Advertisement

📘 பொருளடக்கம் (Click to Expand)
P.no Contents
அபங்கு சந்தை
1பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்
2முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை
3முதன்மை சந்தையில் செயல்படும் முக்கிய அமைப்புகள்
4பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய ஆய்வுகள்
5பங்கு சந்தையில் விலையை தீர்மானிக்கும் காரணிகள்
6பங்கு சந்தை வர்த்தகத்திலுள்ள கட்டணங்கள்
7பங்கு சந்தை மூலதனம் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
8பங்கு சந்தை வரலாறு - ஆரம்பம் முதல் அல்காரிதம் வரை
9கைபேசி வழியாக பங்கு சந்தை வர்த்தகம்
10OTC - பங்கு சந்தைக்கு வெளியே வர்த்தமாகும் பங்குகள்
ஆதங்கம்
11மின்னணு தங்கம் - 4 முக்கிய வகைகள் மற்றும் தளங்கள்
12மின்னணு தங்கம் - நன்மைகள் மற்றும் தீமைகள்
இமியூச்சுவல் ஃபண்ட்
13மியூச்சுவல் ஃபண்ட் - அடிப்படை மற்றும் வகைகள்
14மியூச்சுவல் ஃபண்ட் - கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்
15மியூச்சுவல் ஃபண்ட் - ஆரம்பம் முதல் ஆன்லைன் வரை
ஈகடன் பத்திரம்
16கடன் பத்திரங்கள் - அடிப்படை மற்றும் வகைகள்
உகிரிப்டோகரன்சி
17சந்தை மதிப்பில் முதல் 5 எண்ம நாணயங்கள்
18கிரிப்டோ வலைதளம் - Faucetpay வாலட் அறிமுகம்
19கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்
ஊமுதலீடு
20பங்கு சந்தை முதலீடு - புதிய முதலீட்டாளர்களுக்கானது
21முதலீட்டு வகைகள் - சிறந்த 20+ வாய்ப்புகள்
22சிறந்த குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டு திட்டங்கள்
23முதலீட்டு குறிக்கோள் - பிரிவுகள் மற்றும் SMART விதி
எடிமேட்
24டிமேட் கணக்கு - முக்கியத்துவம் மற்றும் தொடங்குதல்
ஏடிவிடண்ட்
25பங்கு சந்தை டிவிடண்ட் - வகைகள் மற்றும் ஏன் முக்கியம்?
26டிவிடண்ட் பெறும் முறைகள் - பழைய மற்றும் நவீன முறை
ஐமூலதன ஆதாய வரி
27மூலதன ஆதாய வரி - வகைகள் மற்றும் தாக்கம்
ஒநிதி உயர்வு
28நிதி நிலையை மேம்படுத்துதல் & தொடர்ந்து பயணித்தல்

முதலீட்டு வகைகள் - சிறந்த 20+ வாய்ப்புகள்

பங்கு சந்தையில் முதலீட்டை மேற்க்கொள்வது என்பது வெறும் பங்குகளை வாங்கி, விற்பது மட்டுமல்ல; அது ஒருவரது நிதி இலக்குகள், திறன் மற்றும் கால அவகாசத்தை பொறுத்து மாறுபடும். முதலீடுகளை பொதுவாக அதன் தன்மை, சந்தை செயல்பாடுகளின் அடிப்படையில் பல பிரிவுகளாக பிரிக்கலாம்.

குறியீட்டின் மீது மனிதன் கணிணியை பார்ப்பது, ஒரு தங்க கட்டி, டப்பாவில் நாணயம் விழுவது, வங்கியில் வைப்பு தொகை பரிமாற்றம், இரண்டு கைகள் குலுக்குவது மேலே டாலர் நாணயம், கடன் பத்திர வடிவம், இரண்டு கூடையில் இரு வேறுபட்ட பண்டங்களுடன் வியாபாரி அமர்ந்திருப்பது, பெரிய கட்டிடங்கள், பிட்காயின் படம்.

1. சந்தை மூலதனத்தின் அடிப்படையில் (Based on Market Capitalization)

நிறுவனத்தின் மொத்த பங்குகளின் மதிப்பை கொண்டு பங்குகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

  • பெரு நிறுவன பங்குகள் (Large-cap Stocks): சந்தையில் நன்கு நிலைநாட்டப்பட்ட பெரிய நிறுவனங்களின் பங்குகள். நிலையான லாபத்தை (Dividends) தரக்கூடியது. உதாரணமாக, ரிலையன்ஸ் (Reliance Industries Limited) அல்லது டிசிஎஸ் (Tata Consultancy Services) போன்ற நிறுவனங்கள்.

  • நடுத்தர நிறுவன பங்குகள் (Mid-cap Stocks): நடுத்தர அளவிலான நிறுவனங்கள். இவை பெறு நிறுவன பங்குகளை விட அதிக வளர்ச்சியை கொடுக்கக்கூடியவை, ஆனால் இடர்பாடுகளை (Risk) கொண்டது.

  • சிறு நிறுவன பங்குகள் (Small-cap Stocks): சிறிய நிறுவனங்கள். அதிக லாபம் தரும் வாய்ப்பு இருந்தாலும், சந்தை இறக்கத்தின் போது பெரும் சரிவை சந்திக்கக்கூடும்.

  • இவை மூன்றும் சேர்ந்தது பலதரப்பட்ட மூலதனமாகும் (Multi-cap).

  • (எ - கா): 35%+35%+30% = 100%. அல்லது இவற்றின் மூன்றுடன் கடன் பத்திரங்கள் சேர்த்தால். 25%+25%+25%+25% = 100%. {SEBI Rule குறைந்தபட்சம் 25% இருக்க வேண்டும் (இது பொதுவாக MFகளில் பயன்படுத்தப்படுகிறது)}.

  • குறிப்பு: சந்தை நிலவரத்திற்கு ஏற்ப லார்ஜ் கேப்பிற்கு 40%, மிட் கேப்பிற்கு 30%, ஸ்மால் கேப்பிற்கு 30% என மாற்றலாம்.

2. முதலீட்டு முறையின் அடிப்படையில் (Based on Investment Style)

  • நேரடி பங்குகள் (Direct Equity): முதலீட்டாளர் நேரடியாக ஒரு நிறுவனத்தின் பங்குகளை தாமாகவே ஆய்வு செய்து தரவுகள் அடிப்படையில் வாங்குவது. இதற்கு சந்தை பற்றிய ஆழமான அறிவு தேவை.

  • கூட்டு நிதிகள் (Mutual Funds): பங்குகளை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு இது சிறந்த வழி. நிதி மேலாளர்கள் (Fund Managers) பல முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை திரட்டி, பல்வேறு துறைகளில் முதலீட்டை மேற்க்கொள்வார்.

  • ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம் (ELSS): இது வரி சேமிப்பிற்காக பயன்படுத்தப்படும் ஒரு வகை மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். இதற்கு மூன்று ஆண்டுகள் கால நிர்ணயம் உண்டு.

3. வருமானம் மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில்

  • வளர்ச்சி பங்குகள் (Growth Stocks): இந்நிறுவனங்கள் தங்களின் மொத்த லாபத்தை நிறுவன வளர்ச்சிக்காக பயன்படுத்தும். இதனால் பங்கின் விலை வேகமாக உயரும். அதிக லாபத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஏற்றது.

  • வருமான பங்குகள் (Value/Income Stocks): லாபத்தை ஈவுத்தொகையாக (Dividend) முதலீட்டாளர்களுக்கு வழங்கும். நிலையான வருமானம் தேடுபவர்களுக்கு இது உதவும்.



4. கூட்டு நிதிகள் (Mutual Funds)

அனைவருக்கும் பங்கு சந்தையை ஆராய நேரம் இருக்காது. அத்தகையவர்களுக்காக உருவானதே கூட்டு நிதிகள். பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை திரட்டி, ஒரு நிதி மேலாளர் (Fund Manager) அதனை பல்வேறு பங்குகள் மற்றும் பத்திரங்களில் முதலீட்டை மேற்க்கொள்வார்.

  • ஈக்விட்டி ஃபண்டுகள் (Equity Funds): முழுமையாக பங்கு சந்தையில் முதலீடு செய்பவை.

  • டெப்ட் ஃபண்டுகள் (Debt Funds): முழுமையாக கடன் பத்திரங்களில் முதலீடு செய்பவை. இது ஓரளவிற்கு பாதுகாப்பானது.

  • ஹைப்ரிட் ஃபண்டுகள் (Hybrid Funds): பங்கு சந்தை, கடன் பத்திரங்கள் என இரண்டிலும் கலந்து முதலீடு செய்வது.

  • SIP (Systematic Investment Plan): மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை (உதாரணமாக ₹500) முதலீடு செய்யும் முறை. இது சராசரி விலையில் பங்குகளை வாங்க உதவுகிறது.

5. வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புகள் (Bank & Post Office Deposits)

இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு முறை இதுவாகும்.

  • நிலையான வைப்பு நிதி (Fixed Deposit - FD): ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்கு வங்கியில் செலுத்துதல். இதற்கு நிலையான வட்டி கிடைக்கும்.

  • தொடர் வைப்பு நிதி (Recurring Deposit - RD): மாதந்தோறும் சிறு தொகையை சேமிப்பது.

  • பொது வருங்கால வைப்பு நிதி (PPF): இது 15 ஆண்டுகால முதலீடு. இதற்கு வரி விலக்கு உண்டு மற்றும் அரசின் உத்தரவாதம் இருப்பதால் மிகவும் பாதுகாப்பானது.

6. தங்கம் (Gold)

பாரம்பரியமாக இந்தியர்களின் விருப்பமான தேர்வு. தங்கம் பணவீக்கத்திற்கு (Inflation) எதிரான சிறந்த பாதுகாப்பாக கருதப்படுகிறது.

  • தங்கம்: நகைகள், நாணயங்களாக வாங்குவது. இதில் செய்கூலி, சேதாரம் போன்ற இழப்புகள் உண்டு.

  • மின்னணு தங்கம் (Digital Gold): மின்வடிவில் சேமித்து வைத்தல். கைபேசி செயலிகள் மூலம் தங்கம் வாங்குவது.

  • தங்க பத்திரங்கள் (Sovereign Gold Bonds - SGB): இது அரசாங்கத்தால் வெளியிடப்படுகிறது. இதற்கு ஆண்டுக்கு 2.5% வட்டி கிடைப்பதோடு, முதிர்வு காலத்தில் அப்போதைய தங்கத்தின் விலையும் கிடைக்கும். இதற்கு சரக்கு மற்றும் சேவை வரி (GST) கிடையாது.

7. நிலம் மற்றும் கட்டிடம் (Real Estate)

நிலம், வீடு அல்லது வணிக வளாகங்களை தேர்ந்த்தெடுப்பது.

  • மனைகள் (Plots): நிலத்தை வாங்கி வைப்பது. காலப்போக்கில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர வாய்ப்புள்ளது.

  • வாடகை வருமானம்: வீடுகள் அல்லது கடைகளை வாங்கி வாடகைக்கு விடுவதன் மூலம் நிலையான மாத வருமானம் ஈட்டலாம்.

  • REITs (Real Estate Investment Trusts): மியூச்சுவல் ஃபண்ட் போல, பெரிய வணிக வளாகங்களில் சிறு தொகையை முதலீடு செய்யும் நவீன முறை.

8. அரசு மற்றும் நிறுவன கடன் பத்திரங்கள் (Bonds)

அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்களோ தங்களுக்கு தேவைப்படும் நிதியை பொதுமக்களிடம் கடனாக பெற்றுக்கொண்டு, அதற்கு ஈடாக கொடுக்கும் ஆவணமே பத்திரம் ஆகும். இதில் வட்டி விகிதம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கும்.

  • Corporate Bonds (பெரு நிறுவன பத்திரம்)::பெரு நிறுவனங்கள் இதை வெளியிடுகின்றன. AAA மதிப்பீடு செய்யப்பட்ட பத்திரங்கள் நிதி இழக்கும் ஆபத்து குறைந்தவை.
  • Government Bonds (அரசு நிறுவன பத்திரம்)::அரசு வழங்கும், இது குறைந்த ஆபத்து இருப்பதாக கருதப்படுகிறது. 
  • Municipal Bonds (மாநகராட்சி பத்திரம்): மாநில அல்லது உள்ளாட்சி நிர்வாகங்கள் வெளியிடுபவை.


மற்ற முதலீடுகள்

  • Exchange-Traded Funds, ETFs (கூட்டு வர்த்தக நிதி): பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யும், இதன் பங்குகள் (Shares) நிறுவன பங்குகளை போல செயல்படும், நிறுவன உரிமை கிடையாது.
  • Commodities (மூலப்பொருட்கள்): தங்கம், எண்ணெய், விவசாய பொருள்கள் போன்றவை. இது சந்தை ஆபத்துகளை உள்ளடக்கியது. 
  • Startups / Private Equity (புதிய நிறுவனம்/தனியார் பங்குகள்): புதிய நிறுவனங்களில் முதலீடு செய்வது, அதிக ஆபத்து கூடிய அதிக லாபம் தரக்கூடிய வாய்ப்பை உள்ளடக்கியது. 
  • Cryptocurrencies (எண்மநாணயங்கள்): கணிணி குறியீடுகளால் எழுதப்பட்டது, எண்மநாணயங்களில் முதலீடு செய்வது, மிக அதிக இலாபமும், ஆபத்தும் கொண்டது.
  • Annuities (வாழ்நாள் வருமானம்) : வாழ்நாள் வருமானத்தை உருவாக்கும் விதமாக காப்பீட்டாளர்களிடம் முதலீடு செய்யப்படுகிறது.

அடிப்படை விதிகள்

  1. இடர் மேலாண்மை (Risk Management): "எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே" என்பது முதலீட்டு விதி. பல்வேறு துறைகளில் (தங்கம், பங்குகள், ETF) பிரித்து முதலீடு செய்ய வேண்டும் (Diversification).

  2. பணவீக்கம் (Inflation): உங்கள் முதலீட்டு வருமானம் பணவீக்கத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். உதாரணமாக, பணவீக்கம் 6% ஆக இருந்து, உங்கள் முதலீடு 5% வட்டி தந்தால், உண்மையில் உங்கள் பணத்தின் மதிப்பு குறைகிறது என்று பொருள்.

  3. அவசர கால நிதி (Emergency Fund): முதலீடு செய்ய தொடங்கும் முன், அவசர கால நிதியாக குறிப்பிட்ட தொகையை கையிருப்பில் வைப்பது.

  4. காப்பீடு (Insurance): முதலீட்டிற்கு முன் போதிய மருத்துவ காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு எடுப்பது அவசியம்.

முதலீடுகளை பற்றி கற்றுக்கொள்வதற்கு சில நாட்கள் மட்டும் போதாது பல ஆண்டுகள் தேவை.

வயது, வருமானம் மற்றும் எதிர்கால தேவைகளை கணக்கில் கொண்டு முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.


முதலீட்டு பயணத்தை தொடங்கும் முன், உங்கள் நிதி இலக்குகளை தீர்மானித்து, முறையான நிதி ஆலோசகரின் ஆலோசனையை பெறுவது சிறந்தது. சிறிய தொகையிலிருந்து (SIP முறை) முதலீட்டை தொடங்குவது ஆரம்ப கால முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பானதாகும்.

கருத்துகள்

டிமேட் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்.

ஆதார் அட்டைPAN அட்டைவங்கி கணக்கு
டிமேட் ஆண்டு பராமரிப்பு கட்டணம்
📱AMC₹300 + GST
நிறுவனம் தரகு கட்டணம் ⬇
Paytm Money ₹10/order
5paisa ₹20/order
Zerodha ₹20/order
Sharekhan 0.30%/order

Advertisement

புத்தகம் விலை ⬇
வாரன் பஃபட் பணக்கடவுள் ₹187
பணம் சில ரகசியங்கள் ₹175
ஷேர் மார்க்கெட்  A to Z ₹200
பங்குச்சந்தை அனாலிசிஸ் ₹248
📢📚⚠️
இங்கு காணப்படும் அனைத்து வலைதள பதிவுகளும் கல்வி/தகவல் நோக்கங்களுக்கானது மட்டுமே.
முதலீட்டு ஆலோசனை அல்ல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்கு சந்தை அடிப்படை மற்றும் முக்கிய சொற்கள்

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை - அடிப்படை

கிரிப்டோ வலைதளம் - Viefaucet அறிமுகம்