பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்
பங்கு சந்தை (Share Market) இன்றைய நவீன பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கருதப்படுகிறது. சாதாரண மனிதன் முதல் பெரும் பணக்கார்கள் வரை அனைவரும் தங்கள் செல்வத்தை பெருக்கிக்கொள்ள உதவும் ஒரு சக்திவாய்ந்த தளம்.
எளிமையாக சொன்னால், ஒரு நிறுவனம் தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக தேவைப்படும் மூலதனத்தை பொதுமக்களிடமிருந்து திரட்டும் இடம். இதற்கு பதிலாக, அந்த நிறுவனம் தனது உரிமையின் சிறு பகுதியை (Share) முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது.
நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கும்போது, அந்த நிறுவனத்தின் ஒரு பகுதி உரிமையாளராக (Shareholder) மாறுகிறீர்கள். நிறுவனம் லாபம் ஈட்டும்போது உங்கள் பங்கின் மதிப்பு உயர்கிறது, மேலும் நிறுவனம் லாப பங்கையும் (Dividend) வழங்கக்கூடும்.
2. வகைகள்
முதல் நிலை சந்தை (Primary Market): ஒரு நிறுவனம் முதல் முறையாக தனது பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் இடம். இது 'ஐபிஓ' (Initial Public Offering - IPO) என்று அழைக்கப்படுகிறது.
இரண்டாம் நிலை சந்தை (Secondary Market): ஏற்கனவே ஐபிஓ மூலம் வெளியிடப்பட்ட பங்குகள் முதலீட்டாளர்களுக்கு இடையே கைமாறும் இடம்.
மும்பை பங்கு சந்தை (BSE - Bombay Stock Exchange): இது ஆசியாவிலேயே மிக பழமையானது. இதன் குறியீடு 'சென்செக்ஸ்' (SENSEX) என்று அழைக்கப்படுகிறது.
தேசிய பங்கு சந்தை (NSE - National Stock Exchange): இது இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் நவீனப்படுத்தப்பட்டது. இதன் குறியீடு 'நிஃப்டி' (NIFTY) ஆகும்.
3. எவ்வாறு இயங்குகிறது?
தேவை (Demand) மற்றும் வழங்கல் (Supply) ஆகியவற்றை சார்ந்தது.
ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க அதிக பேர் விரும்பினால், அதன் விலை உயரும்.
அதிக பேர் விற்க விரும்பினால், அதன் விலை குறையும்.
நிறுவனத்தின் லாபம், நாட்டின் பொருளாதாரம், அரசியல் மாற்றங்கள் மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் போன்றவை இந்த பங்கு விலை மாற்றங்களுக்கு காரணமாகின்றன.
4. முதலீடு செய்ய தேவையானவை
நேரடி பணமாக பங்குகளை வாங்க முடியாது. அதற்கு பின்வரும் கணக்குகள் அவசியம்:
பரிந்துரைக்கப்பட்ட வங்கி கணக்கு (Savings Account): பண பரிமாற்றத்திற்கு.
டிமேட் கணக்கு (Demat Account): நீங்கள் வாங்கும் பங்குகளை மின்னணு முறையில் சேமித்து வைக்க.
வர்த்தக கணக்கு (Trading Account): பங்குகளை வாங்க மற்றும் விற்க.
5. முதலீட்டு முறைகள்
முதலீட்டாளர்கள் தங்களின் கால அவகாசத்தை பொறுத்து இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறார்கள்:
வர்த்தகர் (Trader): ஒரே நாளில் அல்லது சில நாட்களில் பங்குகளை வாங்கி விற்று லாபம் பார்ப்பது. இதில் அபாயம் அதிகம்.
முதலீட்டாளர் (Investor): பங்குகளை வாங்கி பல ஆண்டுகள் (5 முதல் 10 ஆண்டுகள்) வைத்திருப்பது. இது நீண்ட கால அடிப்படையில் பெரும் செல்வத்தை உருவாக்கி தரும்.
மற்ற நிதித்துறை சார்ந்த தலைப்புகளின் தொடக்க பகுதிகள்
🪙 Goldமின்னணு முறை.💎 Mutual Fundஇயக்கம். 🛡️ Bondமுக்கிய வகைகள். 💰 Cryptoசந்தை மதிப்பு.6. நன்மைகள்
அதிக வருமானம்: வங்கி சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு நிதிகளை (FD) விட நீண்ட காலத்தில் அதிக வருமானத்தை தரக்கூடியது.
பணவீக்கத்தை வெல்லுதல்: விலைவாசி உயர்வை (Inflation) சமாளிக்கும் வகையில் உங்கள் பணத்தின் மதிப்பை இது உயர்த்துகிறது.
பகுதியளவு உரிமை: மிகச்சிறிய தொகையை கொண்டு ரிலையன்ஸ் அல்லது டாடா போன்ற மிகப்பெரிய நிறுவனங்களின் உரிமையாளராகும் வாய்ப்பு கிடைக்கிறது.
7. அபாயங்கள் (Risks)
லாபம் எவ்வளவு சாத்தியமோ, அதே அளவு நிதி இழப்புகளுக்கும் வாய்ப்பு உண்டு.
ஏற்ற இறக்கங்கள்: திடீர் உலகளாவிய பிரச்சினைகளால் சரிவடையலாம்.
தவறான தேர்வு: போதிய ஆய்வுகள் இல்லாமல் நிதி இழப்பில் இயங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்தால் பணத்தை இழக்க நேரிடும்.
8. புதிய முதலீட்டாளர்களுக்கான ஆலோசனைகள்
கல்வி: செயல்முறைகள், நிர்வாகம், அடிப்படை பகுப்பாய்வு (Fundamental Analysis) மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு (Technical Analysis) பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
பல்வகைப்படுத்துதல் (Diversification): எல்லா நிதியையும் ஒரே நிறுவனத்தில் முதலீடு செய்யாமல், வெவ்வேறு துறைகளில் (நிதி நிறுவனங்கள், வங்கி, தொழில்நுட்ப நிறுவனங்கள்) பிரித்து முதலீடு செய்தல்.
சரியான திட்டமிடல்: மற்றவர்கள் வாங்குகிறார்கள் என்பதற்காக ஒரு பங்கை வாங்க கூடாது (Herd Mentality).
முக்கிய சொற்கள்:
- Share Holder - பங்குகளை வைத்திருப்பவர்
- Balance Sheet - நிறுவனத்தின் ஆண்டு பட்டியல்
- P/E Ratio (price earning ratio) - ஆண்டு வருமானத்தை மொத்த பங்குகளால் வகுக்க கிடைப்பது
- Networth - கூட்டு (மொத்த) மதிப்பு
- Revenue - வருமானம்
- Provision - ஆபத்து கால சேமிப்பு
- Number of Shares - பங்குகளின் எண்ணிக்கை
- Demat Account - தனிநபரின் பங்குகளை மின்னணு முறையில் சேமித்து வைக்கும் பெட்டகம்
- Trading Account - வர்த்தக கணக்கு
- Bonds - கடன் பத்திரங்கள்
அடிப்படை சொற்கள் (Basics)
| ஆங்கிலம் (English) | தமிழ் | செயல்பாடு |
| Stock Market | பங்கு சந்தை | பங்குகள் வாங்கி விற்கப்படும் இடம். |
| Shares / Stocks | பங்குகள் | ஒரு நிறுவனத்தின் மூலதனத்தில் ஒரு துண்டு. (எ-கா: லட்சத்தில் ஒன்று) |
| Investor | முதலீட்டாளர் | முதலீடு செய்பவர். |
| Trader | வர்த்தகர் | பங்குகளை குறுகிய காலத்தில் வாங்கி விற்பவர். |
| Broker | தரகர் | தனிநபருக்கும் பங்கு சந்தைக்கும் இடையில் செயல்படும் நபர்/நிறுவனம். |
| Portfolio | முதலீட்டின் தொகுப்பு | (டிமேட்டில்) மாற்றமடையும் மொத்த பங்குகளின் தொகுப்பு. |
சந்தை நிலவரம் (Market Trends)
Bull Market (காளை சந்தை): பங்குகள் விலை ஏறுமுகமாக இருக்கும்போது "புல் மார்க்கெட்" என்பார்கள்.
Bear Market (கரடி சந்தை): பங்குகள் விலை இறங்குமுகமாக இருக்கும்போது "பியர் மார்க்கெட்" என்பார்கள்.
Volatility: ஏற்ற இறக்கம் (சந்தையில் விலை வேகமாக மாறுவது).
வர்த்தக சொற்கள் (Trading Terms)
IPO (Initial Public Offering): பொது பங்கு வெளியீடு (ஒரு நிறுவனம் முதன்முதலில் பங்கை விற்க வருவது).
Dividend: ஈவுத்தொகை (நிறுவனத்தின் லாபத்தில் முதலீட்டாளர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும் தொகை).
Face Value: முக மதிப்பு.
முறையான திட்டமிடல், பொறுமை மற்றும் தொடர்ச்சியான கற்றல் இருந்தால், வெற்றி பெற முடியும். உங்கள் உபரி பணத்தை (Extra savings) மட்டும் முதலீடு செய்து, நீண்ட கால நோக்கில் பயணிப்பதே சிறந்தது.
முறையாக கற்றுக்கொண்டால் வர்த்தகர் மற்றும் முதலீட்டாளர் என இரண்டு பரிமானங்களிலும் பயணிக்க முடியும்.
♦குறிப்பு : ஆரம்ப காலங்களில் வருமானத்தில் 1% மட்டுமே பங்குகளில் முதலீடு செய்யுங்கள்.♦

கருத்துகள்
கருத்துரையிடுக