Advertisement

📘 பொருளடக்கம் (Click to Expand)
P.no Contents
அபங்கு சந்தை
1பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்
2முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை
3முதன்மை சந்தையில் செயல்படும் முக்கிய அமைப்புகள்
4பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய ஆய்வுகள்
5பங்கு சந்தையில் விலையை தீர்மானிக்கும் காரணிகள்
6பங்கு சந்தை வர்த்தகத்திலுள்ள கட்டணங்கள்
7பங்கு சந்தை மூலதனம் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
8பங்கு சந்தை வரலாறு - ஆரம்பம் முதல் அல்காரிதம் வரை
9கைபேசி வழியாக பங்கு சந்தை வர்த்தகம்
10OTC - பங்கு சந்தைக்கு வெளியே வர்த்தமாகும் பங்குகள்
ஆதங்கம்
11மின்னணு தங்கம் - 4 முக்கிய வகைகள் மற்றும் தளங்கள்
12மின்னணு தங்கம் - நன்மைகள் மற்றும் தீமைகள்
இமியூச்சுவல் ஃபண்ட்
13மியூச்சுவல் ஃபண்ட் - அடிப்படை மற்றும் வகைகள்
14மியூச்சுவல் ஃபண்ட் - கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்
15மியூச்சுவல் ஃபண்ட் - ஆரம்பம் முதல் ஆன்லைன் வரை
ஈகடன் பத்திரம்
16கடன் பத்திரங்கள் - அடிப்படை மற்றும் வகைகள்
உகிரிப்டோகரன்சி
17சந்தை மதிப்பில் முதல் 5 எண்ம நாணயங்கள்
18கிரிப்டோ வலைதளம் - Faucetpay வாலட் அறிமுகம்
19கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்
ஊமுதலீடு
20பங்கு சந்தை முதலீடு - புதிய முதலீட்டாளர்களுக்கானது
21முதலீட்டு வகைகள் - சிறந்த 20+ வாய்ப்புகள்
22சிறந்த குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டு திட்டங்கள்
23முதலீட்டு குறிக்கோள் - பிரிவுகள் மற்றும் SMART விதி
எடிமேட்
24டிமேட் கணக்கு - முக்கியத்துவம் மற்றும் தொடங்குதல்
ஏடிவிடண்ட்
25பங்கு சந்தை டிவிடண்ட் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
26டிவிடண்ட் பெறும் முறைகள் - பழைய மற்றும் நவீன முறை
ஐமூலதன ஆதாய வரி
27மூலதன ஆதாய வரி - வகைகள் மற்றும் தாக்கம்
ஒநிதி உயர்வு
28நிதி நிலையை மேம்படுத்துதல் & தொடர்ந்து பயணித்தல்

பங்கு சந்தை மூலதனம் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?

ஒரு நிறுவனம் தனது வணிகத்தை விரிவாக்க தேவையான நிதியை திரட்டவும், முதலீட்டாளர்கள் தங்கள் சேமிப்பை வளர்க்கவும் பங்கு சந்தை பாலமாக அமைகிறது. இங்கு 'மூலதனம்' (Capital) என்பது மிக முக்கியமான சொல்.

நிறுவனத்தின் மொத்த மதிப்பை பங்குகளின் எண்ணிக்கை, விலை ஏற்ற இறக்கங்கள் தீர்மானிக்கின்றன.


ஐந்து அடிப்படை வகை.

1. பங்கு சந்தை மூலதனம் என்றால் என்ன? (What is Stock Market Capital?)

வணிகம் செய்வதற்கு தேவைப்படும் தொகையே மூலதனம் ஆகும். பங்கு சந்தையை பொறுத்தவரை, இது சந்தை மூலதனம் (Market Capitalization) என அழைக்கப்படுகிறது.

நிறுவன பங்கின் தினசரி விலையை, வெளியிடப்பட்டுள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கையால் பெருக்கினால் கிடைப்பது.

சந்தை மூலதனம்

=

பங்கின் விலை

×

பங்குகளின் எண்ணிக்கை



2. மூலதனத்தின் வகைகள்

பல்வேறு நிலைகளில் பிரிக்கப்படுகிறது:

  • அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் (Authorized Capital): ஒரு நிறுவனம் தனது வாழ்நாளில் அதிகபட்சமாக எவ்வளவு பங்குகளை வெளியிடலாம் என்று சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட அளவு.

  • வெளியிடப்பட்ட மூலதனம் (Issued Capital): அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தில், பொதுமக்களுக்கு விற்பனைக்காக வெளியிடப்பட்ட பங்குகள்.

  • சந்தா செலுத்தப்பட்ட மூலதனம் (Subscribed Capital): வெளியிடப்பட்ட பங்குகளில், முதலீட்டாளர்கள் வாங்குவதற்கு ஒப்புக்கொண்டவை.

  • செலுத்தப்பட்ட மூலதனம் (Paid-up Capital): பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள் நிறுவனத்திற்கு செலுத்திய தொகை.


3. சந்தை மூலதனத்தின் அடிப்படையில் நிறுவனங்களின் வகைகள்

முதலீட்டாளர்கள் தங்களுக்கு பொருத்தமான பங்குகளை தேர்ந்தெடுக்க ஒரு அளவுகோலாக பயன்படுகிறது.

அ) மிக பெரு நிறுவனம் (Mega Cap):

இவை மிக பெரிய மற்றும் நிலைநிறுத்தப்பட்ட நிறுவனங்கள். ₹10  லட்சம் கோடிக்கு மேல் மூலதனத்தை கொண்டவை.

  • நிலையான வருமானம், மிக குறைந்த அபாயம்.

  • உதாரணம்: Reliance Industries Limited (RIL), Tata Consultancy Services (TCS)

ஆ) பெரு நிறுவனம் (Large Cap):

₹20 ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்பு உடையவை.

  • நிலையான வளர்ச்சி, வருமானம், குறைந்த அபாயம்.

  • உதாரணம்: HDFC Bank, Bajaj Finserv.

  • BSE பட்டியலில் உள்ள முதல் 100 இடங்கள்.

இ) நடுத்தர நிறுவனம் (Mid Cap):

₹5 ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் கோடி வரை மதிப்பு உள்ளவை.

  • வேகமாக வளரும் வாய்ப்பு, அபாயம் சற்று அதிகம்.

  • உதாரணம்: PVR Inox, Network18 Media&Investments.

  • BSE பட்டியலில் உள்ள 101 முதல் 250 இடங்கள்.

ஈ) சிறு நிறுவனம் (Small Cap):

₹5,000 கோடிக்கு குறைவான மதிப்பு.

  • அபரிமிதமான வளர்ச்சி, அதிக ஏற்ற இறக்கங்கள் மற்றும் அதிக அபாயம்.

  • உதாரணம்: Dish Tv India, Raj Television.

உ) மிக சிறு நிறுவனம் (Nano Cap):

₹5 கோடிக்கு குறைவானவை.

  • ஆரம்ப கட்ட வளர்ச்சி, மிக அதிக ஆபத்து.

  • உதாரணம்: தனிநபர், புதிய தொழில்கள்.


4. ஏன் முக்கியமானது?

  1. நிதி திரட்டல்: புதிய தொழிற்சாலைகளை தொடங்க அல்லது கடன்களை அடைக்க மூலதனத்தை பயன்படுத்துகின்றனர்.

  2. மதிப்பீடு (Valuation): நிறுவனம் எவ்வளவு பெரியது என்பதை எளிதாக தெரிந்து கொள்ள.

  3. முதலீட்டு முடிவு: ஒரு முதலீட்டாளர் தனது போர்ட்ஃபோலியோவை (Portfolio) சமமாக வைத்திருக்க இது உதவுகிறது.

  4. வட்டி இல்லை: வங்கி கடனை போல இதற்கு வட்டி கட்ட வேண்டியதில்லை.


5. தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள்

  • பொருளாதார கொள்கைகள்: வட்டி விகிதங்கள் மற்றும் அரசின் வரி விதிப்புகள்.

  • நிறுவனத்தின் லாபம்,நட்டம்: லாபம் அதிகரிக்கும் போது பங்கின் விலை உயர்ந்து, மதிப்பு கூடுதல். நட்டம் ஏற்பட்டால் மதிப்பு குறைதல்.

  • உலகளாவிய காரணிகள்: போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு முதலீடுகள்.


விலையில் நிகழும் மாற்றங்கள் சந்தை மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண்டின் முடிவில் கிடைக்கும் தரவுகள் சிறப்பாக இருந்தால் நிறுவனங்களின் மீதான நம்பிக்கை கூடுதலாக அதிகரிக்க ஆரம்பிக்கிறது.

சந்தை மூலதனங்களை அதிகளவில் திரட்டும் போது நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பயன் பெறுகிறார்கள்.


முதலீட்டாளர்களுக்கான நன்மைகள் (Advantages for Investors)

1. பணவீக்கத்தை முறியடிக்கும் வருவாய் (Beating Inflation)

நல்ல நிறுவனங்களின் பங்குகள் பணவீக்கத்தை விட அதிக வளர்ச்சியை தருவதால், வாங்கும் திறன் (Purchasing Power) பாதுகாக்கப்படுகிறது.

2. எளிதான பணப்புழக்கம் (Liquidity)

சந்தையில் பங்குகளை சில நொடிகளில் விற்று பணமாக மாற்றிக்கொள்ள முடியும்.

3. நிறுவனத்தின் உரிமையாளர்

நிறுவனத்தின் பங்கை வாங்கினால், அந்த நிறுவனத்தின் சிறு பகுதி உரிமையாளராக (Partial Owner) மாறுகிறீர்கள். நிறுவனத்தின் வளர்ச்சி, லாபத்தில் உங்களுக்கு உரிமை உண்டு.

4. குறைந்த மூலதனத்தில் முதலீடு

சில நூறு ரூபாய்களில் கூட முதலீட்டை தொடங்கலாம். இது சாமானிய மக்களும் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சியில் பங்கெடுக்க வழிவகுக்கிறது.

5. வரி சலுகைகள்

குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பங்குகளை வைத்திருந்து விற்கும்போது வரி சலுகைகள் கிடைக்கின்றன.


முதலீட்டாளர்களுக்கான தீமைகள் (Disadvantages for Investors)

1. சந்தை அபாயம் (Market Risk)

உலக பொருளாதாரம், அரசியல் மாற்றங்கள், போர் சூழல் அல்லது ஒரு நிறுவனத்தின் தவறான முடிவுகளால் பங்குகளின் விலை கடுமையாக வீழ்ச்சியடையக்கூடும். சில நேரங்களில் முதலீடு செய்த அசல் தொகையையே இழக்க நேரிடும் அபாயம் உண்டு.

2. நேரமும், ஆய்வும்

நிதிநிலை அறிக்கைகள் (Balance Sheets), லாப நட்ட கணக்குகள் (Profit or Loss), (Future Growth) எதிர்கால திட்டங்களை ஆய்வு செய்ய நேரம் தேவைப்படும். முறையான தரவுகள் இல்லாமல் முதலீட்டை செய்வது பெரும் நட்டத்திற்கு வழிவகுக்குகிறது.

3. உணர்ச்சிவசப்படுதல் (Emotional Stress)

பங்குகளின் விலையில் தினசரி ஏற்ற இறக்கங்களை பார்க்கும்போது முதலீட்டாளர்கள் பயம் அல்லது பேராசைக்கு ஆளாகலாம். சரிவின் பதற்றத்தால் பங்குகளை விற்றுவிடுவது (Panic Selling) பலருக்கு நட்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த உளவியல் அழுத்தம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

4. கூடுதல் கட்டணங்கள்

வாங்கும்போதும் விற்கும்போதும் தரகு (Brokerage), பரிவர்த்தனை வரி (STT), இதர கட்டணங்கள் (Other Charges), அரசு வரிகளை (GST) செலுத்த வேண்டும். அடிக்கடி பங்குகளை வாங்கி விற்பவர்களுக்கு இந்த கட்டணங்கள் லாபத்தை குறைக்கக்கூடும்.

5. நிறுவனத்தின் மீதான கட்டுப்பாடு இல்லாமை

பங்குகளை வைத்திருந்தாலும், அந்த நிறுவனத்தின் அன்றாட முடிவுகளில் உங்களால் தலையிட முடியாது. நிர்வாகம் எடுக்கும் தவறான முடிவுகளால் விலை சரிந்தால், அதை ஏற்றுக்கொள்வதை தவிர முதலீட்டாளருக்கு வேறு வழியில்லை.


ஒரு முதலீட்டாளராக, மூலதனத்தின் தன்மையை உணர்ந்து செயல்பட்டால், செல்வத்தை உருவாக்குவது எளிதாகும். சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்பதால், முறையான புரிதலுடன் முதலீடு செய்வது அவசியம்.

"கற்றுக்கொண்டு முதலீடு செய்" என்பது பங்கு சந்தையின் தாரக மந்திரங்களில் ஒன்று.

கருத்துகள்

டிமேட் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்.

ஆதார் அட்டைPAN அட்டைவங்கி கணக்கு
டிமேட் ஆண்டு பராமரிப்பு கட்டணம்
📱AMC₹300 + GST
நிறுவனம் தரகு கட்டணம் ⬇
Paytm Money ₹10/order
5paisa ₹20/order
Zerodha ₹20/order
Sharekhan 0.30%/order

Advertisement

புத்தகம் விலை ⬇
வாரன் பஃபட் பணக்கடவுள் ₹187
பணம் சில ரகசியங்கள் ₹175
ஷேர் மார்க்கெட்  A to Z ₹200
பங்குச்சந்தை அனாலிசிஸ் ₹248
📢📚⚠️
இங்கு காணப்படும் அனைத்து வலைதள பதிவுகளும் கல்வி/தகவல் நோக்கங்களுக்கானது மட்டுமே.
முதலீட்டு ஆலோசனை அல்ல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை

கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்