Advertisement

📘 பொருளடக்கம் (Click to Expand)
P.no Contents
அபங்கு சந்தை
1பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்
2முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை
3முதன்மை சந்தையில் செயல்படும் முக்கிய அமைப்புகள்
4பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய ஆய்வுகள்
5பங்கு சந்தையில் விலையை தீர்மானிக்கும் காரணிகள்
6பங்கு சந்தை வர்த்தகத்திலுள்ள கட்டணங்கள்
7பங்கு சந்தை மூலதனம் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
8பங்கு சந்தை வரலாறு - ஆரம்பம் முதல் அல்காரிதம் வரை
9கைபேசி வழியாக பங்கு சந்தை வர்த்தகம்
10OTC - பங்கு சந்தைக்கு வெளியே வர்த்தமாகும் பங்குகள்
ஆதங்கம்
11மின்னணு தங்கம் - 4 முக்கிய வகைகள் மற்றும் தளங்கள்
12மின்னணு தங்கம் - நன்மைகள் மற்றும் தீமைகள்
இமியூச்சுவல் ஃபண்ட்
13மியூச்சுவல் ஃபண்ட் - அடிப்படை மற்றும் வகைகள்
14மியூச்சுவல் ஃபண்ட் - கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்
15மியூச்சுவல் ஃபண்ட் - ஆரம்பம் முதல் ஆன்லைன் வரை
ஈகடன் பத்திரம்
16கடன் பத்திரங்கள் - அடிப்படை மற்றும் வகைகள்
உகிரிப்டோகரன்சி
17சந்தை மதிப்பில் முதல் 5 எண்ம நாணயங்கள்
18கிரிப்டோ வலைதளம் - Faucetpay வாலட் அறிமுகம்
19கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்
ஊமுதலீடு
20பங்கு சந்தை முதலீடு - புதிய முதலீட்டாளர்களுக்கானது
21முதலீட்டு வகைகள் - சிறந்த 20+ வாய்ப்புகள்
22சிறந்த குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டு திட்டங்கள்
23முதலீட்டு குறிக்கோள் - பிரிவுகள் மற்றும் SMART விதி
எடிமேட்
24டிமேட் கணக்கு - முக்கியத்துவம் மற்றும் தொடங்குதல்
ஏடிவிடண்ட்
25பங்கு சந்தை டிவிடண்ட் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
26டிவிடண்ட் பெறும் முறைகள் - பழைய மற்றும் நவீன முறை
ஐமூலதன ஆதாய வரி
27மூலதன ஆதாய வரி - வகைகள் மற்றும் தாக்கம்
ஒநிதி உயர்வு
28நிதி நிலையை மேம்படுத்துதல் & தொடர்ந்து பயணித்தல்

பங்கு சந்தை முதலீடு - புதிய முதலீட்டாளர்களுக்கானது

இன்றைய பொருளாதார சூழலில், பணத்தை சேமிப்பது மட்டும் போதாது; அந்த பணத்தை பெருக்குவது அவசியம். பணத்தை பெருக்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று பங்கு சந்தை (Stock Market) முதலீடு. சரியான திட்டமிடலும், பொறுமையும் இருந்தால் நிதி நிலையை உயர்த்த கைகொடுக்கும். 

முதலீட்டு மேலாளர் மற்றும் வங்கி மேலாளர் பணத்தை மாற்றுதல், பெரிய கட்டிடங்கள், மூன்று பேர் பங்கு சந்தை ஆலோசித்தல், வட்டத்துக்குள் டாலர் மற்றும் சதவீத குறியீடு, மனிதன் நாணயங்களை அடுக்குதல், நாணயங்களின் மீது சிவப்பு நிற கொடி மற்றும் உயர்வை காட்டும் வளைந்த மேல்நோக்கிய குறியீடு.

1. பங்கு சந்தை முதலீடு என்றால் என்ன?

ஒரு நிறுவனம் தனது தொழிலை விரிவாக்கம் செய்ய தேவைப்படும் மூலதனத்தை பொதுமக்களிடம் இருந்து திரட்டுவதற்காக, தனது உரிமையை சிறு சிறு பகுதிகளாக பிரித்து விற்பனை செய்கிறது. இந்த பகுதிகளே பங்குகள் (Stocks/Shares) எனப்படுகின்றன. இந்த பங்குகளை வாங்கி கையிருப்பில் வைப்பதே சந்தை முதலீடாகும்.

  • விலைகள் நிறுவனத்தின் மொத்த சொத்துக்களை பொறுத்து மாற்றமடையும்.

  • சில வருடங்கள் கழித்து பங்கின் மதிப்பு உயர்ந்த பின்பு விற்று லாபம் ஈட்டலாம்.

(Nano cap) விலைகள் பொதுவாக ₹1 - ரூபாயிலிருந்தும் ஆரம்பமாகிறது. சில நிறுவனங்கள் ₹1 - ரூபாய்க்கு கீழும் விலையை நிர்ணயித்துள்ளன.

2. வகைப்படுத்துதல்

இரண்டு நிலைகளில் இயங்குகிறது:

  • முதன்மை சந்தை (Primary Market): நிறுவனம் முதன்முதலில் பொதுமக்களுக்கு பங்குகளை விற்பனை செய்யும் இடம். இது IPO (Initial Public Offering) என்று அழைக்கப்படுகிறது.

  • இரண்டாம் நிலை சந்தை (Secondary Market): ஏற்கனவே சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்யும் இடம்.

3. முதலீட்டை தொடங்குதல்

இந்திய சந்தையில் முதலீட்டை தொடங்குவதற்க்கு மூன்று கணக்குகள் அவசியம்:

  1. வங்கி கணக்கு (Bank Account): பண பரிவர்த்தனை செய்ய.

  2. டிமேட் கணக்கு (Demat Account): நீங்கள் வாங்கும் பங்குகளை மின்வடிவில் (Digital Form) சேமித்து வைக்க.

  3. வர்த்தக கணக்கு (Trading Account): பங்குகளை வாங்கவும் விற்கவும் பயன்படும் இடைமுகம்.

4. தேர்ந்தெடுக்கும் முறைகள்

இரண்டு முக்கிய ஆய்வு முறைகள் உள்ளன:

  • அடிப்படை ஆய்வு (Fundamental Analysis): நிறுவனத்தின் லாபம், கடன் அளவு, எதிர்கால திட்டங்கள் மற்றும் நிர்வாகத்தின் திறனை ஆய்வு செய்வது. இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சிறந்தது.

  • தொழில்நுட்ப ஆய்வு (Technical Analysis): பங்குகளின் விலை வரைபடங்களை (Charts) வைத்து, எதிர்காலத்தில் விலை உயருமா அல்லது குறையுமா என்று கணிப்பது. இது குறுகிய கால வர்த்தகர்களுக்கு (Traders) உதவும்.


5. முக்கிய சொற்கள்

  • சென்செக்ஸ் & நிஃப்டி (Sensex & Nifty): இவை சந்தையின் நிலையை உணர்த்தும் குறியீடுகள். பம்பாய் பங்கு சந்தையின் (BSE) குறியீடு சென்செக்ஸ், தேசிய பங்கு சந்தையின் (NSE) குறியீடு நிஃப்டி.

  • டிவிடெண்ட் (Dividend): நிறுவனம் ஈட்டும் லாபத்தில் குறிப்பிட்ட பகுதியை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்குவது.

  • மார்க்கெட் கேபிடலைசேஷன் (Market Cap): ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு.


அபரிமிதமான லாபத்திற்கான வாய்ப்புகள் எவ்வளவு உள்ளதோ, அதே அளவிற்கு நிதி இழப்பு அபாயங்களும் ஒளிந்துள்ளன.


நன்மைகள் (Pros)

பங்கு சந்தையில் முதலீடு செய்வது உங்கள் நிதி எதிர்காலத்தை வலுப்படுத்த பல வழிகளில் உதவுகிறது.

அ) பணவீக்கத்தை முறியடிக்கும் லாபம் (Beat Inflation)

வங்கி சேமிப்பு கணக்குகள் அல்லது வைப்பு நிதிகள் (FD) வழங்கும் வட்டியை விட, நீண்ட கால அடிப்படையில் அதிக லாபத்தை வழங்குகிறது. பணவீக்கம் (Inflation) உங்கள் பணத்தின் மதிப்பை குறைக்கும் போது, அதைவிட அதிக வளர்ச்சியை தருவது பங்குகளே.

ஆ) கூட்டு வட்டியின் பலன் (Power of Compounding)

பங்குகளில் முதலீடு செய்து, அந்த லாபத்தை மீண்டும் பயன்படுத்தும் போது 'கூட்டு வட்டி' முறை செயல்படுகிறது. இது காலப்போக்கில் ஒரு சிறிய தொகையை மிக பெரிய நிதியாக மாற்றும் வல்லமை கொண்டது.

இ) டிவிடெண்ட் மற்றும் கூடுதல் பங்குகள் (Dividend & Bonus Shares)

பங்குகளின் விலை உயர்வது மட்டுமல்லாமல், நிறுவனங்கள் தங்கள் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு 'டிவிடெண்ட்' (Dividend) ஆக பகிர்ந்தளிக்கின்றன. இது ஒரு நிலையான வருமானத்தை உருவாக்குகிறது. மேலும், நிறுவனங்கள் 'கூடுதல் பங்குகளையும்' வழங்குகின்றன.

ஈ) பணமாக்கல் (Liquidity)

மிக எளிதாக பணமாக மாற்ற முடியும். சந்தை இயங்கும் நேரத்தில், சில வினாடிகளில் பங்குகளை விற்று பணத்தை வங்கி கணக்கிற்கு 1 முதல் 2 நாட்களில் மாற்றிக்கொள்ளலாம்.

உ) உரிமையாளர் உணர்வு

நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் போது, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆகிறீர்கள். நிறுவனத்தின் வளர்ச்சியில் உங்களுக்கும் பங்கு உண்டு.


தீமைகள் மற்றும் அபாயங்கள் (Cons)

எந்தவொரு முதலீட்டிலும் சவால்கள் இல்லாமல் இருப்பதில்லை.

அ) சந்தை அபாயம் (Market Risk)

எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை. அரசியல் மாற்றங்கள், போர்ச்சூழல், வட்டி விகித மாற்றங்கள் அல்லது உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஒட்டுமொத்த சந்தையும் வீழ்ச்சியடையக்கூடும்.

ஆ) மூலதன இழப்பு (Risk of Capital Loss)

முதலீடு செய்த நிறுவனம் நிதி இழப்பை சந்தித்தால் அல்லது திவாலானால், அந்த பங்கின் விலை மிக மிக குறைந்த விலைக்கு செல்லும் அபாயம் உள்ளது. இதில் அசலின் பெரும்பகுதியை இழக்க வாய்ப்பு உண்டு.

இ) உணர்ச்சிகரமான முடிவுகள் (Emotional Decisions)

பயம் (Fear) காரணமாகவும், பேராசை (Greed) காரணமாகவும் தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். இது பல முதலீட்டாளர்களுக்கு நிதி இழப்பை தருகிறது.

ஈ) நேரமும் ஆராய்ச்சியும் (Time and Research)

சரியான பங்கை தேர்ந்தெடுப்பதற்கு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகள், மேலாண்மை மற்றும் சந்தை நிலவரங்களை ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு போதிய நேரமும் அனுபவமும் அவசியம். ஆராய்ச்சி செய்யாமல் முதலீடு செய்வது நட்டத்திற்கு வழிவகுக்கும்.

உ) கணிக்க முடியாத தன்மை (Volatility)

குறுகிய காலத்தில் பங்கின் விலை ஏன் ஏறுகிறது அல்லது ஏன் இறங்குகிறது என்று துல்லியமாக கணிப்பது சவாலானது. இந்த நிலையற்ற தன்மை புதிய முதலீட்டாளர்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தும்.


அபாயங்களை குறைப்பது

தீமைகளை தள்ளிவிட்டு, நன்மைகளை மட்டும் பெற சில உத்திகள் உள்ளன:

  1. பன்முகப்படுத்துதல் (Diversification): எல்லா நிதியையும் ஒரே நிறுவனத்தில் பயன்படுத்தாமல், ஐடி, வங்கி, உற்பத்தி என பல்வேறு துறைகளை தேர்ந்த்தெடுத்தல்.

  2. நீண்ட கால நோக்கம்: குறுகிய கால ஏற்ற இறக்கங்களை கண்டு அஞ்சாமல், 5 முதல் 10 ஆண்டுகள் வரை மேற்க்கொள்வதற்கான திட்டத்தை வகுத்தல்.

  3. SIP முறை: மொத்த நிதியையும் பயன்படுத்தாமல், மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை பிரித்து முதலீடு செய்வதன் மூலம் விலை சராசரியின் (Rupee Cost Averaging) பயனை பெறலாம்.


இதில் உள்ள நன்மைகள் தீமைகளை விட அதிகம், ஆய்வு மற்றும் தரவுகளின் அடிப்படையில் முதலீடு செய்தால் பங்கு சந்தை உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும்.

முதலீட்டை தொடங்கும் முன் ஒரு நிதி ஆலோசகரின் ஆலோசனையை பெறுவது கூடுதல் பாதுகாப்பை அளிக்கும்.

கருத்துகள்

டிமேட் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்.

ஆதார் அட்டைPAN அட்டைவங்கி கணக்கு
டிமேட் ஆண்டு பராமரிப்பு கட்டணம்
📱AMC₹300 + GST
நிறுவனம் தரகு கட்டணம் ⬇
Paytm Money ₹10/order
5paisa ₹20/order
Zerodha ₹20/order
Sharekhan 0.30%/order

Advertisement

புத்தகம் விலை ⬇
வாரன் பஃபட் பணக்கடவுள் ₹187
பணம் சில ரகசியங்கள் ₹175
ஷேர் மார்க்கெட்  A to Z ₹200
பங்குச்சந்தை அனாலிசிஸ் ₹248
📢📚⚠️
இங்கு காணப்படும் அனைத்து வலைதள பதிவுகளும் கல்வி/தகவல் நோக்கங்களுக்கானது மட்டுமே.
முதலீட்டு ஆலோசனை அல்ல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை

கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்