள்ள கைபேசி மூலமாக, 10 ரூபாயில் தங்கத்தை வாங்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன, இதில் ஒளிந்திருக்கும் அபாயங்கள் மற்றும் தீமைகள் என்ன என்பது குறித்து காண்போம்.


சிறப்பம்சங்கள்

இணைய வழி (Online/Digital) தங்கம் என்றால் என்ன?

தங்கத்தை காகித வடிவிலோ அல்லது நகையாகவோ வாங்காமல், இணையதளம் மற்றும் கைபேசி செயலிகள் (Apps) மூலமாக எண்முறையில் (Digital Method) வாங்கும் ஒரு நவீன முதலீட்டு முறையாகும்.

ஒவ்வொரு மில்லி கிராமும் (அதற்கிணையான 24 கேரட் - 99.9% தூய்மை), ஒரு பாதுகாப்பான பெட்டகத்தில் (Secured Vault) காப்பீட்டுடன் சேமித்து வைக்கப்படுகிறது.

இந்தியாவில் இணைய வழி தங்கத்தை வழங்கும் முக்கிய நிறுவனங்கள்

மூன்று நிறுவனங்கள் இந்த திட்டத்தை வழங்கி வருகின்றன. பல்வேறு கைபேசி செயலிகள் (Google Pay, PhonePe, Paytm போன்றவை) இந்நிறுவனங்களுடன் கூட்டு வைத்தே தங்கத்தை விற்பனை செய்கின்றன:

  1. MMTC-PAMP India Pvt. Ltd. (அரசு மற்றும் சுவிட்சர்லாந்து நிறுவனத்தின் கூட்டு முயற்சி)

  2. Augmont Gold Ltd.

  3. Digital Gold India Pvt. Ltd. (SafeGold)


இணைய வழி தங்கத்தின் நன்மைகள் (Advantages of Online Gold)

பாரம்பரிய முறையில் வாங்குவதை விட இணையத்தில் (Online) வாங்குவதில் முதலீட்டாளர்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றின் முக்கியமானவை. 

1. மிக குறைந்த முதலீட்டு வரம்பு (Affordability and Low Entry Barrier)

ஒரு நகைக்கடைக்கு சென்றால், குறைந்தபட்சம் ஒரு கிராம் அல்லது அரை கிராம் தங்கமாவது வாங்க வேண்டும். அதற்கு ஆயிரக்கணக்கான ரூபாய் தேவைப்படும். ஆனால், இணைய வழி தங்கத்தின் மிகப்பெரிய நன்மையே அதன் குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு தான்.

  • 10 ரூபாயிலிருந்தே இதில் முதலீடு செய்ய முடியும்.

  • தினசரி, வாராந்திர அல்லது மாதாந்திர அடிப்படையில் மிக சிறிய தொகையில் தொடங்கலாம்.

2. பாதுகாப்பு மற்றும் காப்பீடு (Safety and Insurance)

பாதுகாப்பகங்களில் (Lockers) வைக்கப்படுவதால், ஆண்டுதோறும் தனி கட்டணம் (Locker Fees) செலுத்த வேண்டும்.

  • மிக உயர்தர பாதுகாப்பு கொண்ட பெட்டகங்களில் (Brink's அல்லது காப்பீடு செய்யப்பட்ட பெட்டகங்கள்) வைக்கப்படுகிறது.

  • இந்த தங்கத்திற்கு முழுமையான காப்பீடு (Insurance) செய்யப்பட்டுள்ளது. எனவே, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தாலும் முதலீட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை.

  • களவு குறித்த கவலை முதலீட்டாளர்களுக்கு முற்றிலும் இல்லை.

3. தரம் மற்றும் தூய்மைக்கான உத்தரவாதம் (100% Purity and Quality)

  • சர்வதேச தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் (உதாரணமாக MMTC-PAMP) விற்கும் தங்கம் 24 கேரட் தூய்மை (99.9% Pure Gold) கொண்டவை.

4. சேதார கட்டணம் மற்றும் செய்கூலி இல்லை (No Making Charges or Wastage)

வடிவம்: எண்முறையில் இருக்கும்போது மட்டுமே (Digital Only).

  • இதில் செய்கூலியோ, சேதாரமோ கிடையாது.

  • முதலீடு முழுவதும் நேரடியாக தங்கத்தின் மீது மட்டுமே மேற்க்கொள்ளப்படுகிறது.

5. எளிதான பணப்புழக்கம் மற்றும் உடனடி விற்பனை (High Liquidity)

அவசர தேவைகளுக்கு தங்க நகைகளை விற்க நினைத்தால் தாமதமாகும். அடகு வைத்தால் 10% முதல் 25% வரை நட்டமடைய வாய்ப்புண்டு

  • இணைய வழி தங்கத்தில் உடனடி பணப்புழக்கம் (High Liquidity) உள்ளது.

  • 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் எப்போது வேண்டுமானாலும் கைபேசி செயலி மூலம் சந்தை விலைக்கு விற்கலாம்.

  • விற்ற அடுத்த சில நிமிடங்களில் (Instant Selling) தொகை நேரடியாக உங்களது வங்கி கணக்கிற்கு (Bank Account) வந்துவிடும்.

6. அசல் தங்கமாக மாற்றிக்கொள்ளும் வசதி (Physical Delivery Option)

எண்முறை (Digital) வடிவில் இருக்கும் தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் தங்க நாணயமாகவோ (Gold Coins) அல்லது தங்க கட்டிகளாகவோ (Gold Bars) மாற்றிக்கொள்ள முடியும்.

  • உங்களது கணக்கில் போதிய அளவு சேர்ந்தவுடன் (உதாரணமாக 0.5 கிராம் அல்லது 1 கிராம்), அதை உங்கள் வீட்டிற்கே பெற்றுக்கொள்ளலாம். (Doorstep Delivery) இதற்கு கட்டணம் உண்டு.

7. வெளிப்படையான விலை நிர்ணயம் (Transparent Pricing)

சர்வதேச சந்தை நிலவரப்படி (Live Market Rates) வினாடிக்கு வினாடி புதுப்பிக்கப்பட்டு கொண்டே இருக்கும்.

  • நாடு முழுவதும் ஒரே மாதிரியான வெளிப்படையான விலை (Transparent Pricing).

  • சந்தையில் விலை குறையும் போது உடனடியாக கைபேசியை பார்த்து சில நொடிகளில் வாங்கிவிட முடியும்.

நன்மைபாரம்பரிய தங்கம்இணைய வழி தங்கம்
குறைந்தபட்ச முதலீடுபெரிய தொகை தேவை (குறைந்தது 1 கிராம்)வெறும் ₹10 முதல் தொடங்கலாம்
பாதுகாப்பு செலவுபாதுகாப்பு பெட்டகத்தின் கட்டணம் செலுத்த வேண்டும்இலவச பாதுகாப்பு. (ஆரம்ப காலங்களில்)
செய்கூலி / சேதாரம்10% - 25% வரை உண்டுகிடையாது
தூய்மை22 கேரட் (மாற்றங்கள் இருக்கலாம்)24 கேரட் (99.9% தூய்மை உறுதி)
விற்பனை எளிமைகடைக்கு நேரில் செல்ல வேண்டும்கைபேசி மூலம் ஒரு சொடுக்கில் (Click) விற்றுவிடலாம்

இணைய வழி தங்கத்தின் தீமைகள் (Disadvantages of Online Gold)

நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, நன்மைகள் இருந்தாலும், இதில் சில முக்கிய தீமைகளும், மறைமுக கட்டணங்களும், குறைபாடுகளும் உள்ளன.

1. அரசு அமைப்புகளின் நேரடி ஒழுங்குமுறை இல்லாமை (Lack of Official Regulation)

இந்தியாவில் பங்குகளை (Stocks) செபி (SEBI) அமைப்பும், வங்கிகளை ரிசர்வ் வங்கியும் (RBI), காப்பீட்டு துறையை ஐஆர்டிஏஐ (IRDAI) அமைப்பும் தீவிரமாக கண்காணிக்கின்றன. ஆனால், இந்த எண்முறை தங்கம் (Digital Gold) முதலீட்டு துறைக்கு முறையான, பிரத்யேகமான அரசு ஒழுங்குமுறை அமைப்பு (Regulatory Body) இல்லை.

  • தங்கம் வழங்கும் நிறுவனங்கள் தங்களுக்குள் ஒரு அறங்காவலரை (Trustee) நியமித்து செயல்பட்டாலும், செபி போன்ற வலுவான அரசு அமைப்பின் நேரடி கட்டுப்பாடு இல்லாதது ஒரு பெரிய குறையாகவே பார்க்கப்படுகிறது.

2. சரக்கு மற்றும் சேவை வரி (3% GST Impact)

வாங்கும்போது ஒவ்வொரு முறையும் 3% வரி (GST - Goods and Services Tax) செலுத்த வேண்டும்.

  • உதாரணமாக, ₹10,000-க்கு வாங்கினால், அதில் ₹300 வரி, ₹9,700 மதிப்புள்ள தங்கம் கிடைக்கும்.

  • விற்கும்போது 12.5% மூலதன ஆராய வரி (Capital Gain Tax) உண்டு. எடுத்துக்காட்டாக, ₹9,700 க்கு பெற்ற நிலையில் ₹12,000 க்கு விற்றால், லாபம் ₹2,300, வரி ₹288, கிடைக்கும் தொகை ₹11,712.

3. வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் உள்ள வித்தியாசம் (Spread / Price Gap)

3% முதல் 6% வரை வித்தியாசம் (Spread) இருக்கும்.

  • நிறுவனங்கள் தங்களின் செயல்பாட்டு கட்டணம், பெட்டக பராமரிப்பு கட்டணம் போன்றவற்றை ஈடுகட்ட இந்த விலை வித்தியாசத்தை வைக்கின்றன.

  • இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் வாங்கிய தங்கத்தை அடுத்த கணமே விற்க நினைத்தால், உங்களுக்கு 3-6% நட்டம் ஏற்படும். சந்தை விலை அந்த அளவிற்கு உயர்ந்தால் மட்டுமே நீங்கள் லாப நிலையை அடைய முடியும்.

4. பெட்டக சேமிப்பிற்கான கால வரம்பு (Limited Storage Period)

பாரம்பரிய தங்கத்தை எத்தனை தலைமுறைகள் வேண்டுமானாலும் வீட்டில் வைத்திருக்கலாம். ஆனால், இணைய வழி தங்கத்தை வாழ்நாள் முழுவதும் எண்முறை (Digital) வடிவிலேயே வைத்திருக்க முடியாது.

  • பெரும்பாலான நிறுவனங்கள் இலவசமாக பெட்டகத்தில் வைக்க 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை மட்டுமே அனுமதி அளிக்கின்றன.

  • குறிப்பிட்ட காலத்திற்கு பின், அசல் தங்கமாக (Physical Gold) மாற்றி கொள்ள வேண்டும் அல்லது அன்றைய சந்தை விலைக்கு விற்றுவிட வேண்டும். இல்லையெனில் சில நிறுவனங்கள் பராமரிப்பு கட்டணம் (Holding Charges) வசூலிக்க தொடங்கும்.

5. அசல் தங்கமாக மாற்றும்போது ஏற்படும் கூடுதல் கட்டணங்கள் (Delivery and Minting Charges)

இணைய வழியில் சேர்த்த தங்கத்தை நாணயமாகவோ அல்லது கட்டியாகவோ விநியோகம் செய்ய கோரும் போது, அது முற்றிலும் இலவசம் அல்ல.

  • தங்க நாணயத்தை உருவாக்குவதற்கான அச்சு கட்டணம் (Minting Charges) மற்றும் அதை உங்களது வீட்டிற்கு பத்திரமாக அனுப்பும் விநியோக கட்டணம் (Delivery/Delivery Insurance Charges) ஆகியவற்றை செலுத்த வேண்டும்.

  • இந்த கட்டணங்களை சேர்த்தால், அது பாரம்பரிய நகைக்கடைகளில் வாங்கும் விலைக்கு இணையாக வந்துவிடும் வாய்ப்பு உண்டு.

6. வட்டி வருமானம் எதுவும் இல்லை (No Passive Income)

தங்க நகைகளை அடகு வைப்பதன் மூலமோ அல்லது பிற வழிகளில அவசர தேவைக்கு பயன்படுத்தலாம். ஆனால், எண்முறை (Digital) தங்கம் பெட்டகத்தில் இருக்கும்போது வட்டி கிடையாது.

  • அரசாங்கத்தின் தங்கப்பத்திரங்கள் (Sovereign Gold Bonds) ஆண்டுக்கு 2.5% வட்டி தருவது போல, இதற்கு எந்தவித வட்டி வருமானமும் கிடைக்காது. தங்கத்தின் விலை உயர்ந்தால் மட்டுமே லாபம்.

7. முதலீட்டு வரம்பு (Upper Limit Restrictions)

பெரும்பாலான தளங்களில் ஒரே நாளில் அல்லது ஒரே கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் (உதாரணமாக ₹2 லட்சம்) வாங்க கட்டுப்பாடுகள் உள்ளன. பெரிய அளவில் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு இது உகந்தது அல்ல.


இணைய வழி தங்கத்தின் பிற வடிவங்கள் (Alternative Online Gold Options)

இம்மறையில் தங்கத்தின் மீது முதலீடு செய்ய இன்னும் இரண்டு மிக சிறந்த, பாதுகாப்பான மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற வழிகள் உள்ளன. அவை

1. தங்க ஈடிஎஃப் (Gold ETFs - Exchange Traded Funds)

இது பங்கு சந்தை மூலமாக வாங்கும் முறையாகும்.

  • நன்மைகள்: இதற்கு செபி (SEBI) அமைப்பின் முழுமையான ஒழுங்குமுறை உண்டு. வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. 3% வரி கிடையாது.

  • தேவை: வாங்குவதற்கு டிமேட் கணக்கு (Demat Account) இருக்க வேண்டும்.

2. இறையாண்மை தங்க பத்திரங்கள் (Sovereign Gold Bonds - SGB)

இந்திய அரசு மற்றும் மத்திய வங்கியால் (RBI) வெளியிடப்படும் பத்திரங்கள் ஆகும்.

  • நன்மைகள்: இதற்கு அரசு உத்தரவாதம் உண்டு. முதலீடு செய்யும் தொகைக்கு ஆண்டுதோறும் 2.5% வட்டி வங்கி கணக்கில் சேர்க்கப்படும். மேலும், 8 ஆண்டுகள் முதிர்வு காலம் வரை வைத்திருந்தால், கிடைக்கும் லாபத்திற்கு வருமான வரி விலக்கு (Tax Free) உண்டு. சரக்கு மற்றும் சேவை வரி (GST) கிடையாது.

  • தீமை: குறைந்தபட்சம் 1 கிராம் முதலீடு செய்ய வேண்டும். 5 முதல் 8 ஆண்டுகள் வரை பணத்தை எடுக்க முடியாது (Lock-in Period).


பாரம்பரிய தங்கம் vs இணைய வழி தங்கம் vs தங்க பத்திரங்கள் (SGB) - ஒரு ஒப்பீடு

முதலீட்டாளர்கள் தங்களுக்கு எது சிறந்தது என்பதைப புரிந்து கொள்ள இந்த ஒப்பீட்டு அட்டவணை.

செயல்முறைபாரம்பரிய தங்கம் (Physical Gold)இணைய வழி தங்கம் (Digital Gold)தங்க பத்திரங்கள் (SGB)
பாதுகாப்புகுறைவு (களவு பயம் உண்டு)அதிகம் (காப்பீடு செய்யப்பட்ட பெட்டகம்)மிக அதிகம் (அரசு உத்தரவாதம்)
கூடுதல் கட்டணங்கள்செய்கூலி, சேதாரம் உண்டுஅச்சு மற்றும் விநியோக கட்டணம் உண்டுகட்டணங்கள் இல்லை
கூடுதல் வருமானம்இல்லைஇல்லைஆண்டுக்கு 2.5% வட்டி.
வரி சலுகைஇல்லைஇல்லைமுதிர்வின் போது வரி விலக்கு உண்டு
முதலீட்டு காலம்கட்டுப்பாடுகள் இல்லை3 - 5 ஆண்டுகள் வரை மட்டுமே (இலவச பாதுகாப்பு பெட்டகம்).8 ஆண்டுகள் (5 ஆண்டுகளில் வெளியேறலாம்)
யாருக்கு ஏற்றது?நகை அணிய விரும்புவோருக்குசிறிய தொகையை சேமிப்போருக்குநீண்ட கால முதலீட்டாளர்களுக்கு

இணைய வழி தங்க முதலீட்டின் போது கவனிக்க வேண்டியவை (Crucial Tips for Investors)

இதில் முதலீடு செய்ய முடிவு செய்துவிட்டால், பின்வரும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்:

  1. நம்பகமான செயலிகளை பயன்படுத்துவது: Google Pay, PhonePe, Paytm, அல்லது அங்கீகரிக்கப்பட்ட முன்னணி பங்கு வர்த்தக செயலிகள் (Groww, Zerodha போன்றவை).

  2. பின்னணி நிறுவனத்தை சரிபார்ப்பது: வாங்கும் தங்கம் SafeGold, MMTC-PAMP அல்லது Augmont ஆகிய மூன்றில் எந்த நிறுவனத்தினுடையது என்பதை தெரிந்துகொள்ளுதல்.

  3. விற்பனை விலையை கவனிப்பது: வாங்கும் விலைக்கும், விற்கும் விலைக்கும் எவ்வளவு மாறுபாடுள்ளது என்பதை ஆய்வு செய்தல்.

  4. குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கா என தேர்ந்தெடுப்பது: 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் இதை விற்றுவிட திட்டமிடுவது அல்லது அசல் தங்கமாக மாற்றி கொள்வது. நீண்ட கால முதலீட்டிற்கு SGB அல்லது Gold ETF-களை பயன்படுத்த சிந்தித்தல்.


இணைய வழி தங்கம் (Online Gold) இன்றைய எண்முறை (Digital) யுகத்திற்கு ஏற்ற ஒரு மிக சிறந்த, எளிய மற்றும் நவீன முதலீட்டு கருவியாகும்.

பாதுகாப்பு, 100% தூய்மை, எளிய பணப்புழக்கம் மற்றும் குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ஆகியவை இதன் மிகப்பெரிய பலங்கள் ஆகும்.

சரக்கு மற்றும் சேவை வரி (GST), மூலதன ஆதாய வரி (CGT), வாங்குவதற்கும் விற்பதற்குமான விலை வித்தியாசம் (Spread/Price Gap) மற்றும் முறையான அரசு ஒழுங்குமுறை இல்லாதது ஆகியவை இதன் பயன்பாட்டை குறைக்கிறது.

கருத்துகள்

டிமேட் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்.

ஆதார் அட்டைPAN அட்டைவங்கி கணக்கு
டிமேட் ஆண்டு பராமரிப்பு கட்டணம்
📱AMC₹300 + GST
நிறுவனம் தரகு கட்டணம் ⬇
Paytm Money ₹10/order
5paisa ₹20/order
Zerodha ₹20/order
Sharekhan 0.30%/order

Advertisement

புத்தகம் விலை ⬇
வாரன் பஃபட் பணக்கடவுள் ₹187
பணம் சில ரகசியங்கள் ₹175
ஷேர் மார்க்கெட்  A to Z ₹200
பங்குச்சந்தை அனாலிசிஸ் ₹248
📢📚⚠️
இங்கு காணப்படும் அனைத்து வலைதள பதிவுகளும் கல்வி/தகவல் நோக்கங்களுக்கானது மட்டுமே.
முதலீட்டு ஆலோசனை அல்ல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை

கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்