Advertisement

📘 பொருளடக்கம் (Click to Expand)
P.no Contents
அபங்கு சந்தை
1பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்
2முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை
3முதன்மை சந்தையில் செயல்படும் முக்கிய அமைப்புகள்
4பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய ஆய்வுகள்
5பங்கு சந்தையில் விலையை தீர்மானிக்கும் காரணிகள்
6பங்கு சந்தை வர்த்தகத்திலுள்ள கட்டணங்கள்
7பங்கு சந்தை மூலதனம் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
8பங்கு சந்தை வரலாறு - ஆரம்பம் முதல் அல்காரிதம் வரை
9கைபேசி வழியாக பங்கு சந்தை வர்த்தகம்
10OTC - பங்கு சந்தைக்கு வெளியே வர்த்தமாகும் பங்குகள்
ஆதங்கம்
11மின்னணு தங்கம் - 4 முக்கிய வகைகள் மற்றும் தளங்கள்
12மின்னணு தங்கம் - நன்மைகள் மற்றும் தீமைகள்
இமியூச்சுவல் ஃபண்ட்
13மியூச்சுவல் ஃபண்ட் - அடிப்படை மற்றும் வகைகள்
14மியூச்சுவல் ஃபண்ட் - கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்
15மியூச்சுவல் ஃபண்ட் - ஆரம்பம் முதல் ஆன்லைன் வரை
ஈகடன் பத்திரம்
16கடன் பத்திரங்கள் - அடிப்படை மற்றும் வகைகள்
உகிரிப்டோகரன்சி
17சந்தை மதிப்பில் முதல் 5 எண்ம நாணயங்கள்
18கிரிப்டோ வலைதளம் - Faucetpay வாலட் அறிமுகம்
19கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்
ஊமுதலீடு
20பங்கு சந்தை முதலீடு - புதிய முதலீட்டாளர்களுக்கானது
21முதலீட்டு வகைகள் - சிறந்த 20+ வாய்ப்புகள்
22சிறந்த குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டு திட்டங்கள்
23முதலீட்டு குறிக்கோள் - பிரிவுகள் மற்றும் SMART விதி
எடிமேட்
24டிமேட் கணக்கு - முக்கியத்துவம் மற்றும் தொடங்குதல்
ஏடிவிடண்ட்
25பங்கு சந்தை டிவிடண்ட் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
26டிவிடண்ட் பெறும் முறைகள் - பழைய மற்றும் நவீன முறை
ஐமூலதன ஆதாய வரி
27மூலதன ஆதாய வரி - வகைகள் மற்றும் தாக்கம்
ஒநிதி உயர்வு
28நிதி நிலையை மேம்படுத்துதல் & தொடர்ந்து பயணித்தல்

மியூச்சுவல் ஃபண்ட் - அடிப்படை மற்றும் வகைகள்

முதலீடு என்று வரும்போது பங்கு சந்தை (Stock Market), தங்கம் (Gold), நிலம் (Land) என பல வழிகள் இருந்தாலும், குறைந்த தொகையில் அதிக லாபம் ஈட்டக்கூடிய ஒரு சிறந்த முதலீட்டு சாதனம் மியூச்சுவல் ஃபண்ட் (கூட்டு நிதி).

வகைகள், நன்மைகள், அபாயங்கள், எவ்வாறு முதலீடு மேற்க்கொள்வது என காணலாம்.

பங்குகள், கடன் பத்திரங்கள், இரண்டிலும் சேர்ந்த கலவை மற்றும் வரி சேமிப்பு.

1. மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?

பல முதலீட்டாளர்களிடம் இருந்து நிதியை திரட்டி, ஒரு பெரிய தொகையாக உருவாக்கி, அதை தகுதி வாய்ந்த ஒரு நிதி நிபுணரின் (Fund Manager) உதவியோடு பங்கு சந்தை, அரசு பத்திரங்கள் மற்றும் இதர நிதி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும் ஒரு கூட்டு அமைப்பாகும்.

எளிமையாக புரிந்துகொள்ள:

  • உங்களிடம் ₹100 தான் உள்ளது நீங்கள் பெரிய நிறுவனங்களின் பங்கை வாங்க விரும்புகிறீர்கள், ஆனால் அதன் விலை அதிகமாக உள்ளது. இந்த இடத்தில் மியூச்சுவல் ஃப்ண்ட்கள் உங்களுக்கு கைகொடுக்கும்.
  • நீங்கள் ₹100 மட்டும் வைத்து கொண்டு இதை சாத்தியமாக்கலாம் இதற்கு மியூச்சுவல் ஃப்ண்ட்களில் Largecap என்ற திட்டத்தை பயன்படுத்த வேண்டும்.
  • குறிப்பு: இது (SIP) மாதந்திர அடிப்படையிலானது, ஒரு முறை மட்டுமல்ல.

  • ஒரு முறை மட்டும் என்றால், (One-time or Lump sum) நிறுவனத்தை பொறுத்து குறைந்தபட்ச முதலீடு மாறுபடும்.

இதன் மூலம் கிடைக்கும் லாபம் நிகர சொத்து மதிப்பு (NAV), ஒதுக்கப்பட்ட யூனிட்கள் (Alloted Units) அடிப்படையில் பிரித்தளிக்கப்படும்.


2. மியூச்சுவல் ஃபண்ட் எவ்வாறு செயல்படுகிறது?

இவற்றின் செயல்பாட்டை நான்கு முக்கிய படிகளாக பிரிக்கலாம்.

  1. முதலீட்டாளர்கள் (Investors): சிறு மற்றும் பெரு முதலீட்டாளர்கள் உபரி பணத்தை அவர்களுக்கேற்ற திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.

  2. சொத்தை நிர்வகிக்கும் நிறுவனம் (AMC): இந்த நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளை நிர்வாகம் செய்கின்றன (SBI Mutual Fund, HDFC Mutual Fund, ICICI Prudential, Direct Mutual Funds).

  3. நிதி மேலாளர் (Fund Manager): ஒவ்வொரு திட்டத்திற்கும் தகுதி வாய்ந்த, சந்தை நிலவரங்களை நன்கு அறிந்த நிதி நிபுணர் நியமிக்கப்படுவார். இவர் எந்தெந்த சொத்துக்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்.

  4. முதலீட்டு சந்தை (Securities): திரட்டப்பட்ட நிதியை பங்குகள் (Stocks), கடன் பத்திரங்கள் (Bonds), தங்கம் போன்றவற்றில் முதலீட்டை மேற்க்கொள்கின்றனர். இதிலிருந்து கிடைக்கும் வருவாயை முதலீட்டாளர்களுக்கு திட்டத்தை பொறுத்து பிரித்தளிக்கப்படுகிறது.

NAV (Net Asset Value) என்றால் என்ன?

பங்கு சந்தையில் எப்படி ஒரு பங்கின் விலை 'Share Price' என்று அழைக்கப்படுகிறதோ, அதேபோல மியூச்சுவல் ஃபண்டில் ஒரு யூனிட்டின் (Unit) விலை NAV (Net Asset Value - நிகர சொத்து மதிப்பு) என்று அழைக்கப்படுகிறது.

NAV மதிப்பிற்கு ஏற்ப யூனிட்டுகள் ஒதுக்கப்படும்.


NAV (Net Asset Value) நிகர சொத்து மதிப்பு

=

மொத்த சொத்துக்கள் - மொத்த கடன்கள்

மொத்த பங்குகளின் எண்ணிக்கை


உதாரணம்:

கேள்வி?

₹1000 கோடி மதிப்பு கொண்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் 10 கோடி பல நிறுவனத்தின் பங்குகளை வைத்திருந்து ₹200 கோடிக்கு கடன் பெற்றிருந்தால் அவற்றின் NAV மதிப்பு என்ன?

பதில்

1000 - 200 ÷ 10 = 80

NAV = ₹80

ஒதுக்கப்படும் யூனிட்டுகள் (Units Alloted)

=

முதலீட்டு தொகை

தினசரி NAV மதிப்பு


உதாரணம்:

கேள்வி?

₹1000 (ஆயிரம் ரூபாயை) அன்றைய நாள் முடிவில் NAV ₹120 கொண்ட மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துள்ளீர்கள் எனில் ஒதுக்கப்படும் யூனிட்கள் எத்தனை?

பதில்

1000 ÷ 120 = 80

ஒதுக்கப்படும் யூனிட்கள் (Alloted Units) = 8. 33



3. மியூச்சுவல் ஃபண்டுகளின் முக்கிய வகைகள்

முதலீட்டாளர்களின் தேவைகள், இலக்குகள் மற்றும் அபாயத்தை தாங்கும் திறன் (Risk Appetite) ஆகியவற்றின் அடிப்படையில் பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதன்மையான மூன்று பிரிவுகள்.

அ) ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் (Equity Mutual Funds)

இந்த திட்டங்களில் திரட்டப்படும் நிதி முழுமையாகவோ அல்லது பெரும்பகுதியோ நிறுவனங்களின் பங்குகளில் (Stocks) முதலீடு செய்யப்படுகிறது. இதில் அபாயம் (Risk) அதிகம், அதே நேரத்தில் நீண்ட காலத்தில் அதிக லாபம் (High Returns) தருபவை.

இவை நிறுவனங்களின் சந்தை மதிப்பின் (Market Capitalization) அடிப்படையில் மேலும் பிரிக்கப்படுகின்றன:

  • பெரு நிறுவன தொகை (Large Cap Funds): இந்தியாவின் முதல் 100 பெரிய நிறுவனங்களில் (எ.கா: Reliance, TCS, HDFC Bank) செய்யப்படும் முதலீடுகள். இவை நிலையானவை, அபாயம் குறைவு.

  • நடுத்தர நிறுவன தொகை (Mid Cap Funds): நடுத்தர அளவுள்ள நிறுவனங்களில் (சந்தை வரிசையில் 101 முதல் 250 வரை உள்ளவை) செய்யப்படும் முதலீடுகள். பெரு நிறுவன தொகையை விட அதிக லாபமும், சற்றே கூடுதல் அபாயமும் கொண்டவை.

  • சிறு நிறுவன தொகை (Small Cap Funds): சிறிய மற்றும் வளரும் நிறுவனங்களில் மேற்க்கொள்ளும் முதலீடுகள். இவற்றில் அபாயம் மிக மிக அதிகம், ஆனால் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி அடையும் போது அசாத்தியமான லாபத்தை (Multi-bagger returns) கொடுப்பவை.

  • மல்டி கேப் / ஃப்ளெக்சி கேப் ஃபண்டுகள் (Multi Cap / Flexi Cap Funds): நிதி மேலாளர் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் என அனைத்திலும் கலந்து முதலீடு செய்வார். இது சீரான முதலீட்டு முறையாகும்.

  • ELSS (Equity Linked Savings Scheme): வரி சேமிப்பு திட்டமாகும். வருமான வரி சட்டம் 80C கீழ் ₹1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். இதில் 3 ஆண்டுகள் கால நிர்ணயம் (Lock-in) உண்டு.

ஆ) டெப்ட் மியூச்சுவல் ஃபண்டுகள் (Debt Mutual Funds)

அரசு பத்திரங்கள் (Government Bonds), பெரு நிறுவன கடன் பத்திரங்கள் (Corporate Bonds) மற்றும் பண சந்தை கருவிகளில் (Money Market Instruments) முதலீட்டை மேற்க்கொள்பவை.

  • இவற்றில் அபாயம் மிக குறைவு.

  • வங்கியின் வைப்பு தொகை போல நிலையான அல்லது ஓரளவிற்க்கு கணிக்கக்கூடிய வருமானத்தை அளிக்கும்.

  • குறுகிய கால தேவைகளுக்கு ஏற்றது (1 முதல் 3 ஆண்டுகள்).

இ) பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் கலந்த மியூச்சுவல் ஃபண்டுகள் (Hybrid Mutual Funds)

பங்கு சந்தை (Equity) மற்றும் கடன் பத்திரங்கள் (Debt) ஆகிய இரண்டிலும் கலந்து முதலீடு செய்தல். இவை திட்டத்தை பொறுத்து மாறுபடும்.

  • பங்குகளில் 50%, கடன் பத்திரங்களில் 50%. அல்லது 65% பங்குகளிலும், 35% கடன் பத்திரங்களிலும்

  • பாதுகாப்பு, அதே நேரத்தில் ஓரளவுக்கு நல்ல லாபம் வேண்டும் என்று நினைக்கும் மிதமான முதலீட்டாளர்களுக்கானவை (Moderate Investors).


4. மியூச்சுவல் ஃபண்டுகளின் நன்மைகள்

ஏன் மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்வு செய்ய வேண்டும்?

  • தொழில்முறை மேலாண்மை (Professional Management): பங்கு சந்தையை ஆராய நேரமோ அல்லது தரவுகளோ இல்லாத போது, நிதி நிபுணர்கள் நம் பணத்தை நிர்வகிக்கிறார்கள்.

  • பல்வகைப்படுத்துதல் (Diversification): நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்வதால், ஒரு நிறுவனம் நட்டமடைந்தாலும் மற்ற நிறுவனங்களின் லாபம் அதை சமன் செய்துவிடும். அபாயம் பெருமளவு குறைகிறது.

  • குறைந்தபட்ச முதலீடு (Low Minimum Investment): நீங்கள் வெறும் ₹100 அல்லது ₹500 கொண்டே SIP (Systematic Investment Plan) முறையில் முதலீட்டை தொடங்கலாம்.

  • பணமாக மாற்றுதல் (Liquidity): அவசர காலங்களில் 'Close-ended' திட்டங்களை தவிர மற்ற அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்தும் உங்கள் பணத்தை மிக எளிதாக எடுத்துக்கொள்ளலாம் (தொகை 1-2 நாட்களில் உங்கள் வங்கி கணக்கில் சேர்ந்திடும்).

  • அரசின் கட்டுப்பாடு (Regulation): இந்தியாவில் உள்ள அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளும் SEBI (Securities and Exchange Board of India) அமைப்பால் மிக கடுமையான விதிகளின் கீழ் கண்காணிக்கப்படுகின்றன.


5. மியூச்சுவல் ஃபண்டில் உள்ள அபாயங்கள் (Risks)

"மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை" (Mutual Fund investments are subject to market risks) சில குறிப்பு.

  • சந்தை அபாயம் (Market Risk): பங்கு சந்தை வீழ்ச்சியடையும் போது, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் NAV மதிப்போ அல்லது அதன் லாபமோ தற்காலிகமாக குறைய வாய்ப்புள்ளது.

  • வட்டி விகித அபாயம் (Interest Rate Risk): இது முக்கியமாக டெப்ட் ஃபண்டுகளை பாதிக்கும். ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மாற்றும்போது கடன் பத்திரங்களின் மதிப்பு மாறலாம்.

  • கடன் அபாயம் (Credit Risk): டெப்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்ட நிறுவனம் கடனை திருப்பி செலுத்தாமல் போனால் இந்த அபாயம் ஏற்படும்.


6. மாதாந்திர மற்றும் ஒரு முறை திட்டம்: SIP vs Lumpsum

முதலீடுமாதாந்திர திட்டம் (Systematic Investment Plan) ஒரு முறை திட்டம் (One-time or Lumpsum)
முறைமாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை சில அல்லது பல ஆண்டுகள் தொடர்வதுபெரிய தொகையை (உதாரணமாக ₹5,000) முதலீடு செய்வது.
யாருக்கு ஏற்றது?சிறிய அளவில் சேமிக்க விரும்புபவர்.உபரி தொகையை பயன்படுத்த விரும்புபவர்.
சந்தையின் தாக்கம்சந்தை ஏற்ற இறக்கங்களை சமன் செய்தல் (Rupee Cost Averaging). சந்தை கீழே இருக்கும் போது அதிக யூனிட்டுகளும் மேலே இருக்கும் போது குறைந்த யூனிட்டுகளும் கிடைக்கும்.சந்தை உச்சத்தில் இருக்கும் போது முதலீடு செய்தால் நட்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வீழ்ச்சியில் இருக்கும் போது முதலீடு செய்ய சிறந்தது.

7. கூட்டு வட்டியின் சக்தி (Power of Compounding)

மியூச்சுவல் ஃபண்டின் உண்மையான பலன் 'கூட்டு வட்டி'யில் தான் உள்ளது.

நீண்ட காலம் தொடரும் போது, உங்களின் அசல் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கும் சேர்த்து வட்டி (Return on Return) கிடைக்கும்.

எளிய கணக்கீடு:

நீங்கள் மாதம் ₹5,000 வீதம் 15% வருடாந்திர லாபம் தரும் ஃபண்டில் முதலீடு செய்கிறீர்கள் என்றால்

  • 10 ஆண்டுகளில்: செலுத்திய தொகை ₹6 லட்சம். கூட்டு வட்டியுடன் சேர்த்து அதன் மதிப்பு ~₹13.9 லட்சம்.

  • 20 ஆண்டுகளில்: செலுத்திய தொகை ₹12 லட்சம். அதன் மதிப்பு ~₹75.8 லட்சம்.

  • 30 ஆண்டுகளில்: செலுத்திய தொகை ₹18 லட்சம். அதன் மதிப்பு என்ன? என்பதை கணக்கிடுங்கள்.


8. மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

ஆயிரக்கணக்கான திட்டங்கள் சந்தையில் உள்ளன. அவற்றில் சிறந்ததை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

  1. இலக்கை நிர்ணயம் செய்தல்: எதற்காக சேமிக்கிறீர்கள்? (கல்வி, திருமணம், புதிய வீடு அல்லது ஓய்வுகாலம்).

  2. கால அளவை தீர்மானித்தல்:

    • 3 வருடத்திற்குள் -> Debt Funds.

    • 3 முதல் 5 ஆண்டுகள் -> Hybrid Funds.

    • 5 ஆண்டுகளுக்கும் மேல் -> Equity Funds.

  3. கடந்த கால செயல்பாடு (Past Performance): கடந்த 3, 5 மற்றும் 10 ஆண்டுகளில் அதன் பெஞ்ச்மார்க் (Benchmark) குறியீட்டை விடவும், மற்ற சக ஃபண்டுகளை விடவும் எவ்வளவு சீரான லாபத்தை கொடுத்துள்ளது என்பதை கவனிப்பது. (கடந்த கால லாபம் எதிர்காலத்திற்கு உத்திரவாதம் அல்ல, ஆனால் அது நிதி நிபுனரின் திறமையை காட்டும்).

  4. செலவு விகிதம் (Expense Ratio): AMC நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணம். எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அவ்வளவு நல்லது (பொதுவாக 0.5% முதல் 1.5% வரை).

  5. நிதி நிபுனரின் அனுபவம்: நிதியை நிர்வகிக்கும் நபர் இதற்கு முன்பு சந்தையின் வீழ்ச்சிகளை எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதை ஆராய வேண்டும்.


9. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மீதான வரிகள் (Taxation)

லாபத்திற்கு நாம் அரசுக்கு வரி செலுத்த வேண்டும்.

  • ஈக்விட்டி ஃபண்டுகள் (Equity Funds Tax):

    • STCG (Short Term Capital Gains): பங்குகளை வாங்கி 1 வருடத்திற்குள் விற்று லாபம் ஈட்டினால், அந்த லாபத்திற்கு வரி விதிக்கப்படும்.

    • LTCG (Long Term Capital Gains): 1 வருடத்திற்கு மேல் பங்குகளை வைத்திருந்து விற்கும்போது கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் உள்ள தொகைக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.

  • டெப்ட் ஃபண்டுகள் (Debt Funds Tax): தற்போதைய புதிய விதிகளின்படி, டெப்ட் ஃபண்டுகளின் வருமானம், தனிநபர் வருமான வரி வரம்பின் (Income Tax Slab) கீழ் சேர்க்கப்பட்டு, அதற்கேற்ப வரி விதிக்கப்படும்.


10. முதலீட்டாளர்கள் செய்யும் பொதுவான தவறுகள்

சில தவறுகளை தவிர்த்தால் நட்டமில்லாமல் லாபம் அடையலாம்.

  • பொறுமையின்மை: பங்கு சந்தை சற்று இறங்கினாலும் நட்டத்தில் வெளியேறுவது.

  • கடன் வாங்கி முதலீடு செய்தல்: கடனை தவிர்த்து, உபரி பணத்தை (Surplus Money) மட்டுமே பயன்படுத்துதல்.

  • நெருக்கடி கால நிதி (Emergency Fund) இல்லாமை: அவசர தேவைகளுக்கான தொகையை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்தல்.

  • அதிக NAV உள்ள ஃபண்டுகள் சிறந்தது என நினைப்பது: ஒரு ஃபண்டின் NAV ₹10 ஆக இருப்பதற்கும் மற்றொரு ஃபண்டின் NAV ₹100 ஆக இருப்பதற்கும், அவற்றின் தரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டிலும் வளர்ச்சி சதவீதம் ஒன்றே.


முறையான திட்டமிடல், மாதாந்திர முதலீடு (SIP), மற்றும் நீண்ட கால பொறுமை ஆகிய மூன்றும் இருந்தால், மியூச்சுவல் ஃபண்ட் மூலம் லாபம் ஈட்டுவது சாத்தியமாகும்.

கருத்துகள்

டிமேட் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்.

ஆதார் அட்டைPAN அட்டைவங்கி கணக்கு
டிமேட் ஆண்டு பராமரிப்பு கட்டணம்
📱AMC₹300 + GST
நிறுவனம் தரகு கட்டணம் ⬇
Paytm Money ₹10/order
5paisa ₹20/order
Zerodha ₹20/order
Sharekhan 0.30%/order

Advertisement

புத்தகம் விலை ⬇
வாரன் பஃபட் பணக்கடவுள் ₹187
பணம் சில ரகசியங்கள் ₹175
ஷேர் மார்க்கெட்  A to Z ₹200
பங்குச்சந்தை அனாலிசிஸ் ₹248
📢📚⚠️
இங்கு காணப்படும் அனைத்து வலைதள பதிவுகளும் கல்வி/தகவல் நோக்கங்களுக்கானது மட்டுமே.
முதலீட்டு ஆலோசனை அல்ல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை

கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்